Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 17 - பத்மினி - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 17 - பத்மினி

Unnai vida maatten... Ennuyire

றுநாள் காலையில் தாமதமாக கண் விழித்தாள் பவித்ரா...எழுந்ததும் நேற்றைய நிகழ்வுகள் நினைவு வந்தன...  கடைசியாக அவனுடன் காரில் வந்தது நினைவு வர, அதோடு அவள் அவனை முறைத்து கொண்டு வந்ததும் பின் ராஜாவின் பாடலை ரசித்துகொண்டு வந்ததும் நினைவு வர,

“அப்படீனா... நேற்றும் கார்லயே தூங்கிட்டனா?? சே!!  என்னை  பற்றி என்ன நினைப்பான்??... எப்படிதான் அவன் பக்கத்துல இருந்தா மட்டும் இப்படி தூக்கம் வருதோ?? இப்ப எப்படி அவன் முகத்துல முழிக்கிறது.. “  என்று புலம்பி கொண்டே அவன் படுக்கையை பார்க்க அது காலியாக இருந்தது..

“அப்பாடா... முன்னாடியே எழுந்து போய்ட்டான் போல.. அப்ப வசதியா போச்சு.. “ என்று சிரித்து கொண்டே குளியல் அறைக்குள் சென்று குளித்து முடித்து ஒரு சுடிதாரை அணிந்து கொண்டு கீழ இறங்கி வந்தாள்...

கடைசி படியில் கால் வைக்கவும்    

“பவித்ரா...” என்று ஆதி  கத்தியதை போல இருந்தது அவளுக்கு....

சுற்றிலும் பார்க்க அவன் எங்கும் இல்லாததால்

“சே.. அவனை நினைச்சுகிட்டே இருக்கிறதால அவன் கூப்பிடற மாதிரியே இருக்கும் போல.. “ என்று சிரித்துக் கொண்டவள் மீண்டும் ஒரு அடி எடுத்து வைக்க , மீண்டும்

“பவித்ரா... “ என்று கத்தினான் ஆதி.. இப்பொழுது உற்று கவனிக்க அவன் அலுவலக அறையில் இருந்து தான் வந்தது அந்த கத்தல்..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அதை கேட்டு திடுக்கிட்டவள், வேகமாக  ஒடி சென்றாள் அவன் அலுவலக அறைக்கு.. இதுவரை அவளை பெயர் சொல்லி அழைத்தது இல்லை அவன்..எப்பொழுதும் பேபி என்றே அழைத்தவன் இன்று முதல் முறையாக தன் பெயர் சொல்லி அழைக்கிறான்.. அதுவும் அந்த குரலில் அவ்வளவு கோபம் இருந்தது புரிய என்னவாக இருக்கும்??  என்று யோசித்து கொண்டே வேகமாக அவன் அறைக்கு சென்றாள்..

அவள் உள்ளே சென்றதும் அதுவரை தன்  லேப்டாப்பில் எதையோ பார்த்து கொண்டிருந்தவன் நிமிர, அவன் முகம் இறுகி, கண்கள் கோபத்தில் சிவந்து  ஒரு கோபம் கொண்ட புலியைப் போல இருந்தான் ஆதி... அவளை எரித்து விடுவதைப் போல பார்த்தவன்

“நேற்று எங்க போயிருந்த?? “ என்று கர்ஜிக்க, பவித்ராவுக்கோ அவனின் அந்த தோற்றத்தை கண்டு கை கால்கள் உதறல் எடுக்க ஆரம்பித்தது.. நாக்கு ஒட்டி கொள்ள அவளுக்கு பேச வராமல் முழித்து கொண்டு நிக்க

“சொல்லு டி.. எங்க போயிருந்த??  “என்று மீண்டும் கர்ஜிக்க, பவித்ராவோ எதுவும் நினைவு வராமல்

“நான் எங்கயும் போக... “ என்று முடிக்கு முன்னே

“ஏய்... நீ பொய் சொல்ல மாட்டேனு நம்பிகிட்டிருக்கேன்... என் நம்பிக்கையை பொய்யாக்கிடாத... உண்மையை சொல்.... எங்க போயிருந்த.. “ என்று மீண்டும் அதட்ட அவன் முதலில் கத்தியதை கேட்டு வேலை நிறுத்தம் செய்திருந்த அவள் மூளையை கசக்கி யோசிக்க, ஒரு வழியாக அவள் நேற்று கடைக்கு சென்றது நினைவு வர

“கடைக்கு போயிருந்தேன்.. “ என்று மென்று முழுங்கினாள்..

“யார் கடைக்கு?? “ என்று மீண்டும் அவன் கண்கள் இடுங்க கேட்க

“வந்து.. வந்து...  ரிஷி கடைக்கு... “ என்று அவள் முடிக்கு முன்னே  அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான்....

“உனக்கு எத்தனை தரம் சொல்றது.. அவன் கிட்ட பேசாத..  அவனை கண்டால் தள்ளி நில்லுனு....நீ அதை காதுலயே வாங்காம அவன் கடைக்கே போயிருக்க??  என்ன தைரியம் உனக்கு??

எதுக்கு அவன் கடைக்கு போன?? உனக்கு எதுனாலும் என்கிட்ட கேட்க வேண்டியதுதான.. இல்லைனா நம்ம கடைல போய் வாங்க வேண்டியது தான?? அதை விட்டுட்டு அவன் கடைக்கு எதுக்கு போன?? “என்று மீண்டும் உறுமினான்...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "சுஷ்ருதா..." - வித்தியாசமான காதல் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

அவன் அடித்ததில் தன் கன்னத்தில் கை வைத்து கொண்டு, கண்களில் கண்ணீர் திரண்டு நிக்க, தலை  குனிந்து நின்றாள்...

“சொல்லு டீ.. கத்திகிட்டு இருக்கேன் இல்ல.. வாய திறந்து சொல்லு... எதுக்கு அவன் கடைக்கு போன??  “   என்று மீண்டும் கத்த

“வந்து.. வந்து... உங்களுக்கு சர்ப்ரைஷா கிப்ட் கொடுக்கனும்னு நேற்று எங்க வீட்டுக்கு பக்கத்துல இருந்த கடைக்கு போயிருந்தேன்.... அது அவன் கடைனு தெரியாது.. பில் போடறப்ப தான் வந்தான்...அதுக்கு மேல  எப்படி வாங்காமல் வர்ரது... ” என்று மெல்ல முனகினாள் தன் வலியை பொறுத்து கொண்டு

“அப்படி என்னத்த வாங்கி தொலச்ச??.. “  என்றவன் பார்வை அவன் கையில் அணிந்திருந்த மோதிரத்திற்கு செல்ல

“ஓ...  இது அவன் கடையில தான் வாங்கினியா?? இந்தா... இத நீயே வச்சுக்க... “ என்று அந்த மோதிரத்தை கழற்றியவன் தூக்கி விசிற முயல, அவள் கண்ணில் தெரிந்த கெஞ்சல் பார்வையும் அதை கழட்ட வேண்டாமே என்ற பரிதவிப்பும் தெரிய விரலை விட்டு வெளியில் வந்த அந்த மோதிரத்தை மீண்டும் உள்ளே தள்ளி கொண்டான்...

About the Author

Padmini Selvaraj

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 17 - பத்மினிmahinagaraj 2019-02-02 13:55
அசத்தலான பதிவு.... :clap: 👏👏😍
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 17 - பத்மினிViji. P 2019-02-01 20:38
Super :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 17 - பத்மினிPadmini 2019-02-02 10:00
:thnkx: Viji!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 17 - பத்மினிmadhumathi9 2019-02-01 13:11
:clap: really nice epi sis.viruvruppa poguthu kathai.padikka interesting aagavum irukku. (y) :thnkx: 4 this epi.waiting to read more. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 17 - பத்மினிPadmini 2019-02-02 10:00
:thnkx: Madhu!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 17 - பத்மினிAdharvJo 2019-02-01 13:08
Vandhutanga pa terror captions oda :D hope its gonna be a positive impact! Boss idhu varai vidhu sidhu-n ellam unga mind voice sonnadha ketadhey illaiye :Q: :grin: business la periya appatakar thaan :eek: enemy kitta training edukurangalam :P
Ring scene pidichadhu ma'am evalo anubu vachi irukaru parunga ninga pirika ninaichalum :no: Impossible!! kutti pavi oda easy going nature engalayum attract panuranga! cute.
series oda adutha Jodi ready hope at least prem is good boy :lol: otherwise saran and pavi why blood same blood kadhaiya mudiyum..indraya epi-k background-la vettri kodikattu song podalam pa :dance: dhool epi ma'am :clap: :clap: lets meet in thiruvizha!! thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 17 - பத்மினிPadmini 2019-02-02 09:59
:thnkx: Adharv!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 17 - பத்மினிSahithyaraj 2019-02-01 13:06
Indha payanam Aadhiyin iniya payanam illaiya. So sad. :sad:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 17 - பத்மினிPadmini 2019-02-02 09:58
:thnkx: Sahithya!!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top