Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Friends, Chillzee KiMo is all set to be released 👏👏! Please visit Chillzee KiMo website - www.kimo.chillzee.in to learn about the subscription plans and other details.

Friends, Chillzee KiMo is all set to be released 👏👏! Please visit Chillzee KiMo website - www.kimo.chillzee.in to learn about the subscription plans and other details.

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - சுஷ்ருதா – 06 - சித்ரா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - சுஷ்ருதா – 06 - சித்ரா

sushrutha

சுஷ்ருதாவின்  நடைமுறைப்படி  ,அங்கு  கன்சல்டன்ட் டாக்டர்ஸ்  அவர்களது  குறிப்பிட்ட  நேரத்தில் அங்கு வந்து ,வரிசைப்படி  நோயாளிகளை பார்ப்பார்கள் ,

அது தவிர  அவசர சிகிக்சையும்  உண்டு ,அடிபட்டு வருவது ,திடீரென்று உடல் நல  கோளாறு ஏற்படுவது ,விபத்தில் சிக்குவது ,போன்ற உடனடி நடவடிக்கை தேவைப்படும்  சூழ்நிலைகளை  சமாளிக்க ,வரும் நோயாளிகளை கவனிக்க ,டூட்டி டாக்டர் என்று ஒருவர்  எப்போதும் இருப்பார் .

அப்படி அந்த மாலை பொழுதின் டூட்டி டாக்டராக  இயங்கியவர் டாக்டர் ஜீவா ,

இவருக்கும் ஏறக்குறைய நம் சசி வயது தான் இருக்கும் ,இவரது  பணி ,வரும் நோயாளிகளின்  நிலை அறிந்து ,அட்மிஷன் போட்டு அவசர சிகிட்சை  அளிப்பது ,

தொடர்ந்து தேவைப்படும் ஸ்பெசலிஸ்ட் தேவைப்படும்  சிகிட்சையை  தொடருவர் .

 அப்படி ஒரு மாலை பொழுதில் தான் ,சீதா சுஷ்ருதா வந்தது ,அவள் கூடவே வந்த ஆனந்தனுக்கு  ஜுரம் .

அவனுக்கு  இரண்டு மூன்று நாட்களாவே ,லேசான ஜுரம் இருந்தது ,ஜுரம் தான் லேசாக இருந்தே தவிர ,உடம்பு வலி பின்னி எடுத்தது ,

பொதுவாக  அவன் அலுவலகத்துக்கு லீவ்  போடுபவன் அல்ல ,அத்துடன் அவன் வீடு  இருந்த அசாதாரண சூழ்நிலையில் ,வீடு தங்கவும் அவனுக்கு  விருப்பம் இல்லை என்பதால் ,மாத்திரை மருந்து எடுத்துக்கொண்டு  அலுவலகம் சென்றுவிடுவான் ,

ஓரளவிற்கு  ஆரோக்யமான உடம்பு என்பதால் ,பெரிய பிரச்சனை எதுவும் வந்ததில்லை ,இருந்தும் மனதின் பாரம் உடம்பையும்  பலமிழக்க செய்வதை இப்போது  கொஞ்ச நாட்களாக உணர்ந்தே இருந்தான் .

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அதனாலேயே இதுவும் அப்படிப்பட்ட ஒரு உடம்பு வலி என்று அசட்டையாக ,முதல் நாள் வேலைக்கு சென்றுவிட ,திரும்பி வரும்போதே  உடம்பு வலி வழக்கத்தை விட கூட இருந்தது  உண்மை .

ஆனால்  அன்று பகல் முழுவதும் உணவை கூட மறுத்து உறங்கி எழுந்தபோது சற்று  தெளிவு வந்துவிட அன்றிரவு  உற்சாகமாவே வேலைக்கு போனான் .

அன்று இரவும் ,அதை தொடர்ந்த பகலும் நன்றாவே கழிய ,பரவாயில்லை வெறும் ஜுரம் தான் என்று அவன் நினைத்தது ,மறுநாள் முழுவீச்சில் அவனை தாக்கி வீழ்த்தியது .

உடம்பை முறுக்கும் வலியுடன் அவன் மெத்தையில் கிடந்த போது  தான் சீதா உள்ளே வந்தாள் .

''என்ன ஆச்சு உங்களுக்கு ,நேத்து வேலைக்கு போகலைன்னு ஆயா  சொன்னாங்க ,சாப்பாடும் ஏதும் எடுக்கல போல ''என்றாள்  அவளது வழக்கமான மெல்லிய குரலில் .

ஒரு பிடி மணலை எடுத்து கண்ணில் போட்டது போல் ,எரிந்துகொண்டிருந்த  கண்களை திறந்து ,மசமசப்பாக தெரியும் அவள் உருவத்தை பார்த்தான் .

'ஒன்னும் இல்ல ,லேசா பீவர் ன்னு நினைக்கிறேன் ,மாத்திரை போட்ருக்கேன் ,சரியாயிடும் ''என்றான் கரகரத்த குரலில் .

''சிட்டி ல  ,நிறைய  பீவர் இருக்கு ,என் கூட வேலை செய்யும்  நீலாக்கு கூட பீவர் ,பன்றி காய்ச்சல் அது இதுங்கிறாங்க ,குழந்தை இருக்கு ரிஸ்க் எடுக்க முடியாது ,வாங்க டெஸ்ட் பண்ணி பார்த்திடுவோம் ''

''ரெண்டு நாள் தானே போயிருக்கு ,இன்னைக்கு ஒரு பொழுது பார்க்கலாம் ,இல்லேன்னா டாக்டர்கிட்ட போகலாம் ''என்று அவன் இழுக்க

சற்று  தயங்கிய பின் ,ஏதும் பேசாமல்  அவள்  திரும்பி போய்விட ..

அவன் அசதி அவனை தாக்க ,மறுபடி தூங்க முயற்சித்தான் .

அங்கிருந்து அகன்ற  சீதா ,ஆயாவிடம் ஒரு வார்த்தை அவன் நிலை குறித்து  எச்சரித்து ,ஒரு கண் அவன் மீது வைத்திருக்கும் படி கேட்டுக்கொண்டாள் .

''நீ கவல  படாம போ  கண்ணு ,நான் இங்கயே இருந்து பார்த்துகிறேன் ,''

''பார்த்து ,உள்ளே குழந்தையை  எடுத்து போகாதீங்க ,கை  கழுவிட்டு குழந்தையை தூக்குங்க ''என்று மேலும் சீதா  எச்சரிக்கை கொடுக்க

''எல்லாம் பாத்துக்கிறேன் ,நான் என் ஆயுசுல  எவ்ளோ  வியாதி பார்த்துகிறேன் ,இந்த ஜுரம் என்ன பிசாத்து ''என்று அவர் தைரியம்  கொடுக்க

சிறிது கவலையுடன் தான்  வேலைக்கு சென்றாள்  சீதா ,அங்கிருந்து  போன் பண்ணினாலும் அவன் தான் எடுத்து பேச வேண்டியிருக்கும்  என்பதால் அதையும் தவிர்த்தாள்  .

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "கலாபக் காதலா..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

ஒரு வழியாக மாலை வந்து அவள் வீடு வந்து சேர்ந்த பொழுது ,அவன் நிலை கொஞ்சம் பாவமாக தான் இருந்தது .

 களைத்து ,பலமிழந்து  கிடந்த அவனை பார்த்தவுடன் உடனடியாக அவனை மருத்துவமனை அழைத்து செல்ல வேண்டியிருக்கும்  என்று உணர்ந்தாள் .

இப்போது அவன் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை ,தெரிவிக்கும் நிலையில் இல்லை !

மருத்துவமனை என்றவுடன் அவளுக்கு சுஷ்ருதா தான் ஞாபகம் வந்தது ,கூடவே சசியின் முகமும் தான் .

ஆயாவிடம் வீட்டையும் ,குழந்தையையும் பார்த்துக்க சொல்லிவிட்டு ,உடனே கிளம்பினாள் .

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

Chitra

Completed Stories
On-going Stories
  • Sushrutha (Updated fortnightly on Friday Morning)
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
+1 # RE: தொடர்கதை - சுஷ்ருதா – 06 - சித்ராSahithyaraj 2019-02-01 10:51
Anand condition Vida Dr condition thaan mosamaguthu mmmm :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 06 - சித்ராAdharvJo 2019-02-01 12:45
Quoting Sahithyaraj:
Anand condition Vida Dr condition thaan mosamaguthu mmmm :-)

Exactly :D :grin: looks like Sasi might need cardio's assistance facepalm
Athaan oru word vachi Dr Jeeva ippadi oru wrong report tharurare facepalm Interesting update chitra ma'am :clap: :clap: eppadiyavdhu bloodcount ethi cure panidunga :yes: let the medical miracle happen!! Hope sasi would get to know more about Sita in the coming epis. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 06 - சித்ராmahinagaraj 2019-02-01 10:50
ரொம்ப நல்லா இருக்கு மேம்... :clap: 👏👏
சசி ரொம்ப உடைஞ்சராம பாத்துக்கங்க மேம்..😑
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 06 - சித்ராmadhumathi9 2019-02-01 05:59
:clap: nice epi.suspense aaga poguthu. (y) waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top