Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11 - ஆதி [பிந்து வினோத்] - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11 - ஆதி [பிந்து வினோத்]

Vaanum mannum katti kondathe

காலை சூரியன் தன் கதிரொளியை மெல்ல பரப்பிக் கொண்டிருந்தான்.

சுட்டெரிக்காத இளம் வெயில் என்பதால் மக்கள் யாரும் அதைப் பற்றி கவலைப் படாமல் தங்களின் வேலைகளை தொடர்ந்துக் கொண்டிருந்தார்கள்.

சினேகா தன் வழக்கமான இடத்தில் நின்று எப்போதும் போல இதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்...

ஆனால் அவளின் மனம் மற்ற நாட்களை போல இயற்கையை ரசிக்காமல் வேறு ஒரு காரணத்திற்காக பரபரத்துக் கொண்டிருந்தது....

ஆகாஷின் வருகைக்காகவும்... அவனின் குட் மார்னிங்கை காதால் கேட்கவும் அவளின் மனம் ஏங்கிக் கொண்டிருந்தது...

நேற்று வரை மிகவும் சாதாரணமாக இருந்த விஷயங்கள் எல்லாமே இன்று மாறி வண்ணமயமானதாக சினேகாவிற்கு தெரிந்தது! வேறென்ன எல்லாம் அவளுள் வந்திருந்த காதல் செய்த மாயம் தான்!

ஆகாஷ் அவளுக்கு எட்டாத உயரத்தில் இருக்கும் சூரியன் போல தான்... ஆனாலும் அவள் மனசுக்குள் ஆசைப் படக் கூடாதா என்ன???!!!

அவனுக்கு அவள் கண்ணில் படாத சிறிய பட்டாம்பூச்சியாய் இருக்கலாம், ஆனால் அவளுக்கு அவன் சூரியன்...

எங்கே இருந்தாலும் கண்ணில் படும் நாயகன்...

“குட் மார்னிங் சினேகா....”

ஆகாஷின் குரல் கேட்டு ஒரு துள்ளலுடன் திரும்பி அவனை பார்த்தாள் சினேகா...

அவளின் மனதில் குமிழிட்டுக் கொண்டிருந்த சந்தோஷம் முகத்தில் தெரிந்தது போலும், அவளை ஆச்சர்யமாக பார்த்தான் ஆகாஷ்...

அவனின் வித்தியாசமான பார்வையில் அவளின் கன்னங்கள் மெல்ல சூடேறி சிவந்தன...

“குட் மார்னிங் சார்...” என எப்படியோ முனுமுனுத்து வைத்தாள்...

காஷின் விழிகள் எதிரே நின்ற சினேகாவை அள்ளிப் பருகி கொண்டிருந்தன...

அன்று கண்ணை உறுத்தாத பீச் நிற சேலையை நளினமாக கட்டி இருந்தாள் சினேகா... மஞ்சள் நிற இளவெயில் + பச்சை நிற இலைகள் பின்னணியில் இன்னமும் அழகாக தெரிந்தாள்...

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ஆகாஷ் அவளை அப்படி விழிகளால் ரசித்தது ஒன்றிரண்டு வினாடிகள் தான்... அவளின் பிம்பத்தை அப்படியே மனதில் பதிய வைத்து விட்டு தன்னுடைய அலுவலக அறைக்கு சென்றான்...

அதன் பிறகு அவனுக்கு நேரம் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தது...

நான்கு மணி ஆகும் போது அவனின் போனில் அவன் செட் செய்திருந்த reminder ஓசை எழுப்பியது!

அதை எடுத்து பார்த்தவன் அன்று அன்னையர் தினம் என்பதை நினைவுப் படுத்த அவன் வைத்த reminder என்பதை புரிந்துக் கொண்டான். மாலையில் அம்மா, அப்பாவுடன் டின்னர் செல்ல திட்டமிட்டிருந்தான்... அதற்கு முன் அம்மாவிற்காக ரோஸ் பொக்கே வாங்க தான் அந்த reminder!!!

உடனேயே ஐஸ்வர்யாவை அழைத்தான்.

“ஐஸ்வர்யா, நான் அரை மணி நேரத்துல கிளம்பிடுவேன்... அம்மாக்கு கொடுக்க ரோஸ் பொக்கே வாங்கனும்... நம்ம ஃப்லோரல் கார்னரில ஒரு டசன் ரெட் கலர் ரோசஸ் இருக்கிறதா பொக்கே வாங்க முடியுமா?”

“ஓகே பாஸ். இப்போவே வாங்கிட்டு வரேன்...”

கிளம்பி சென்ற பத்து நிமிடங்களில் அவனை போனில் அழைத்தாள் ஐஸ்வர்யா.

“பாஸ், ஒரு மேரேஜ் ஃபங்க்ஷனுக்காக இங்கேருந்து மொத்த ரெட் ரோஸசையும் வாங்கிட்டாங்களாம்... அடுத்து புதுசா பூ காலைல தான் வருமாம்... எல்லா கலரும் இருக்க மாதிரி பொக்கே தான் இருக்கு, அதை வாங்கட்டுமா???”

“அதுல ரெட் ரோசஸ் இருக்கா ஐஸ்வர்யா?”

“ஒன்னு இரண்டு இருக்கு பாஸ்... ஆனா, அது ஆல்ரெடி ரெடி செய்து வச்சிருக்காங்க, அதுல இருந்து எடுக்க முடியாது, எடுத்தா நல்லா இருக்காதுன்னு சொன்னாங்க...”

“மேக்ஸ் சென்ஸ்... நீ என்ன செய், இந்த மாதிரி இருக்க பொக்கெல கவுன்ட் செய்து 12 ரெட் ரோஸ் வர மாதிரி பொக்கே வாங்கிட்டு வா... நான் அதை அரேன்ஜ் செய்துக்குறேன்...”

“ஓகே பாஸ்...”

அடுத்த பத்து நிமிடங்களில் நான்கு பொக்கேவுடன் அவன்  முன் வந்து நின்றாள் ஐஸ்வர்யா.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "காணும் இடமெல்லாம் நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“தேங்க் யூ ஐஸ்வர்யா...”

“நோ மென்ஷன் பாஸ். டைம் கம்மியா இருந்ததால வேற எதுவும் செய்ய முடியலை... அரேன்ஜ் செய்ய என் ஹெல்ப் வேணுமா?”

“நோ, நோ, நானே மேனேஜ் செய்துப்பேன்... தேங்க்ஸ்...”

ஐஸ்வர்யா சென்றப் பின் ஒரு பொக்கேவில் இருந்த சிவப்பு அல்லாத பூக்களை வெளியே எடுத்தவன், மற்ற பொக்கேக்களில் இருந்து சிவப்பு நிற பூக்களை மட்டும் எடுத்து முதல் பொக்கேவில் சேர்த்தான்...

பொறுமையாக அதை அடுக்கி அழகாக்கியவன், ஒரு பூவை மேலே கொண்டு வர மெல்ல இழுத்த போது, அந்த பூ பாதி தண்டில் உடைந்து அவனின் கையோடு வந்தது...

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

Add comment

Comments  
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11 - ஆதி [பிந்து வினோத்]Anusha Chillzee 2019-02-24 08:44
Saree pic missing :Q: :Q:

Akash mrg arrangement eppo Snehavuku theriyum? Sooner the better. fingers crossed.

interesting update Binds :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11 - ஆதி [பிந்து வினோத்]saaru 2019-02-18 21:48
Nice update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11 - ஆதி [பிந்து வினோத்]apurva 2019-02-14 20:40
udainthu pona rojavin kathai :lol:

treasure chest ulla inum ethelam poga poguthu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11 - ஆதி [பிந்து வினோத்]AdharvJo 2019-02-14 19:35
:D miga miga miga mridhuvana andha flower nanum touch seithu parka virumubugiren bindu ma'am :P lovely update :clap: :clap: ninga sequence narrate seiyum vidham sema cute :dance: veedu-ku poittu boss roses enuvaro?? ;-)
Ponavaram aasin and indha vara nain :grin:
Aduthu track enavaga irukkum padika waiting. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11 - ஆதி [பிந்து வினோத்]Thenmozhi 2019-02-14 19:06
valentines day via mothers day :P :P :P ammakunu vangina poo-la onu avaruku pidichavaruke poi sernthiruchu ;-)

epovum mothipangale, inta time ena break elam work agi iruku ;-) :D Sneha super sharp-nu eduthukalama? :-)

Looking fwd to read the next epi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11 - ஆதி [பிந்து வினோத்]madhumathi9 2019-02-14 10:06
wow nice & cute epi. :clap: waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top