(Reading time: 11 - 22 minutes)

“ஹலோ பெரியப்பா. போன் தெரியாம ஹோல்ட்லே போட்டுட்டேன். என்ன கேட்டீங்க? ஹ.. இங்கே எல்லாம் வசதியாத் தான் இருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்தில் வேறே ஊருக்குப் போறோம். அங்கே அங்கே போன் பண்றேன் பெரியப்பா. “ என்று அவர் கேள்விகளுக்குப் பதில் சொன்னாள்.

“சரிம்மா. பார்த்து ஜாக்கிரதையா இருந்துக்கோ. நீ இல்லாம வீடு நல்லாவே இல்லை. அப்போ அப்போ போன் பண்ணு” என்று கூறிவிட்டு, “உங்கம்மா பேசறா பாரு. பேசு” என்று அவள் அம்மாவிடம் கொடுத்தார்.

“கிருத்திமா..” என்று துர்கா அழைக்க,

“ஹாய் மா. எப்படி இருக்கீங்க?” என்றவள், “உங்களுக்கு ஒரு குட் நியூஸ். உங்களோட சுப்ரபாதம் இல்லாமையே, இன்னிக்கு நான் சீக்கிரம் எழுந்துட்டேன்.” என்றாள்.

“அது சரி. நான் இங்கே உன்னைக் கொஞ்சி கொஞ்சி எழுப்பற மாதிரி, யார் வந்து அங்கே எழுப்புவா?”

“என்னது நீ கொஞ்சி கொஞ்சி எழுப்பறையா? நீங்க என்னை எழுப்பற சத்தம் திருப்பதி பெருமாளுக்கே கேட்குதாம்.

“ஏய்.. என்னடி நக்கலா?”

“யா.. யா.. “ என்றவள் குரலைத் தணித்து “அம்மா, என்ன இன்னைக்கு சென்னையில் இடியுடன் கூடிய மழையாமே?” என்று கேட்கவும்

“ஏண்டி. சூரியனுக்கு எக்ஸ்ட்ரா பட்டெரி போட்ட மாதிரி , காலங்கார்த்தாலேயே வெயில் பளீர்ன்னு அடிக்குது. நீ என்னவோ ரமணன் வானிலை அறிக்கை வாசிக்கிற மாதிரி சொல்ற?” துர்கா கேட்டார்.

“ஹ. இல்லை . நம்ம வீட்டு சிங்கம், எங்கிட்ட தேன் வடிய பேசிட்டுப் போறாரே . என்ன விஷயம்?

“போடி அரட்டை. மாமா கொஞ்சம் கடுமையா இருந்தாலும், உன்கிட்ட அவருக்குப் பாசம் ஜாஸ்திடி. நீ கிளம்பி இன்னையோட ரெண்டு முழு நாள் ஓடிப் போயிடுச்சா, அதான் அவருக்குத் தேடியிருக்கும் போலே. காலையில் பூஜை முடிக்கும் போது, நீ பேசினியான்னு என்னைக் கேட்டார். உங்கப்பாவைக் கேட்டார். ரெண்டு பேரும் இல்லைன்னு சொல்லவும், பொண்ண அவ்ளோ தூரம் அனுப்பிட்டு, என்ன ஏதுன்னு விசாரிக்கறதில்லையான்னுக் கேட்டார். நான் தான் நேற்றைக்கு ட்ரைனில் இருப்பன்னுப் பேசலைன்னு சொன்னேன். ஒரு முறை முறைச்சுட்டு, அவரே உனக்குப் போன் பண்ணிட்டார்” என்றுக் கூறவும், உள்ளுக்குள் நெகிழ்ந்தாள்.

ஆனால் காட்டிக் கொள்ளாமல் “மா.. நான் அங்கே இருந்தா எப்படியும் டெய்லி ஒரு பஞ்சாயத்து வீடு தேடி வந்துருக்கும். இப்போ அவருக்கு பஞ்சாயத்துப் பண்ண ஆள் இல்லையேன்னு கவலையா ஆகிட்டார்”  என்றாள்.

“அந்த மனுஷன் அவ்ளோ ஸ்ட்ரிக்ட்டா இருக்கப்பவே, தினம் ஒரு பஞ்சாயத்து கூட்டிட்டு வர. அவர் மட்டும் கொஞ்சம் ரூல்ஸ் தளர்த்திட்டார்னா, உன் பஞ்சாயாத்துக்காக நாங்க ஐ.நா சபைக்குப் போய் நிக்கணும்”

“இருந்தாலும் உன் பொண்ணோட புகழ நீயே பரப்பக் கூடாது மை மம்மி. அதுக்குத் தனியா இருபது ரூபா டோகேன் போட்டு ஆள் செட் செய்யணும்.”

“அடிங்க. சரி. சரி ஜாக்கிரதையா போயிட்டு வா. அப்போ அப்போ போன் பண்ணு”

“ஓகே. ஓகே. உன்னை நம்பி இருக்கும் அந்த பாவப்பட்ட ஜீவன்களுக்காக , நான் கடவுள் கிட்டே வேண்டிக்கறேன். “ என்று கூறி வைத்தாள்.

அந்தக் கனவைப் பற்றிய சஞ்சலத்தில் இருந்த கிருத்திகாவிற்கு, அவள் அம்மாவுடன் பேசியதில் புது உற்சாகம் பிறந்து இருந்தது. அந்த உற்சாகத்தில் விசிலில்

“ஹேய் .மந்திரவாதி. நீ கேடிக்கு கேடி” என்று பாடிக் கொண்டேத் திரும்ப, அங்கே ப்ரித்வி நின்று இருந்தான்.

அவனைக் கண்டதும் சற்றுத் திணறிவிட்டு

“குட் மார்னிங் , பிரின்ஸ்” என்றாள்.

“பிரின்ஸ்சா? என்று பிரிதிவி கேட்க,

“ஆமாம். ப்ரித்விராஜ் பிரின்ஸ் தானே. ”  என்றாள்.

“அந்தக் காலத்துலே பிரின்சோட பேரு ப்ரித்விராஜ். ஆனால் நான் சாதரண மனுஷன்மா.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "காணும் இடமெல்லாம் நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“ஐயே .. என்ன சார் இதுக்கு எல்லாம் பயந்துட்டு”

என்னை பிரின்ஸ்ன்னு நீ சொல்றதைக் கேட்டுட்டு, ஒரு கூட்டம் இன்னும் மன்னர் பரம்பரை ஒழியவில்லையான்னு ஹஸ்டாக் போட்டுக் கழுவி ஊத்துவாங்க. எனக்கு ஏன் இந்த வம்பு சொல்லு?

“ஹ்ம்ம்.. ஆனால் சார், ஒரு சின்ன திருத்தம். நான் பிரின்ஸ்ன்னு சொன்னது அண்ணாமலைலே ரஜினிய சொல்ற பிரின்ஸ்” எனவும்

“வாட் ?” என்று அதிர்ந்தான்.

“ஆமாம் சார். அதில் தானே ரஜினி அவரே பால்காரர், பிரின்ஸ், திருடன்னு எல்லா கெட் அப்பிலும் வருவார். நீங்களும் இங்கே யார் கேட்டாலும், ரெஸ்பாண்ட் பண்றீங்களே. முதலில் ஆல் இன் ஆல் அழகு ராஜான்னு சொல்லலாம்ன்னு நினைச்சேன். அப்புறம் தான் உங்கப் பேருக்கும் பொருத்தமா இருக்குமேன்னு பிரின்ஸ்ன்னு சொன்னேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.