“அடக் கடவுளே. என்னை இதை விட யாரும் டேமேஜ் பண்ண முடியாது. உன்னுடைய இந்த செயற்கரிய செயலுக்கு என்னுடைய பாராட்டுக்கள். தயவு செஞ்சு இதை வெளியில் சொல்லி ஏதோ கொஞ்ச நஞ்சம் இருக்கும் பேரையும் கெடுத்துறாத தாயே” என்று ப்ரித்வி கூறவும்
“ச்சே. இப்படிச் சொல்லிடீங்களே. இதை எங்க இன்ஸ்டாகிராம் குரூப்லே போஸ்ட் பண்ணலாம்ன்னு யோசிச்சேன்” என்றாள் கிருத்திகா.
“தெய்வமே”
அவனின் பாவனையில் கலகலவென்று சிரித்தாள்.
பிறகு எல்லோரையும் கிளப்பி பிரேக் பாஸ்ட் முடித்துக் கிளம்பும்போது ஒன்பது மணியை நெருங்கி விட்டது.
முதல் நாள் அந்த வில்லன் குரூப் ஸ்டேஷன் வெளியில் வரை கிருத்திகாவோடு சேர்ந்த மாணவிகளை தொடர்ந்து வந்து இருந்தனர். வெளியில் வந்த போது மூன்று பஸ் வந்து இருக்க, அதை செல்வமும் பாலோ செய்தான்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ![]()
ஆனால் புது இடம் மற்றும் மொழித்தகராறு காரணமாக அவர்களால் கிருத்திகா தங்கியிருக்கும் இடத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை.
செல்வம் வெறியில் இருக்க, அவன் நண்பர்கள் தான் பொறுமையோடு இருக்குமாறு அமைதிப் படுத்தினார்கள்.
செல்வத்தின் நண்பன் ஒருவன் அந்த பஸ் நம்பரை நோட் செய்து இருக்க, அதை வைத்துக் காலையில் அந்த ட்ராவல்ஸ்சிற்குப் போன் செய்து , காலேஜ் ஸ்டுடென்ட்ஸ் எந்த பஸ் , எத்தனை மணிக்குக் கிளம்பினார்கள் என்ற விவரம் வாங்கிக் கொண்டார்கள்.
ப்ரித்வியின் விரட்டலில், ஒருவழியாக எல்லோரும் பஸ்ஸில் ஏறி அமரவும், சற்று நேரம் அவர்கள் தங்களை ரிலாக்ஸ் செய்த பின், அன்றைக்கு அவர்கள் செல்லும் இடத்தைப் பற்றிய விவரங்கள் சொன்னான்.
மாணவர்களிடம்,
“பிரெண்ட்ஸ், நாம பைகானர் போகணும். ஆனால் டெல்லி டு பைகானர் கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரம் போகணும். போற வழியில் முகுந்த்கர்க்கில் ஒரு ஸ்டே போட்டால், உங்க எல்லோருக்கும் பிரெஷ்ஷா இருக்கும். அதோட கட்டிடக்கலை என்பது கட்டிடம் எப்படிக் கட்டியிருக்காங்க அப்படின்னு பார்க்கிறது மட்டும் இல்லை. அந்தக் கட்டிடத்திற்கும் அந்த மக்களின் வாழ்க்கை முறைக்கும் உள்ள தொடர்பும் சேர்த்து தெரிஞ்சிக்கனும். அப்போ தான் இந்த சுற்றுலா உங்களுக்கு முழுசா உபயோகப் படும்”
“புரியலையே ப்ரோ”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
பத்மினியின் "என் மடியில் பூத்த மலரே..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
“ராஜ்புத்ராஸில் நிறைய பிரிவுகள் உண்டு. அதில் முக்கியமானவர்கள் ஷேகாவதி பிரிவினர். இவர்களின் முக்கியத் தொழில் விவசாயம்தான். ஆனால் அவர்களின் கட்டிடக் கலை மிகவும் வித்தியாசமனாது. அவர்களின் வாழ்க்கைமுறை கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை தான். ஆனால் பெண்களுக்கு என்று தனிப் பகுதிகள் இருக்கும். திருமணம் ஆனவர்கள் , அவர்கள் தங்கள் கணவர்களுடன் இருக்க, வீட்டில் இருக்கும் மற்றப் பெண்களுக்காக , தனியாக இடம் ஒதுக்கியிருப்பார்கள். அதில் அறைக்கு அறை வேறு வேறு மார்பில் கல் பதித்து இருப்பார்கள். நிறம், டிசைன் இப்படி ஏதாவது வித்தியாசம் இருக்கும். அதே போல் பக்கச் சுவர்களில் அழகான ஓவியங்களை வரைந்து வைத்து இருப்பார்கள். வண்ண வண்ண ஆடை அணிமணிகள் அணிந்து இருப்பார்கள். இவர்கள் ராஜபுத்திர அரச வம்சத்தாரோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள். இவர்களில் சிலர் இப்போதும் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றித் தெரிந்துக் கொள்ளத்தான் நாம் முகுந்த்கர்க் செல்கிறோம்.”
மாணவர்கள் மட்டுமல்லாது பேராசிர்யர்களும் அவன் கூறுவதை கவனமாகக் கேட்டுக் கொண்டார்கள்.
டெல்லியில் இருந்து புறப்பட்டு அவுட்டர் வரும்போதே தங்கள் காரை தொடர்ந்து வரும் அந்த இன்னோவா வண்டியைக் கவனித்து விட்டான் பிரிதிவி. அதில் முதல் நாள் ஸ்டேஷனில் பார்த்த அந்த இருவர், இருப்பதைக் கவனித்தவன் , யோசனைக்குச் சென்றான்.
பிரிதிவி சொன்னதைக் கேட்டுக் கொண்டு இருந்த கிருத்திகாவிற்கு, முந்தைய தினம் கனவில் தோன்றிய காட்சிகளுக்கும், இப்போது ப்ரித்வி சொன்னதைக் கேட்ட விஷயங்களுக்கும் நிறைய ஒற்றுமை இருப்பதாகத் தோன்றியது.
இந்த இடம் போவதைப் பற்றி இவளுக்கு இதுவரை தெரிந்து இராத பட்சத்தில், இப்போது இந்த இடங்கள் தன் கனவில் வரக் காரணம் என்ன? என்ற யோசனை அவளுள் எழுந்தது.
தொடரும்!
Go to Kaanaai kanne story main page
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.