(Reading time: 11 - 22 minutes)

தொடர்கதை - காணாய் கண்ணே - 06 - தேவி

Kaanaai kanne

ஹாய் பிரெண்ட்ஸ். போன எபிசொட்லே தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் முபப்திஆறு மணி நேரம் செல்லும் என்பதைக் கவனிக்காமல், இருபத்தி ஆறு மணி நேரம் என்று எண்ணி அதற்குத் தகுந்தார் போல் எழுதி இருந்தேன். அந்த இடத்தை இங்கே திருத்தி இருக்கிறேன் பிரெண்ட்ஸ். தொடர்ந்து உங்கள் கருத்துக்களையும், ஆதரவையும் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

முப்பத்திஆறு மணி நேரம் ரயிலில் பிரயாணம் செய்து களைத்து இருந்த எல்லோருக்கும், டெல்லி கண்டோன்மென்ட் ஸ்டேஷன் அருகே ஒரு ஹோட்டலில் ரூம் போட்டு வைத்து இருந்தார்கள் ப்ரித்வி குழுவினர்கள். டோர்மிடரி போன்ற அமைப்பில் இருபது , இருபது பேராக மூன்று ரூமும், பேராசிரியர்கள் இருவருக்கு ஒரு ரூமும் ஏற்பாடு செய்து இருந்தான். ப்ரித்வி அவன் உதவியாளர்கள் மூவருக்கும் ஒரு ரூம் போட்டு இருந்தான்.

எல்லோருக்கும் அன்று இரவு சைவத்தில் சில உணவுகளும், அசைவத்தில் இரு உணவு வகைகளும் கொடுத்து இருந்தார்கள். ரூம் சர்வீஸ் போல் அவர்கள் இருந்த அறைக்கே பெரிய பாத்திரங்களில் உணவும், தட்டுக்கள் தனியாகவும் எடுத்து வந்து, வேண்டும் என்பதைப் போட்டு சாப்பிடுமாறு அமைத்து இருந்தார்கள்.

எல்லோரையும் சாப்பிட அழைத்து, அவர்கள் முடிக்கவும் சற்று நேரம் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

அந்த மாணவர்களுக்குத் தலைவன் போல் இருந்தவன் ப்ரிதிவியிடம்,

“சார், எங்கள் டூர் ஐடனேரி என்ன?” என்று கேட்டான்.

“நாளைக்கு காலையில் பிரேக்பாஸ்ட் முடிச்சுட்டு , வி வில் மூவ் டு முகுந்த்கர்க். “ என்று சொன்னான்.

“சார், அங்கே எதுவும் ஆர்கிடேக்ச்சர் ப்ளேசஸ் இருக்கிற மாதிரி தெரியலையே.”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அங்கே போனால் உங்களுக்கேத் தெரியும் பிரெண்ட்ஸ். “ என்றவன்,

“உங்க ஸ்டடீஸ்க்கு உபயோகமா இருக்கிற மாதிரிதான் ஏற்பாடு பண்ணியிருக்கோம். டூர் என்ஜாய் பண்ற அதே நேரத்தில் இதை ஸ்டடீஸ்க்கும் யூஸ் பண்ணிக்கோங்க. சோ எல்லோரும் இப்போப் படுத்து ரெஸ்ட் எடுத்துக்கிட்டா , நாளைக்கு பிரெஷா இருக்கும்”

அவனின் சொல் கேட்டு எல்லோரும் அவர்கள் பெட்டிற்கு செல்ல, அவர்களின் வசதிகள் சரி பார்த்து விட்டு, அடுத்து பெண்கள் தங்கியிருந்த அறைக்கு வெளியில் நின்றான்.

அங்கே எல்லாம் ஒரே அரட்டையில் இருக்க, யாரும் இவனைக் கவனிக்கவில்லை.

“கேர்ள்ஸ்” என்று கூப்பிட, முதலில் கவனித்த கிருத்திகா, எழுந்து வந்தாள்.

“வாங்க சார். என்ன விஷயம்? என்று கேட்டாள்.

“கிருத்திகா , டோர் லாக் பண்ணிகோங்க. உங்களுக்கு எல்லா வசதியும் இங்கேயே இருக்கும்னு நினைக்கறேன். வேறே எதுவும் வேணும்னா இப்போவே கேட்டு வாங்கிக்கோங்க. நைட் டைம்லே எதுக்காகவும் ரூம் திறந்து வெளியில் வர வேண்டாம். மார்னிங் பிரேக்பாஸ்ட் முடிச்சுட்டு நாம் கிளம்பறோம். அதுக்குத் தகுந்த மாதிரி ரெடி ஆயிடுங்க. உங்க பிரெண்ட்ஸ்க்கும் இன்பார்ம் பண்ணிடுங்க” என்று கூறிவிட்டுச் சென்றான்.

முதல் நாள் கையை உடைச்ச அந்தப் பார்ட்டி போட்டுக் கொடுத்துருச்சுப் போலவே என்ற எண்ணியவள், ஹ.. இது எல்லாம் நமக்கு சாதரணமப்பா.. என்று சொல்லிக் கொண்டு தன் இடத்திற்குச் சென்றுப் படுத்துக் கொண்டாள்.

நல்ல ஆழ்ந்த தூக்கத்தில் அவள் கண்களுக்குள் பெரிய அரண்மனையும், அதைச் சுற்றி கோட்டைப் போலேவும் தோன்றியது. அங்கே ஏதோதோ உருவங்கள் தெரிய, என்னவென்று தெளிவாகப் பார்க்கும் முன் கனவு கலைந்து விட்டது.

கண் விழித்துப் பார்த்தவளுக்கு தான் இருக்கும் இடம் புரிய, தன்னைச் சுதாரித்துக் கொண்டு மணி பார்த்தாள். விடியலை நெருங்கிக் கொண்டு இருக்கவே, எல்லோரும் கிளம்ப வேண்டும் என்பதால், இன்னும் தூக்கம் கேட்டக் கண்களைக் கட்டுப்படுத்தி ரெஸ்ட் ரூம் சென்றுவிட்டாள்.

கிருத்திகா குளித்துக் கிளம்பி வர, மற்றவர்களும் கிளம்ப ஆரம்பித்து இருந்தார்கள்.

சற்று நேரத்தில் கதவு தட்டப் பட, திறந்தால், ஹோட்டல் பணியாளார் டீ கேன் கொண்டு வந்து இருந்தார்.

எல்லோருக்கும் டீ கொடுக்கப் பட, அது எல்லோரின் சோம்பலையும் விரட்டி அடித்து, சுறுசுறுப்பாக்கியது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சுபஸ்ரீயின் "இதயச் சிறையில் ஆயுள் கைதி..." - காதலும் மர்மமும் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

எல்லோரைவிடவும் முதலில் தயாராகி விட்டதால், தன் டிரஸ் பாக் எல்லாம் ரெடி செய்து வைத்த கிருத்திகா, ஹோட்டல் வராண்டாவில் அமர்ந்து அன்றைய பேப்பர் படித்துக் கொண்டு இருந்தாள்.

அப்போது போன் வர, எடுத்துப் பார்த்தவளுக்குத் தன் வீட்டில் இருந்து என்றவுடன் மனம் துள்ளியது.

“ஹாய் மா. குட் மார்னிங்” என்று கூற,

“குட் மார்னிங் கிருத்திகா. நான் பெரியப்பா பேசுறேன். அங்கே நல்லபடியா போய் இறங்கிட்டியா? தங்குற இடம் எல்லாம் வசதியா இருந்துச்சா?” என்று அவள் பெரியாப்பாவின் குரல் கேட்கவும், அதிசயித்து, போனில் நம்பர் சரி பார்த்தாள்.

அவள் பதில் சொல்லுமுன், ஹலோ , ஹெலோ என்று இரண்டு மூன்று தடவை அவர் பேசவும்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.