Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - கலாபக் காதலா - 04 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - கலாபக் காதலா - 04 - சசிரேகா

kalaba Kathala

திருநெல்வேலியில் உள்ள முராரியின் வீட்டில்

சில நொடிகள் அங்கு பலத்த மௌனம், யாரும் வெளியே பேசிக்கொள்ளாமல் உள்ளுக்குள் ஆயிரம் கேள்விகள் கேட்டுக் கொண்டு அதற்கு அவர்களுக்கு தோன்றிய பதிலும் சொல்லிக் கொண்டார்கள்.

ராதாவோ மீண்டும் இருவரையும் பார்த்தாள். இருவருமே சந்தன நிறத்தில், ஒரே மாதிரியான முக அமைப்பு இருந்தாலும், கோவிந்த் மீசை தாடியை ட்ரிம் செய்து ஏற்கனவே பழகியவன் போல இயல்பான சிரிப்புடன் ஜாக்கிங் ட்ரஸில் வடக்கத்திய சினிமா ஹீரோ போல இருந்தான், முராரியோ முறுக்கு மீசையை வைத்துக் கொண்டு, வெள்ளை வேட்டி சட்டை அணிந்து கொண்டு கோபமாக ராதாவை பார்த்து முறைத்தபடி நின்றிருந்தான்.

ராதாவிற்கு இப்போது பயமே வந்தது. அவள் பேச நினைப்பதற்குள் முராரியோ கோபமாக அவளை முறைத்துவிட்டு

”என்னை நீ ஏமாத்திட்ட ராதா” என சொல்ல கோவிந்தோ

”ராதாவா இவள் பேரு தாரா, என் கேர்ள் ப்ரெண்ட் புரியுதா” என முராரியிடம் சொல்ல ராதாவிற்கு மெல்ல மெல்ல உண்மை புரிந்தது. அவள் நிம்மதியாகி கோவிந்திடம் உண்மையை சொல்ல எண்ணி அவன் பக்கம் திரும்பினாள். அவள் அப்படி திரும்பவும் முராரியின் மனது உடைந்தே போனது. கோபத்துடன் அவ்விடம் விட்டு வேகமாக நடந்து வீட்டை விட்டு வெளியேறிச் சென்றான். அவன் கோபத்துடன் செல்லவும் அதைக் கண்ட ராதாவோ அவனை பின்தொடர எண்ணி வெளியே செல்ல முயல கோவிந்த் அவளது கையை இறுக்கமாகப் பிடித்தான்

”தாரா எங்கப் போற வா இப்படி” என இழுக்க அவளோ

”என்னை விடுங்க நான் போகனும்” என சொல்ல

”என்னாச்சி உனக்கு, முராரி கத்தினதை நினைச்சி பயப்படறியா, அவனை விட்டுத்தள்ளு நீ வா தாரா” என அழைக்க சட்டென அவனிடம் இருந்து விலகி நின்றாள் ராதா

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

”என்னாச்சி தாரா ஏன் இப்படி நடந்துக்கற” என கேட்ட கோவிந்திடம் இரு கைகளையும் கூப்பி நின்று பேசலானாள்

”என் பேரு ராதா, என் அக்கா பேருதான் தாரா, நான் உங்களைத் தேடி வரலை, நான் தேவியை தேடி வந்தேன்” என சொல்ல ஒரு நிமிடம் அதிர்ந்தவன் பின்பு சிரித்தான்

”ஓ போன்ல பஜனை பாட்டு பாடினியே நீதானா அது” என இளக்காரமாகச் சொல்ல

”ஆமாம் அது நான்தான், தேவியை பார்க்க நான் வந்தேன்”

”ஓ அப்படியா ஆமா தாரா உன்னோட அக்காவா”

“ஆமாம்”

“அவள் வரலையா”

“அக்கா ஓட்டல்ல ரெஸ்ட் எடுக்கறாங்க, நான் தேவியை தேடி வந்தேன்” என சொல்ல அவளது மிரட்சியான கண்களையும், அவளது பணிவான பேச்சையும், அழகான குரலில் பாடிய பாடலும், அழகோவியம் போல நின்றவளை வெகுவாக பிடித்துவிட்டது கோவிந்தனுக்கு”

“சாரி நான்தான் உன்னை தாரான்னு நினைச்சிட்டேன், வா வந்து உட்காரு வா” என அழைக்க

”இல்ல நான் போறேன்”

“எங்க போற, தேவி கோயிலுக்கு போயிருக்கா, நானும் அங்கதான் போறேன், வாயேன் உன்னையும் கூட்டிட்டு போறேன்” என சொல்ல

”இல்லை நான் அக்காகிட்ட போறேன்”

“ஓ சரி இரு நானும் உன் கூட வரேன், இங்கயே உட்காரு”

”இல்லை நான் இப்பவே போறேன்” என்றாள் பதட்டமாக, அவளது பதட்டத்தைக் கண்ட கோவிந்தோ அவளது தோளில் கையை வைக்க அவள் கூச்சத்தில் விலகி நிற்கவும் அதைக் கண்டுச் சிரித்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "காணாய் கண்ணே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

”நீ ரொம்ப அழகா பாடற, அழகாவும் இருக்க, ஏன் பயப்படற ரிலாக்ஸ் ராதா” என அவன் அமைதியாக சொல்ல அவளோ

”நான் கிளம்பறேன்” என சொல்லிவிட்டு அவசரமாக தனது செல்போனை தேடி எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி முராரியை தேடி விரைந்தாள். அவள் சென்றதும் தனக்குத்தானே சிரித்துக் கொண்டான் கோவிந்த்

”வாவ் ராதாவே இவ்ளோ அழகா ஸ்வீட்டா இருந்தா, அப்ப தாராவும் க்யூட்டாதான் இருப்பா, அப்ப தாரா ஓட்டல்ல இருக்காளா ஓகே நான் போய் அவளைப் பார்க்கனும், இப்பவே ரெடியாகறேன்” என நினைத்தபடியே தனது அறையை நோக்கி விரைவாகச் சென்றான்.

வீட்டை விட்டு வெளியே வந்த ராதாவோ சுற்றி முற்றிப் பார்த்தாள். எங்கும் முராரி இல்லை வெளி கேட் திறந்திருப்பதைக் கண்டு வேகமாக கேட்டை நோக்கி ஓடி. தெருவிற்கு வந்து சுற்றி முற்றும் பார்க்க தூரத்தில் தெருமுனையில் வேகமாக நடந்தபடியே சென்றுக் கொண்டிருந்த முராரி தெரியவும் அவனைக் கண்ட சந்தோஷத்தில் ஆசையாக ஓட்டமும் நடையுமாக அவனிடம் சென்றாள்.

முராரியோ வீட்டை விட்டு வெளியே வந்து பார்க்க, அங்கு கார் இல்லாமல் போகவே கோபத்துடன் தெருவில் இறங்கி நடந்துக் கொண்டே மனதுக்குள்

About the Author

Sasirekha

Sasirekha

Sasirekha's Popular stories in Chillzee KiMo

  • Edhetho ennam valarthenEdhetho ennam valarthen
  • Enaiyaalum kadhal desam nee thaanEnaiyaalum kadhal desam nee thaan
  • En mel undranukkethanai anbadiEn mel undranukkethanai anbadi
  • Ilaiya manathu inaiyum pozhuthuIlaiya manathu inaiyum pozhuthu
  • Ullathal unnai nerungugirenUllathal unnai nerungugiren
  • Maasilla unmai kadhaleMaasilla unmai kadhale
  • Unnai kaanaathu urugum nodi neramUnnai kaanaathu urugum nodi neram
  • Vannam konda vennilave vaanam vittu vaaraayoVannam konda vennilave vaanam vittu vaaraayo

Completed Stories
On-going Stories

Add comment

Comments  
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 04 - சசிரேகாvijayalakshmi 2019-02-02 16:13
nice epi radhavum muraiyum varra scene ellam super good :cool:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 04 - சசிரேகாராணி 2019-02-02 16:08
கதை நன்றாக செல்கிறது முராரியும் ராதையும் அற்புதமான ஜோடி :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கலாபக் காதலா - 04 - சசிரேகாsasi 2019-02-02 15:56
மகி மேம்க்கு :dance: ஸ்பெஷல் நன்றி கமெண்ட் தந்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. கதையின் சுவாரஸ்யம் அடுத்தடுத்த வாரங்களில் அதிகரிக்க முயற்சி செய்கிறேன் நன்றி :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கலாபக் காதலா - 04 - சசிரேகாmadhumathi9 2019-02-01 05:44
:clap: really nice epi sasi :clap: (y) interesting aaga poguthu.kalakalappa irukku.egarly waiting 4 next epi. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
+1 # கலாபக் காதலா-4-சசிரேகாரேணுகா சிவா 2019-01-31 22:33
Epi very nice mam.next enna nadakum nu pakka avala irukku mam.murari radha jodi nalla irukku so pirikkathinga mam :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கலாபக் காதலா - 04 - சசிரேகாmahinagaraj 2019-01-31 18:13
வாவ்.... wow :clap: :clap:
முராரி,ராதா-வின் உரையாடல் செம அதை எழுதின உங்களுக்கு ஒரு உம்மா.. :P
ராதா,முராரியும் பிரிக்க வேண்டாம்.. செம ஜோடி.. ;-)
சாங் செம சூப்பர்.. :GL:
:thnkx:
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top