(Reading time: 11 - 21 minutes)

“டேய், மச்சி.. நாம டூர்ன்னு இந்த செல்வம் கூப்பிட்டான்னு வந்துருக்கக் கூடாதுடா. ரொம்பக் கேவலமா நடந்துக்கறான். நம்மளையும் நடத்துறான்”

“ஆமாம்டா. இவன் ஊருக்குப் போறதுக்குள்ளே நம்மள அரைகுறையாதான் கொண்டு சேர்ப்பான் போலே இருக்குடா.

“நேத்து நைட் ரெண்டு மணிக்கு , அந்த காலேஜ் ஸ்டுடென்ட் கம்பார்ட்மென்ட் போயி பார்த்துட்டு வான்னு அனுப்பி வைக்கிறான். எவ்ளோ சொன்னாலும் கேட்கமாட்டேன்னுட்டான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“ஐயோ.. அப்புறம் என்ன செஞ்ச.?

“அங்கே போறதுக்கு நமக்கு கனெக்ஷன் பேசெஜ் கிடையாது. பேன்ட்ரி வழியாப் போய் நின்னா, நாம யாரைத் தேடித் போனோமோ அவளே அங்கே நிற்கிறா.

“ஐயோ அப்புறம் என்ன ஆச்சு?

“நான் முழிக்கிற முழியப் பார்த்துட்டு, ஏன் இங்கே நிற்கறீங்கன்னு கேட்டா? நான் பே. பே.. முழிக்க, என் கையைப் பிடிச்சு முறுக்கி , இனிமே இந்தப் பக்கம் வந்துறாதன்னு மிரட்டினா?

அந்த இரண்டாமவன் இன்னும் ஆவேன முழிக்க, மீண்டும் முதலில் பேசியவனே தொடர்ந்தான்.

“என் நல்ல நேரம், யாரோ அந்தப் பக்கம் வரச் சத்தத்தைக் கேட்டுட்டு, அப்படியே என்னை ஓடிப் போகச் சொல்லிருச்சு அந்தப் பொண்ணு. இதப் போய் அந்தக் கடன்காரன் கிட்டே சொன்னா, அவனோ என்னைத் திட்டாறான். டேய்.. நீயெல்லாம் ஒரு ஆம்பளையா? ஒரு பொண்ணு கையால அடிவாங்கிட்டு வந்து இருக்கன்னு கண்ட பேச்சு பேசிகிட்டு இருக்கான்.

“அவன் வர வர ரொம்பப் பேசுராண்டா. பிரெண்ட் ஆச்சே, போனாப் போகுதேன்னு பார்த்தா, போகப் போக வரைமுறையில்லாம பேசிக்கிட்டுத் திரியாறான். இந்த வாட்டியோட சரி. இனிமேல் இவன் கூப்பிட்டா எல்லாம் எங்கேயும் அவனோட போகக் கூடாது.”

இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ப்ரித்விக்குக் கோபம் வந்தது. இந்தப் பெண்ணுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று. அந்த குணம் கெட்டவனின் நண்பர்களையே இப்படி நடத்துபவன் கையில் இவள் மாட்டினால், நிலைமை என்னாகும்.? கடவுளே. இந்த டூரில் மற்றவர்களை விட இவளை மற்றவர்கள் வம்புக்குப் போகாமல் பார்த்துக் கொள்வதுதான் பெரிய வேலையாக இருக்கும் போலவே என்று எண்ணியபடி, தேவையான எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு மீண்டும் அவர்கள் கம்பார்ட்மெண்டில் ஏறினான்.

எல்லோரும் செட்டில் ஆகவும், எல்லோரிடமும் மீண்டும் வலியுறுத்தினான். சேர்ந்து போகவும், டூர் ப்ரோக்ராம் லீக் அவுட் பண்ண வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பத்மினியின் "என் மடியில் பூத்த மலரே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

இரண்டு பக்கம் உள்ள உதவியாளர்களிடமும் சொல்லி, பகலில் ஒருவர் அந்த வாசல் அருகே இருக்கவும், இரவில் பேன்ட்ரி கார் மற்றும் இந்தக் கம்பார்ட்மென்ட் இடையே இருக்கும் கதவை இவர்கள் பக்கமாகப் பூட்டி விடவும் உத்தரவு வாங்கி விட்டான்.

மதிய உணவும் எல்லோருக்கும் சிம்பிளாக வெஜிடபிள் பிரியாணி, ராய்த்தா, தயிர் சாதம் என்று ஏற்பாடு செய்து இருந்தான்.

இரவு எல்லோரும் டெல்லி ஸ்டேஷன் வந்து இறங்கவும் . இரண்டு ஏசி பஸ் வந்து நின்றது. மாணவர்கள் எல்லோரும் இரு பஸ்சிலும் ஏற, பேராசிரியர்கள் இருவரும் ஆளுக்கு ஒரு பஸ் ஆக ஏறி அமர்ந்து கொண்டார்கள்.

ப்ரித்வி கேர்ல்ஸ் அதிகம் இருக்கும் இடத்தில் ஒரு உதவியாளரோடு ஏறிக் கொள்ள, இன்னொரு பஸ்சில் மற்ற இரு உதவியாளர்களும் ஏறிக் கொண்டார்கள்.

பஸ் இரண்டும் ராஜஸ்தான் நோக்கிச் சென்றுக் கொண்டு இருக்க, ப்ரித்வி எதேச்சையாக திரும்பிப் பார்த்த பொது, ஒரு இன்னோவா கார் அவர்களைத் தொடர்வதைக் கண்டு யோசிக்க ஆரம்பித்தான்.

தொடரும்!

Episode # 04

Episode # 06

Go to Kaanaai kanne story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.