“இல்லை இவங்கதான் என்னை கலாட்டா பண்ணாங்க” என சொல்ல அவனோ மெல்ல அவர்களைப் பார்த்தான். குடிபோதையில் அந்த நால்வரும் கண்டபடி பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு கோபத்துடன் ஒருவன் மீது காலால் எட்டி உதைத்துவிட்டு இன்னொருவனின் கன்னத்தில் பளார் என அறைய இருவர் தரையில் விழுந்தார்கள். அதைப் பார்த்த மற்ற இருவரும் பயத்தில் அங்கிருந்து ஓடிவிட முராரி தாராவைப் பார்த்தான்
”வா தாரா போலாம்” என அவளை இழுத்துக் கொண்டு கார் இருக்கும் இடம் நோக்கி நடந்தான்
”ஆனா இப்ப என் சிஸ்டர் வருவாள், அவளுக்காக நான் காத்திருக்கேன்” என சொல்ல அவனோ அமைதியாக அவளை காரிடம் கொண்டு சென்று பின்சீட்டு கதவைத் திறந்து
”உள்ள உட்காரு” என சொல்ல அவளோ
”இல்லை என் சிஸ்டர் வருவா” என சொல்ல உள்ளிருந்து ராதா குரல் தந்தாள்
”அக்கா அக்கா” என கத்த அந்த குரலைக் கேட்ட தாராவோ உள்ளே ராதா இருப்பதைக் கண்டு வியந்து சட்டென காருக்குள் ஏறி அமர்ந்தாள்
முராரியும் முன்சீட்டில் அமர்ந்துக் கொண்டு ட்ரைவரிடம்
”கோயிலுக்கு போ” என சொல்ல வண்டியும் கோயிலை நோக்கி வேகமாகச் சென்றது
பின் சீட்டில் ராதாவிடம் தாரா
”நீ எப்படி இங்க” என கேட்க
”அக்கா தேவியோட அண்ணா தான் இவரு. நான் போன்ல சொன்னேனேக்கா, இப்ப நாம தேவியை பார்க்க கோயிலுக்கு போறோம், நான் அவளை உனக்கு அறிமுகப்படுத்தறேன்க்கா” என சொல்ல அவளோ
”ஓ தேவியோட அண்ணனா”
“ஆமாம்கா”
என சொல்ல தாராவோ உள்ளுக்குள்
”ஓ அப்ப கோவிந்த் தேவியோட அண்ணாவா, இது தெரியாம போச்சே இதுவும் நல்லதுதான்” என நினைத்துக் கொண்டு ஓரவிழியால் முன் சீட்டில் அமர்ந்து ரோடையே பார்த்துக் கொண்டிருந்த முராரியைக் கண்டு புன்சிரிப்பு சிரித்தாள்.
கோயிலும் வந்தது.
வண்டியை விட்டு இறங்கிய முராரியும் பின்சீட்டு கதவை திறந்துவிட தாரா சிரித்தபடியே இறங்கினாள், ராதா இறங்கவும் அவளது முன் கையை நீட்ட அவளோ தாராவை பார்த்துவிட்டு அமைதியாக விலகி நிற்கவும், முராரியும் அவளது எண்ணத்தை புரிந்துக் கொண்டு அமைதியானான்.
”வாங்க ரெண்டு பேரும்” என சொல்லி அவர்களை அழைத்துக் கொண்டு நேராக கோயிலுக்குள் சென்றான்.
அங்கு பொங்கல் வைக்க அனைத்து ஏற்பாடுகளும் நடந்து முடிந்து கோவிந்த் கூட அங்கு பொங்கல் வைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு வியந்தான் முராரி
அங்கு தேவி இருப்பதைக் கண்டு
”தேவி தேவி” என கத்த தேவியும் முராரியின் குரல் கேட்டு வேகமாக அவனிடம் வந்து நின்றாள்
”அண்ணா” என அழைக்க அவளைக் கண்ட ராதாவோ
”தேவி” என அழைக்க தேவியும் ராதாவைக் கண்டு
”ராதா” என கேட்க
”ராதாதான்” என சொல்லி தேவியை ஒரு நொடி அணைத்துக் கொண்டு விலகி நின்றாள். அதைப் பார்த்த முராரியோ தனக்கு இப்படி ஒரு அணைப்பு கிடைக்கவில்லையே என நினைத்து கோபத்தில் அங்கிருந்து அவசரமாக பொங்கல் வைக்க சென்றுவிட்டான். தாரா சிரிப்புடன் இரு பெண்களையும் பார்த்தபடியே அப்படியே முராரியின் குடும்பத்தைப் பார்த்தாள். அங்கு இருப்பவர்களிடம் முராரியே தாரா மற்றும் ராதாவைக் காட்டி விளக்கம் சொல்லவே அவர்களும் சிரிப்புடன் தாராவைப் பார்க்க அவள் நின்ற இடத்திலேயே கைகூப்பி வணக்கம் சொல்ல அவர்களும் அவளது வணக்கத்தை ஏற்றுக் கொண்டது போல தலையை பலமாக ஆட்டி வா என கையை ஆட்ட அவளும் தலையாட்டிவிட்டு ராதாவையும் தேவியையும் பார்த்தாள்.
இருவரும் சிறு குழந்தைகள் போல பேசிக் கொண்டிந்தார்கள்.
”ஏன் லேட்டு” என தேவி கேட்க அதற்கு ராதா
”நான் காலையில வந்துட்டேன், நீதான் வீட்ல இல்லை 2 மணி நேரமாச்சி, உன் அண்ணாகூடவே நான் இருந்தேன் தெரியுமா” என சொல்ல
”போன் பண்ணியிருக்கலாம்ல”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
Chillzee Special "ஐ லவ் யூ" - காதல் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
”அதுவா சட்டுன்னு எனக்கு தோணலை” என பேச
”நீ ரொம்ப அழகாயிருக்க ராதா, நான் உன்னை கற்பனையில நினைச்சதை விட நேர்ல நீ ரொம்ப அழகா இருக்க”
“நீயும் அழகா இருக்க தேவி, நேர்ல பார்த்தா என்கிட்ட நீ எப்படி பழகுவியோன்னு நினைச்சி பயந்தேன் ஆனா பரவாயில்லை என்கூட இயல்பாதான் பேசி பழகற”
”நான் அப்படித்தான் புது ஆளுங்கன்னு கூச்சப்படமாட்டேன், உன்னோட இந்த ட்ரஸ் அழகா இருக்கு” என தேவி சொல்ல அவளும்
”ஆமாம் நீயும் இந்த பாவாடை தாவணியில அழகா இருக்க, நீயே இதை போட்டுக்குவியா”
Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!
முராரி,ராதா-வின் உரையாடல் செம அதை எழுதின உங்களுக்கு ஒரு உம்மா..
ராதா,முராரியும் பிரிக்க வேண்டாம்.. செம ஜோடி..
சாங் செம சூப்பர்..