(Reading time: 11 - 21 minutes)

தொடர்கதை - காணாய் கண்ணே - 05 - தேவி

Kaanaai kanne

மிழ்நாடு எக்ஸ்பிரஸ் கிளம்பி ஒரு மணி நேரம் ஆகயிருந்த நிலையில், மற்ற கம்பார்ட்மென்ட் எல்லாம் ஓரளவு அமைதியாகி இருக்க, இன்ஜினியரிங் காலேஜ் ஸ்டுடென்ட்ஸ் இருந்த கம்பார்ட்மென்ட் மட்டும் அடங்கவேயில்லை.  ப்ரோபர்ஸ் இருவரும் தங்கள் பெர்த் பார்த்து அமர்ந்து கொண்டவர்கள், இவர்கள் பக்கம் திரும்பவேயில்லை.

ப்ரித்விராஜ் தான் தன் லிஸ்டோடு வந்து இருப்பவர்களைச் சரிபார்த்தான். அவர்களிடம் ஐடி கார்ட் பத்திரமாக வைத்து இருக்கச் சொன்னான்.

“பிரெண்ட்ஸ். நாம ஸ்டுடென்ட் ஸ்பெஷல் பெர்மிசனில் தான் எல்லா இடமும் சுற்றிப் பார்க்கப் போகிறோம். அதனால் யார் எங்கே கேட்டாலும் நீங்க ஸ்டுடென்ட் என்ற ஐடி. கார்டு எப்போதும் வைத்துக் கொள்ளுங்கள். யாரும் எந்த இடத்திற்கும் தனியாகப் போக வேண்டாம். குறைந்த பட்சம் மூன்று , நான்கு பேராகவே சேர்ந்து செல்லுங்கள்” என்று சொல்லிக் கொண்டு இருந்தான்.

அதை மாணவர்கள் பெரிதுபடுத்தாமல் , அவர்கள் கேலி, கிண்டல் எல்லாவற்றையும் தொடர்ந்து கொண்டு இருந்தனர். ஒரு புன்னகையோடு அவர்களைப் பார்த்து, தலையயை குலுக்கி விட்டுச் சென்றான். அவனும் இந்தப் பருவத்தைத் தாண்டி வந்தவன் தானே. அவர்களின் மனநிலை புரிந்தே இருந்தது.

அந்த பேராசிரியர்களோடு மாணவர்கள் நாற்பது பேர், மாணவிகள் இருபத்தாறு பேர் இருந்தனர். , அவசர மருத்துவ உதவிக்காக தகுந்த முதலுதவி உபகரணங்களோடு ஒரு நர்ஸ் இருந்தார். அதைத் தவிர ப்ரித்வியின் உதவியாளர்கள் மூன்று பேர் இருந்தனர்.

எல்லோரும் அவரவர் இடத்தில் லக்கேஜ் வைத்து விட்டு அமர்ந்தனர். டிக்கெட் புக் செய்தது ப்ரித்வியின் வேலை என்பதால், அவனிடமே டிக்கெட் பரிசோதகர் வந்து செக் செய்து விட்டுச் சென்று விட்டார்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

இரவு பத்து மணிக்குப் புறப்பட்ட ரயில் என்பதால் எல்லோரும் வீட்டிலேயே டின்னெர் முடித்துவிட்டு வரச் சொல்லித் தான் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்து இருந்தார்கள்.

ஆனால் ஒரு சிலர் மட்டும் கையில் டின்னெர் எடுத்து வந்து இருக்கவே, அதை இப்போது ஓபன் செய்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். மற்ற மாணவர்கள் அவர்கள் நண்பர்களோடு ஒரு பக்கம் சீட்டு ஆடிக் கொண்டிருக்க, இன்னொரு செட் அவர்களுக்குத் தெரிந்த இசைக் கருவிகள் எல்லாம் எடுத்து வந்து வாசித்துக் கொண்டு இருந்தனர்.

அதை ஒரு மாணவன்,

“டேய்.. எருமை .. முடியலைடா..  நீ என்னமோ தில்வாலே ஷாருக் கான் நினைப்பில் கிடார் வாசிச்சுட்டு இருக்க. அங்க ஒருத்தன் என்னமோ வாரணமாயிரம் சூர்யான்னு நினைப்பில் கொலை பண்ணிட்டு இருக்கான். உங்களுக்கு எல்லாம் எவன்டா சொல்றது. நீங்க வாசிக்கிறது விவேக்கும், வையாபுரியும் , ரமேஷ் கண்ணாவும் காமெடி பண்ற மாதிரி இருக்குன்னு” என்று புலம்பினான்.

மாணவிகள் அணியோ “ஹேய், நீ ஷெர்லோக் ஹோம்ஸ் படிச்சியா.. நான் சேத்தன் பகத் எடுத்துட்டு வந்துருக்கேன். வாட் எ ரைடிங் யா” என்று பீலா விட்டுக் கொண்டிருக்க, சில மாணவிகள் “ஐயோ நமக்கு கல்கி, குமுதம், விகடன் தவிர ஒன்னும் தெரியாதே. இதுதான் எடுத்து வந்துருக்கேன்னு சொன்னா நம்மள ஒட்டித் தள்ளிடுங்களே” என்று மனதுக்குள் எண்ணியபடி,

“யா.. அக்சுவலி லாஸ்ட் மினிட் ஹர்ரிலே நான் லாஸ்ட்டா புக் பேர்லே வாங்கின சூப்பர் ஸ்டோரி புக்ஸ் எல்லாம் விட்டுட்டு வந்துட்டேன். சச் எ வொன்டர்புல் கலெக்ஷன் யா” என்று அவர்களும் பதிலுக்கு பீலா விட்டுக் கொண்டு இருந்தனர்.

இதை எல்லாம் ஒரு சிறு சிரிப்போடு கம்பார்ட்மென்ட் முழுக்க வலம் வந்த ப்ரிதிவி கண்டுகொண்டான். எல்லோரையும் மறுநாள் பகல் முழுக்க பேசிக் கொள்ளலாம், இப்போ படுத்து ரெஸ்ட் எடுங்க என்று சொல்லிக் கொண்டே வந்தான்.

எல்லோரிடமும் எதுவும் வேணுமா என்றும் கேட்டுக் கொண்டான். கிருத்திகா இருந்த சீட் அருகில் வரும்போது அவளைப் பார்க்க, அவளோ கையில் அம்புலி மாமா புக் வைத்து இருந்தாள்.

அதைப் பார்த்ததும் ஒரு சிறு புன்னகை அவன் கண்களில் வந்து சென்றது. அவளிடமும் எதுவும் வேண்டுமா என்று கேட்க,

“நோ தேங்க்ஸ் “ என்று மறுத்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

(ஆதி) பிந்து வினோத்தின் "வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“எக்ஸ்க்யூஸ் மீ.. உங்களுக்கு வேறு எதுவும் புக் வேணுமா?” என்று கேட்டான் ப்ரித்வி.

“ஏன்? “ கிருத்திகா கேட்க,

“இல்லை. அம்புலி மாமா கையில் வச்சு இருக்கீங்களே? ஒருவேளை வேறே புக்ஸ் எதுவும் மறந்துட்டு, இங்கே ஸ்டேஷனில் கிடைத்ததை வாங்கி இருக்கீங்களோன்னு நினைச்சேன்?” என்று கேட்டான் ப்ரித்வி.

“ஆமாம். ஸ்டேஷனில் தான் வாங்கினேன். ஏன்னா, அம்புலி மாமா புக்ஸ்லே இந்த புக் மட்டும் எங்கிட்ட இல்லை. இன்னிக்குப் பார்த்தவுடன் வாங்கிட்டேன். வாங்கின பிறகு சும்மா இருக்க முடியுமா? இங்கே செட்டில் ஆனவுடன் படிக்க ஆரம்பிகிட்டேன்.” என்றாள் கிருத்திகா

அதைக் கேட்டுச் சிரித்த ப்ரித்வி “ஏங்க இந்த வயசில் அம்புலி மாமா படிக்கறேன்னு சொல்றீங்க? “ என்று கேட்கவும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.