Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 14 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes
Pin It

தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 14 - சசிரேகா

Kaanum idamellam neeye

ஞ்சை

காலையில் சீக்கிரமாகவே கண் விழித்த ஈஸ்வரன் அருகில் நிரஞ்சன் தன்னை அணைத்துக் கொண்டு படுத்திருப்பதைக் கண்டு சிரித்தான்.

”பெரிய சர்ஜன் இன்னும் குழந்தைய போல என் ரூம்ல தூங்கறான் பாரு” என சொல்லியபடியே அவனை மெதுவாக தள்ளி படுக்க வைத்துவிட்டு எழுந்து அமர்ந்தான். அந்த அறை வித்தியாசமாக இருப்பதைக் கண்டு திகைத்தவன்

”நாம எங்க இருக்கோம், இது யார் ரூம், என் ரூம் இல்லையே” என குழம்பியபடியே கட்டிலை விட்டு இறங்கியவன் அந்த அறையை விட்டு வெளியேறி உள்புறமாக இருந்த வீட்டிற்குள் சென்றான். அந்நேரம் எதிர்பாராமல் யாருடனோ அவன் மோதிவிட

”சாரி சாரி” என அவன் சொல்லிவிட்டு பார்க்க அங்கு டாக்டர் சுவாதி இருப்பதைக் கண்டு

”நீங்களா”

”ஆமாம் இப்பதான் எழுந்தீங்களா உடம்பு எப்படியிருக்கு தலை பாரமா இருக்கா” என அவள் பொறுமையாக கேட்க

”இது யார் வீடு, இங்க நீங்க என்ன செய்றீங்க டாக்டர்”

”நான் வந்து நான் இது இந்த வீடு அது” என அவள் என்ன பதில் சொல்வதென புரியாமல் திகைக்க ஈஸ்வரனோ நேற்று நிரஞ்சன் சொன்னது அந்நேரம் நினைவுக்கு வரவே சட்டென

”இது ஆனந்தியோட ப்ரண்ட் வீடு, ஆமா நீங்க இங்க எப்படி”

“நானும் ஆனந்தியோட ப்ரண்ட்டுக்கு பிரண்டு அவள் கூட ஸ்டே பண்ணியிருக்கேன்”

“ஓ ஓகே” என அவன் சொல்லவும் அவள் நிம்மதியுடன்

”இப்ப உங்களுக்கு எப்படியிருக்கு”

“நான் நல்லாயிருக்கேன். என்னவோ இன்னிக்கு ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருக்கேன்”

“நைட்டெல்லாம் நல்ல தூக்கமா”

“ஆமாம் நல்ல தூக்கம், என்னவோ ரொம்ப நாளா இருந்த மொத்த தூக்கமும் மொத்தமா தூங்கினது போல இருக்கு” என்றான் ஈஸ்வரன்

“கனவு ஏதாவது வந்ததா”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“கனவா அப்படி எதுவும் வரலையே ஓ நிரஞ்சன் எதையாவது சொன்னானா”

“ஆமாம் பொதுவா உங்களுக்கு தூக்கத்தில கனவுகள் வரும், அதான் பிரச்சனைன்னு சொன்னாரு”

”அதுவும் சரிதான் ஆனா நேத்து எனக்கு எந்த கனவும் வரலை, ஓகே நான் போய் குளிக்கிறேன், எனக்கு ட்ரஸ் வேணும்” என ஈஸ் சொல்ல அவளோ திகைத்தாள்

”நீங்க வரும் போது ட்ரஸ் கொண்டு வரலையா”

“ஏன் இந்த வீட்ல ட்ரஸ் இல்லையா” என அவன் கேட்டபடியே உள்ளே நடந்து வீடு முழுக்க வலம் வந்தவன் அங்கு பாத்ரூம் இருப்பதைக் கண்டு

”ஓகே நான் ஃப்ரெஷாயிட்டு வர்றேன் உங்க பேர் என்ன”

“சுவாதி”

”சுவாதி, ரைட் டவல் கொண்டு வாங்க நான் குளிக்கனும்” என அவன் சொல்லிவிட்டு பாத்ரூமிற்குள் சென்றுவிட சுவாதிக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்தாள்

”என்ன இவரு ட்ரஸ் கேட்கறாரே, அதுக்கு நான் எங்க போறது” என பலமாக யோசித்தாள், நேரம் வேகமாக சென்றது, சட்டென அவளுக்கு ஒன்று தோன்றவே தனது படுக்கையறைக்கு சென்று எதையோ தேடினாள்.

சிறிது நேரத்தில் அவளுக்கு ஒரு கவர் கிடைக்கவே அதை திறந்தாள். அதில் ஆண்கள் அணியும் உடை ஒரு செட் இருப்பதைக் கண்டு நிம்மதியானாள்

”கிஷோர்க்காக வாங்கினது, அவன்தான் இல்லையே இதை இவருக்கு கொடுத்துடலாம் ஆனா ஒரு ட்ரஸ்தானே இருக்கு, இப்ப நிரஞ்சன் கேட்டா எந்த ட்ரஸ் தர்றது சே சே அப்படியில்லை, ஈஸ்வரன் ஏதோ நினைப்புல இப்படியெல்லாம் பேசறாரு, நிரஞ்சன் அப்படிப்பட்டவர் கிடையாது முதல்ல அவரை எழுப்பனும் அவர் அண்ணன் எழுந்திட்ட விசயத்தை சொல்லனும்” என நினைத்தவள் அந்நேரம்

”சுவாதி சுவாதி டவல் கொண்டா” என ஈஸ்வரன் கத்தவும் அதிர்ந்தாள்

”ஓ நான் இவரை மறந்துட்டேனே, டவல் எங்கயிருக்கு” என டவலை தேடிப் பிடித்து எடுத்துக் கொண்டு பாத்ரூமிடம் சென்றாள்

மெல்ல கதவைத் தட்டினாள்

”யாரு”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பத்மினியின் "என் மடியில் பூத்த மலரே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

”சுவாதி”

“டவல் வேணும்”

“இந்தாங்க கொண்டு வந்திருக்கேன்” என சொல்ல கதவு மெல்ல திறந்து ஒரு கை  வெளியே வந்தது, அதில் அவன் அணிந்துக் கொண்டிருந்த ஆடைகள் இருக்கவே அதை வாங்கியவள் அவன் கையில் டவலை தர அதோடு அந்த கை மறைந்து கதவு சாத்தப்பட்டது.

”உங்களுக்கு ட்ரஸ் எடுத்து வைச்சிருக்கேன் இந்தாங்க”

“வெளிய வந்து போட்டுக்கிறேன் சுவாதி” என சொல்லவும் அவளும் அமைதியாக அவ்விடம் விட்டு அவசரமாக நிரஞ்சன் உறங்கிக் கொண்டிருந்த அறைக்குச் சென்றாள்.

About the Author

Sasirekha

Sasirekha

Sasirekha's Popular stories in Chillzee KiMo

  • Edhetho ennam valarthenEdhetho ennam valarthen
  • Enaiyaalum kadhal desam nee thaanEnaiyaalum kadhal desam nee thaan
  • En mel undranukkethanai anbadiEn mel undranukkethanai anbadi
  • Ilaiya manathu inaiyum pozhuthuIlaiya manathu inaiyum pozhuthu
  • Ullathal unnai nerungugirenUllathal unnai nerungugiren
  • Maasilla unmai kadhaleMaasilla unmai kadhale
  • Unnai kaanaathu urugum nodi neramUnnai kaanaathu urugum nodi neram
  • Vannam konda vennilave vaanam vittu vaaraayoVannam konda vennilave vaanam vittu vaaraayo

Completed Stories
On-going Stories

Add comment

Comments  
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 14 - சசிரேகாmahinagaraj 2019-02-14 14:33
ரொம்ப அருமையா இருக்கு மேம்... :clap: :clap:
ஈஸ் இப்போ வரை புரியாத புதிர் தான்.. :o
கதை அருமை..
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 14 - சசிரேகாராணி 2019-02-14 12:17
கதையின் வேகம் அருமை. நிரஞ்சன் செய்வது உண்மையா மீனா யாரை காதலிப்பாள். பாவம் ஈஸ்வரன்.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 14 - சசிரேகாmadhumathi9 2019-02-14 05:56
:clap: nice epi.meena,niranjan unmaiya kaadhalikkiraargala? :thnkx: 4 this epi.waiting to read more. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 14 - சசிரேகாAdharvJo 2019-02-13 22:23
:D Anna-va vittu thambi-k treatment tharnumon ninaichen sasi ma'am facepalm baby bro escape agitaru but nanga thaan confused aga irukurom :yes: Hope Niranjan doesn't get offended....rombha innocent person kaveri kitta enama konjuraru doctor :cool: pesiye menu kuttiya kavthutaru...megala aunty reaction sollave illaye :Q:
Esh oda nilamai than rombha pavamaga irukaru but enga ponalum scene sinappa nala command panuraru so our new entry dr swetha oda route-um mathiduvinga pole irukku... over all nala suthaviduringa ellaraiyum….as u said before looks like there will be more bitter moments too :eek: cute+ very interesting update ma'am :clap: :clap: thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top