(Reading time: 11 - 21 minutes)

“அதை படிக்க வயசு எல்லாம் ஒரு கணக்கா சார்? அதில் இல்லாத விஷயங்களே இல்லை. புராணங்களில் ஆரம்பிச்சு, நீதிக் கதைகள் வரை நிறைய விஷயங்கள் தெரிஞ்சிக்கலாம்” என்று விளக்கம் வேறு கொடுக்கவும்

“இண்டரெஸ்டிங்” என்றவன் “ஓகே மா. எதுவும் வேணும்ன்னா சொல்லுங்க” என்றுவிட்டு தன் பெர்த்திற்கு சென்று விட்டான்.

சிறிது நேரத்தில் ஒரு ஒரு செட்டாக படுக்க ஆரம்பிக்க, அங்கே அங்கே லைட் அணைத்து விட்டார்களா என்று சரிபார்த்தான். நடைபாதையில் உள்ள லைட் போட்டு விட்டான். பெண்கள் இருப்பதால் சிறிது வெளிச்சம் இருக்கட்டும் என்று கூறிவிட்டான்.

அவனுடைய உதவியாளர்களில் ஒருவரை அவர்களின் ப்ரோபர்ஸ் இருந்த பெர்த் அருகே இடம் கொடுத்து அவர்களுக்குத் தேவயைனாதை செய்யச் சொன்னதோடு, அந்தப் பக்கம் வருகிறவர்களை கண்காணிக்கச் செய்தான்.

இந்தப் பக்கம் இரு உதவியாளர்களோடு ப்ரித்வி தங்கள் பெர்த்தில் படுத்துக் கொண்டான்.

வாசல் அருகில் இருப்பதால் வேறு யாரும் உள்ளே வந்தால் தெரியும் என்பதால் அதன் படி பிரித்துக் கொண்டார்கள்

எல்லோரும் படுக்கவும், கிருத்திகா மட்டும் தூங்கமால் இருப்பதை அவள் பக்கம் இருந்த லைட் வெளிச்சம் சொல்லியது.

சற்று நேரம் ஹெட் போனில் பாட்டு கேட்டுக் கொண்டு இருந்தவன், கிருத்திகா லைட் அணைத்து விட்டுப் படுக்கவும் அவனும் படுத்தான்.

நள்ளிரவு தாண்டி நெடு நேரமாகி இருந்தது. யாரோ முனகும் சத்தம் போல் கேட்க, சட்டென்று எழுந்த ப்ரித்வி, சத்தம் எங்கிருந்து வருகிறது என்று கூர்ந்து கேட்டான்.

அவன் படுத்து இருக்கும் பெர்த் அருகில் இருந்து தான் வருகிறது என்றவுடன், வேகமாக இறங்கி அந்தப் பக்கம் சென்று பார்த்தான்.

அங்கே கிருத்திகா நின்று இருந்தாள்.

“ஹலோ, என்ன ஆச்சு? ஏன் இந்த நேரத்தில் இங்கே நிற்கறீங்க மேடம்?” என்று ப்ரித்வி கேட்டான்.

“ஒன்னும் இல்லை சார். ரெஸ்ட் ரூம் போக வந்தேன்”

“இங்கே யாரோ முனகும் சத்தம் கேட்டதே “ என்று கூற, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையே என்று மறுத்து விட்டாள்.

மீண்டும் ஒரு முறை கேட்க, அவள் அதையே சொல்லவும் விட்டு விட்டான். பின் “ஓகே மேம். உங்க வேலை முடிஞ்சதுன்னா, நீங்க உங்க பெர்த்க்குப் போங்க” என்று கூறவும். கிருத்திகாவும் சென்று விட்டாள்.

அவள் சென்றவுடன் அந்த இடத்தை நோட்டமிட, வித்தியாசமாக எதுவும் தெரியவில்லை என்றாலும், ஏதோ ஒன்று நடந்து இருக்கிறது என்று அவன் மனதில் தோன்றிக் கொண்டு இருந்தது.

மீண்டும் ஒருமுறை இந்தக் கடைசியில் இருந்து, அந்தக் கடைசி வரைக்கும் நடந்து சென்றுப் பார்த்துவிட்டு, இரண்டு பக்கக் கதவுகளும் பூட்டியிருக்கிறதா என்று செக் செய்து விட்டு வந்தான்.

யோசனையோடு படுத்தவனுக்கு, அதற்குப் பிறகு ஆழ்ந்த தூக்கமில்லை. மறுநாள் காலையில் வண்டி வாராங்கல் ஸ்டேஷன் அருகே வர இருக்கும்போது , எல்லோருக்கும் ஒரு குரல் கொடுத்தான் ப்ரித்வி.

அங்கேதான் மொத்தமாக இட்லி வடை ஆர்டர் செய்து இருந்தான். மொத்தமாக ஒரு ட்ரம்மில் சாம்பார், சட்னி இருக்க, பெரிய ஹாட் கேஸ் இரண்டில் இட்லி , வடை இருந்தது. காபி , டீ தனி தனி கேன்களில் வந்து இருந்தது.

ஒவ்வொருவராக எழுந்து ரெப்ரெஷ் செய்து வரச் சொல்ல, சில மாணவர்கள்.

“ஏன் சார், இப்போவே எழுப்பி விட்டுடீங்க?” என்று சலிப்புடன் கேட்டனர்.

“நீங்க டெல்லி வரைக்குமே தூங்கிட்டே வரலாம் ப்ரோஸ். ஆனால் பிரேக்பாஸ்ட் இங்கே ஏற்பாடு பண்ணியாச்சு. சோ முடிச்சுட்டு கன்ட்னியு பண்ணுங்க” என்று எடுத்துச் சொல்லவும், சரி என்று சென்றனர்.

ஒரு சிலர் “என்ன சார், இட்லி கொடுத்து இருக்கீங்க.? ஒரு பூரி , தோசை எல்லாம் தர மாட்டீங்களா? “ என்று கேட்டனர்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "காணும் இடமெல்லாம் நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“இங்கே இது பேமஸ் பிரெண்ட்ஸ். அதோட ட்ராவலுக்கும் சேப் அண்ட் பெஸ்ட் பூட் இதுதான். “ என்று சமாதனப் படுத்தினான்.

சேர்வ் செய்ய பேன்ட்ரி ஆட்களே இருக்க, ஒவ்வொருவராக வந்து ப்ளேட்டில் எடுத்துக் கொண்டு சென்றனர். அதே போல் அளவிலும் ஒருவருக்கு இத்தனை தான் என்று கணக்கு செய்யாமல், வேண்டும் என்று கேட்டவர்களுக்கு நன்றாகவே பரிமாறப் பட்டது.

எல்லாம் முடியவும், காபி , டீ விருப்பபட்டு கேட்டுக் குடிக்க, ஒரு சிலர் மட்டும் கூல் ட்ரிங்க்ஸ் ஏதாவது கிடைக்குமா என்று கேட்டனர்.

அதற்குள் வாரங்கல் ஸ்டேஷன் வந்து இருக்கவே, சட்டென்று பிளாட்பாரம் இறங்கி சில ஆவின் மில்க் ஷேக் பாக்கெட்களும், ஸ்லைஸ் போன்ற கூல் ட்ரிங்க்ஸ்சம் வாங்கிக் கொண்டான்.

அதற்கு லைனில் நிற்கும்போது பின்னால் இருந்து இருவர் பேசுவதை அவன் கேட்க நேர்ந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.