”மதுரம்னா இனிது அழகுன்னு அர்த்தம், அதரம்னா இதழ், வதனம்னா முகம், நயனம்னா கண்கள், ஹஸிதம்னா சிரிப்பு, ஹ்ருதயம்னா இதயம், கமனம்னா நடை அப்புறம்”
”மதுராதிபதே ரகிலம்னா மதுரா நகரின் அதிபதி கண்ணனே எல்லாம் அழகே அப்படியே உங்களை போல” என சொல்லவும் முராரி சட்டென நின்று அவளை உற்றுப் பார்த்தான். அவளோ
”ஏன் அப்படி பார்க்கறீங்க, உண்மையிலயே இந்த பாடல் வரி உங்களுக்குத்தான் பொறுத்தமா இருக்கு நீங்க அவ்ளோ அழகா இருக்கீங்க” என சொல்ல அவனுக்குள் மின்னல் கீற்று பாய்ந்து அவனது இதயத்தில் நுழைந்து மகிழ்ச்சியை பெருக்கெடுக்க அவனது முகமே பிரகாசமானது. அவளையே ஆழமாக பார்த்தான். பார்த்துக் கொண்டே இருந்தான், அவளது கண்கள், கன்னம், இதழ் என வரிசையாக தலை முதல் பாதம் வரை பார்த்தான், அவளும் நேருக்கு நேராக நின்ற முராரியை முழுதாக பார்த்தாள். அவன் கண்களில் தெரிந்த பிரகாசம், முகத்தில் இருந்த கவர்ச்சி, அவளை அவன்பால் இழுக்கவே செய்தது. சில நொடிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடியே இருக்க மெல்ல அவள்
வசனம் மதுரம் சரிதம் மதுரம்
வஸனம் மதுரம் லலிதம் மதுரம்
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம்
மதுராதிபதே ரகிலம் மதுரம்
என பாடவும் அவனுக்கு சிரிப்பே வந்து சட்டென முகத்தை திருப்பிக் கொண்டான். அவனது மின்னல் சிரிப்பை ஒரு நொடியில் கண்ட ராதாவோ உள்ளுக்குள் குளிர்ந்து போனாள்.
”இதுக்கான அர்த்தம் இப்ப நீங்க செய்றதுதான், வசனம்னா பேசற சொற்கள், சரிதம்னா குணம், வஸனம்னா உடை, லலிதம்னா உடல், சலிதம்னா இயக்கம், ப்ரமிதம்னா உலவல், இப்ப உலவல்னா என்ன அர்த்தம்னு தெரியுமா விளக்கி சொல்லனுமா” என அவள் கேட்க அவனோ
”தெரியும்” என சொல்லி புன்சிரிப்புடன் நடப்பதைக் கண்டு அவனிடம்
”எல்லாம் வேஷம், ராதாகிட்டயே கோபத்தை காட்டலாமா” என கேட்க அவனோ அமைதியாக முன்னோக்கி வேகமாக நடக்க ஆரம்பிக்க அவளும் நடந்தாள். சில நொடிகள் கழித்து மெல்ல அவள் முராரியிடம்
”நடந்தது எல்லாம் என் தப்புதான்” என்றாள்
”ஆமாம் தப்புதான் என்னை விட்டு போ” என கத்திவிட்டு அவன் முன்னேறி நடக்க
”என்னாச்சி இப்பதானே கோபம் குறைஞ்சது, அதுக்குள்ள திரும்பவும் கத்தறாரே” என நினைத்தவள் அவனிடம்
”போறதா இல்லை எங்கப் போறது நான் உங்களுக்காகத்தான் வந்தேன்”
“பொய்”
”இல்லை உண்மை நான் உங்களுக்காகதான் வந்தேன், தேவிக்காக வந்தேன், அப்படியே உங்களை பார்க்கனும் நினைச்சேன்”
“பொய்” என சொல்லியபடியே அவளை காணாமல் முன்னோக்கி நடக்க ராதாவிற்கு கஷ்டமாகிப் போனது
”அய்யோ இவர் நம்ப மாட்டேங்கறாரே” என புலம்பியபடியே அவனிடம் சென்றாள்.
“பொய்யில்லை நான் சொல்றதை நம்புங்க நான்தான் ராதா”
“அதுவும் பொய், என் கிட்ட ராதா, என் தம்பி கிட்ட தாரா, இப்படி எத்தனை பேரு வைச்சிக்கிட்டு இருக்க” என கோபமாக கேட்டுவிட்டு அவன் வேகமாக நடக்க ராதா உடனே நின்றுவிட்டாள். கால்வலியோடு மன வலியும் அதிகமாகவே என்ன செய்வது, எப்படி முராரியை நம்ப வைப்பது என புரியாமல் தவித்தவள் தனது கையில் இருந்த செல்போனை பார்த்தாள். சட்டென அவளுக்கு ஒரு யோசனை வரவும் அதில் தேடிப்பிடித்து தாராவும் அவளும் இருந்த போட்டோவை எடுத்துப் பார்த்தாள்
”இதை காட்டினா அவர் நம்புவாரு“ என நினைத்தபடியே அவனிடம் ஓடிச் சென்றாள்
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சசிரேகாவின் "காணும் இடமெல்லாம் நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
”இங்க பாருங்க இவங்கதான் தாரா, என்னோட அக்கா, நான் ராதா, தேவியோட ப்ரெண்ட் ராதா, என் அக்கா தாராதான் உங்க தம்பியோட பிரெண்ட், இங்க பாருங்க” என அவள் பேச முராரியின் நடையில் சற்று வேகம் குறைந்து நடந்தபடியே முகத்தை மட்டும் திருப்பி ராதாவை பார்த்தான். அவள் உடனே ஃபோனை அவன் முகத்திற்கு முன் காட்ட அதில் இருந்த தாராவையும் ராதாவையும் பார்த்துவிட்டு அவளிடம் சந்தேகத்துடன்
”நீதான் ராதான்னா எதுக்காக நீ கோவிந்த்கிட்ட போன, என்கிட்ட ஏன் வரலை” என உரிமையாக கேட்க அவளே
”நீங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருப்பீங்கன்னு எனக்கு எப்படித் தெரியும், அந்த சமயம் 2 பேர் என் முன்னாடி நின்னீங்க, அப்ப உங்க பேர் கூட எனக்குத் தெரியாது, நீங்களாவது சொல்லியிருக்கனும், உங்க தம்பி என் பாட்டு நல்லாயிருக்குன்னு சொல்லவும், அவர்தான் நீங்கன்னு நினைச்சிட்டேன். நீங்க கோபமாக முறைக்கவும் நீங்கதான் தேவியோட சின்ன அண்ணன்னு நினைச்சிட்டேன்” என படபடவென சொல்லி மூச்சிரைத்தாள் ராதா.
முராரியோ நடந்ததை ஒரு முறை நினைத்துப் பார்த்துக் கொண்டே நடக்க அவனுக்கு ஃபோன் வந்தது.
ராதா அவனுடன் பேசும் போது ஃபோனில் பாடிய பாடலான
Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!
முராரி,ராதா-வின் உரையாடல் செம அதை எழுதின உங்களுக்கு ஒரு உம்மா..
ராதா,முராரியும் பிரிக்க வேண்டாம்.. செம ஜோடி..
சாங் செம சூப்பர்..