Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - சுஷ்ருதா – 06 - சித்ரா - 5.0 out of 5 based on 2 votes

எப்படியோ தட்டு தடுமாறி அவன் ஏற  ,ஆட்டோ அவர்களை மருத்துவமனை கொண்டு சேர்த்தது .

கை  தாங்களாய் அவனை உள்ளே அழைத்து வந்து உட்காரவைத்துவிட்டு ,அவள்  ரிசெப்சன்னில்  கொடுத்த பாரத்தை  பூர்த்தி செய்து கொடுத்து ,அவனை எதிர்பார்த்து உள்ளே நுழைந்தால் ,அங்கே இருந்தது ஜீவா .

 ஆனால்  ஜீவாவுமெ  ,திறமையான ,கனிவான  மருத்துவனாக தான் இருந்தான் .

விவரத்தை கேட்டு ,உடனடியாக  அட்மிட் செய்து ,ட்ரிப் போட்டு ,ரத்தம் பரிசோதனைக்கு எடுத்து என்று ,என்று அடுத்தடுத்து  அவன் சிகிச்சை  மேற்கொள்ள ,

அதில் நேரம்  ரெக்கை கட்டி பறக்க ,அவனை அங்கே காணாதது கூட அவள் சிந்தனையை  விட்டு அகன்றது .

எதிர்பார்த்ததை போல அவனுக்கு ஏதோ  வில்லங்கமான  ஜுரம் தான் என்ற கவலையில் ,ஜீவாவை நெருங்கி கேட்டாள் .

''அத்தானுக்கு என்ன ஜுரம் டாக்டர் ,சிட்டில ஏதேதோ இருக்குன்னு பயமுடுத்துறாங்க ''என

அத்தானா  ,அப்படியென்றால்  இவள் மனைவியா ,அப்படி கூப்பிடுவது இன்னும் வழக்கத்தில்  இருக்கிறதா ,என்ற ரீதியில் அவன் சிந்தனை ஓட ,அவள் கேள்விக்கு பதிலாய்

''தெரியலை ..பிளட் டெஸ்ட் ரிசல்ட் வரட்டும் பார்ப்போம் ,இப்போதைக்கு  ட்ரிப்  போகுது ,அதில் கொஞ்சம் தெம்பு வரும் ,கொஞ்சம் பெட்டரா பீல் பண்ணுவாங்க ,ரிசல்ட் வரட்டும் ''எனும்போதே  அடுத்து  ஒரு கேஸ் அழைக்க அங்கே நகர்ந்தான் .

ன்றைய மாலை பொழுது  சீதாவிற்கு இப்படி கழிய ,சசியை அங்கே இருக்க விடாமல்  வெளியே இழுத்திருந்தது அந்த முதியவர் நிலை .

முதல் நாள் வீட்டிலேயே பார்த்து ,எக்கோ எடுக்க சொல்லிவிட்டு வந்தவன் ,மறுபடி அவர்கள்  அவசரம் என்று கூப்பிட  அங்கு போய்  பார்த்தால் ,

மறுபடி  அவர் மூச்சு விட சிரம பட்டு கொண்டிருக்க கண்டான் .

இந்தமுறை  அவர் நிலை ,நன்றாக இல்லை என்று கண்டுக்கொண்டு  ,அங்கிருந்தபடியே  டாக்டர்  முருகவேளை அழைத்து பேசினான் .

அவர் ஒரு  கார்டியோலோஜிஸ்ட்  என்பதால் அவரை அழைத்து பேச ,அவர் ஆலோசனைப்படி  ,ஆம்புலன்ஸ் அழைத்து ,கூடவே  அது வரும்வரை இருந்து ,அதில் தானும் பயணித்து ,அவர் மருத்துவமனையில் ,அங்கு தான் தன்  மருத்துவமனையை விட கார்டியாக்  நோயாளிக்கு வசதி என்பதால் ,அங்கு கொண்டு போய்  சேர்த்து ,அபாய கட்டம் தாண்டும் வரை கூட இருந்துவிட்டு வர ,

பொதுவாக  இது போன்று செய்ய  நேராது ,நோயாளியுடைய  உறவினர் பொறுப்பெடுத்துக்கொள்வர் உடன் செல்ல ,ஆனால் இங்கு தெரிந்தவர் ,கூடவே  அவர் கண்டிஷன் கிரிட்டிகளாக இருந்ததால் ,கூடவே இருக்க நேர்ந்தது .

அனைத்தையும் முடித்துவிட்டு  அவன் சுஷ்ருதா நுழைந்தபோது ,ஆனந்தின்  பிளட் டெஸ்ட் ரிசல்ட் வந்திருந்தது .

டெஸ்ட் ரெசல்ட்டுடன்  இவனை நாடி  ஜீவா  வந்தார் .

''இன்னைக்கு ஈவினிங் ஒரு கேஸ் நீங்க இல்லாத போது  வந்து அட்மிட் ஆனாங்க ,ஜுரம்ன்னு ,ரௌடின் பிளட்  டெஸ்ட் எடுக்க ,இப்போ 'டெங்கு'  என்று தெரியுது ,பிளாஸ்மா  கவுண்ட்  ரொம்பவே கம்மியா இருக்கு ,அதான்  கூட வந்தவர்களை  இங்க வர சொல்லி இருக்கேன் .

முதல்ல  அவங்க கிட்ட விஷயத்தை  சொல்லிட்டு அப்புறம் பேஷண்ட்  கிட்ட சொல்லலாம்ன்னு பார்க்கிறேன்   எங்  கபுல்  ஆஹ் இருக்காங்க  ''என்று முடிக்க

யார் என்று தெரியாமலே ,டெங்கு என்பது கொஞ்சம் சீரியஸ் கேஸ் என்பதால் அதுதான் முறை என்றுவிட்டு ,வரப்போகும்  நபருடன் அதை சொல்ல தன மனதில் ஒத்திகை பார்த்துகொன்டே  வாசலை பார்க்க ..

அங்கே  கதவை திறந்து ,முகத்தில் அப்பிய கவலையுடன் வந்தது சீதா ..

இந்த எதிர் பாரா அதிர்ச்சியில் சசி சற்று திக்குமுக்காட

சீதாவிற்கு எந்த அதிர்ச்சியும் இல்லை ,மாறாக இவனை கண்டு சற்று நிம்மதியே ,பக்கத்திலே நின்ற ஜீவாவை பார்த்தவுடன் அவள்  ''அத்தானுக்கு என்ன ''என்று கேட்க

 சத்தமில்லாமல் நொறுங்கியது இவன் மனம் .

''டெஸ்ட் ரிசல்ட் 'டெங்கு ' ன்னு வந்திருக்கு ..மா .. ,அவங்களுக்கு உடனே ரத்தம் ஏத்தனும் ,அதுனால  அவருக்கு ரத்தம் கொடுக்க ,உங்க சொந்தகாரங்க   யாராவது இருக்காங்களா ''என்று ஜீவா கேட்க

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "காணாய் கண்ணே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

''ஏன்  ,இங்க  ஹாஸ்பிடல் ல  அவங்க வகை ரத்தம் இல்லியா ''என்றாள் 

''இல்ல இப்படி பண்றதுதான் வழக்கம் ,தெரிஞ்சவங்க  பிளட்  னா  ,சேப் ,அதனால ''என்று ஜீவா முடிக்க

அவள் இன்னும் புரியாமல் இவனை நோக்க

''உங்க சொந்தத்துல இருந்தா , தொற்று  பயமில்லாமல்  கொடுக்கலாம் என்பதால் இந்த நடைமுறை ''என்று இவன் விளக்கும் போதே அவள் முகம் சுணங்கியது

''அப்படி  யாரும் கிடைக்கலைனா ''என்று அவள்  இழுக்க

About the Author

Chitra

Like Chitra Kailash's stories? Now you can read Chitra Kailash's full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
  • Sushrutha (Updated fortnightly on Friday Morning)
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - சுஷ்ருதா – 06 - சித்ராSahithyaraj 2019-02-01 10:51
Anand condition Vida Dr condition thaan mosamaguthu mmmm :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 06 - சித்ராAdharvJo 2019-02-01 12:45
Quoting Sahithyaraj:
Anand condition Vida Dr condition thaan mosamaguthu mmmm :-)

Exactly :D :grin: looks like Sasi might need cardio's assistance facepalm
Athaan oru word vachi Dr Jeeva ippadi oru wrong report tharurare facepalm Interesting update chitra ma'am :clap: :clap: eppadiyavdhu bloodcount ethi cure panidunga :yes: let the medical miracle happen!! Hope sasi would get to know more about Sita in the coming epis. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 06 - சித்ராmahinagaraj 2019-02-01 10:50
ரொம்ப நல்லா இருக்கு மேம்... :clap: 👏👏
சசி ரொம்ப உடைஞ்சராம பாத்துக்கங்க மேம்..😑
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 06 - சித்ராmadhumathi9 2019-02-01 05:59
:clap: nice epi.suspense aaga poguthu. (y) waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top