(Reading time: 12 - 23 minutes)

தொடர்கதை - காணாய் கண்ணே - 07 - தேவி

Kaanaai kanne

ஸ் புறப்பட்ட கொஞ்ச நேரம் ஒரே கொண்டாட்டம் தான். வடஇந்திய வாகனம் என்பதால், டிரைவரிடம் ஹிந்தி பாட்டுக்களே இருக்க, மாணவ செல்வங்கள் ஆளுக்கு ஒரு பென் டிரைவ், சிடி என்று கொடுத்து போடச் சொல்லி தமிழ் பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டனர்.

மொத்தம் இருந்த மாணவ, மாணவிகளை மூன்று வண்டியிலும் பிரித்து வரச் செய்து இருந்தான் ப்ரித்வி. ஒரு வாகனம் முழுதும் மாணவிகளாக வருவது பாதுகாப்பு குறைவு என்று எண்ணி , இந்த ஏற்பாடு செய்து இருந்தான்.

டெல்லியில் இருந்து முகுந்த்கர்க் செல்ல கிட்டத்தட்ட ஆறு மணி நேரமானது. இடையில் ஒரு இடத்தில் டிரைவருக்கு சற்று ஓய்வு கொடுக்கவும், மற்றவர்கள் தங்களை ரிலாக்ஸ் செய்யவும் வசதியாய் இருந்தது.

முகுந்த்கர்க் சென்று சேர்ந்த பின் அங்கிருந்த ஹவேலி ஒன்றில் தங்குவதற்கு இடம் கொடுக்கப் பட்டது. எல்லோரும் அந்த இடத்தை மேலும் கீழும் சுற்றிப் பார்த்தனர்.

அங்கிருந்த மிகப் பெரிய ஹாலில் ஒன்று கூட, ப்ரித்வி விவரம் சொல்ல ஆரம்பித்தான்.

“இந்த இடம் பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டபப்ட்ட கட்டிடம். இதற்கு பேர் ஹவேலி. கட்டிடக் கலைப் பற்றிப் படிக்கும் உங்களுக்கு இதைப் பற்றித் தெரிந்து இருக்குமே. உங்களில் யாராவது விளக்கமாகச் சொல்லுங்கள்” என்று கேட்க, கிருத்திகா முன்னாடி வந்தாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“பிரெண்ட்ஸ், ஹவேலி என்பது பல்வேறு நபர்கள் ஒரே இடத்தில் தங்குவது. நாம இப்போ சொல்ற மேன்ஷன், ஹோட்டல், ஹாஸ்டல் இது எல்லாம் தான் அந்த காலத்திலே ஹவேலின்னு சொல்றாங்க. அப்போ எல்லாம் ஒரு குடும்பத்தில் நிறைய பிள்ளைகள் என்பதாலும், கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை என்பதாலும் இப்படி இடத்தில் வாழ்க்கை நடத்தி இருக்காங்க” என்று கூறினாள்.

அவளின் பேச்சைக் கேட்ட ப்ரித்வி “எஸ், இவங்க சொல்றது கரெக்ட் தான். அதோட இந்தக் கட்டிட முறையில் அவங்க பொதுவான வேலைகளுக்கு பொதுவான இடங்களும், ப்ரைவசி சம்பந்தப் பட்ட விஷயங்களுக்கு தனித் தனி அறைகளும் கட்டியிருக்காங்க. எக்ஸாம்பிள் சமையல், துணி துவைக்கும் இடம் , அந்தக் காலத்தில் எல்லாம் கை வேலை தான் இல்லையா. அதற்கு ஏற்ற இடங்களை வீட்டிற்குள்ளேயே பொதுவாக கட்டியிருக்காங்க. அதே சமயம் ஒரு குடும்பத்தினருக்கான அறை, அவர்கள் பொருட்கள் வைக்கும் இடம் எல்லாம் தனியாக இருக்கும். அநேகமாக ஒரே குடும்பம் தான் இங்கே இருப்பார்கள். இந்த சின்ன ஊரில் சில ஹவேலிக்கள் தான் இருக்கும். “ என்று சொன்னான்.

மேலும் தொடர்ந்து, “இன்றைக்கு இங்கே தான் தங்கப் போகிறோம். கெஸ்ட் ஹவுசாக மாறிய மூன்றடுக்கு ஹவேலி இது. தளத்திற்கு பத்து அறைகள் இருக்கும். ஒரு அறையில் மூன்று பேர்கள் தங்கிக் கொள்ளலாம். ஹவேலியில் உள்ள மற்ற இடங்களை எல்லோரும் பார்த்துவிட்டு வரலாம். அங்கே நிறைய ராஜபுத்திரர்களின் ஒரிஜினல் பெயிண்டிங் வரையப் பட்டு இருக்கும். நீங்கள் போட்டோ எடுத்துக் கொள்ளவும் சேர்த்து பெர்மிசன் வாங்கி இருக்கிறோம். இந்த இடத்தைப் பற்றிய மற்ற விவரங்கள் எதுவானாலும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இன்னும் ஒரு மணி நேரத்தில் ரெப்ரெஷ் செய்து விட்டு வந்தால், ஊருக்குள் சென்று ஒரு முறைப் பார்த்துவிட்டு வரலாம். “ என்று கூற, எல்லோரும் சென்றார்கள்.

அவர்கள் செல்லவும் வெளியில் வந்த ப்ரித்வி ஒரு இடத்தைப் பார்க்க, அங்கே அந்த இன்னோவா கார் நின்று இருந்தது.

சற்று யோசனையோடு இருந்தவன், சுற்றிலும் பார்த்து விட்டு தன் போன் எடுத்துப் பேசினான்.

“சார், வண்டி நம்பர் .... .... “ என்று கூறியவன் “இந்த கார் இன்று காலையில் இருந்து தொடர்ந்து வந்துட்டு இருக்காங்க. எனக்கு டிடைல்ஸ் வேணும்”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "காணும் இடமெல்லாம் நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

எதிர்புறம் பேசியவர் “வண்டி டெல்லி ரெஜிஸ்ட்ரேஷன் இல்லையா?” என்று கேட்டார்.

“எஸ். ஆல்சோ டூரிஸ்ட் வண்டிதான். எனக்கு யார் எடுத்து இருக்காங்கன்னு விவரம் வேணும்”

“எஸ். உடனே விசாரிச்சு சொல்றேன்” என்று எதிர்புறம் இருப்பவர் வைத்ததும், மீண்டும் அங்கே எட்டிப் பார்க்க அந்த இன்னோவா இல்லை. சற்றே குழப்பமாக இருந்தவன், விவரங்கள் தெரியவும் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டு ஹவேலி உள்ளே சென்றான்.

ப்ரித்வியின் உதவியாளர்கள் அவனை அவர்கள் அறைக்கு அழைத்துச் செல்ல, அங்கே சென்று ரெப்ரெஷ் செய்து வந்தான்.

உதவியாளர்களை அழைத்து மொத்தம் இருப்பவர்களை இருபது இருபது பேராக பிரித்துக் கொள்ளச் சொன்னான்.

“உங்க லிஸ்ட்லே இருக்கிறவங்களை நீங்க தான் பார்த்துக்கணும். நம்ம ஐடேனரி காபி உங்ககிட்டே இருக்கு இல்லையா. அதன்படி எங்கே எங்கே போறோமோ அவங்களை அழைத்துச் சென்று விட்டு, எங்கே வந்து சேரனுமோ அங்கே வந்து சேர்ந்துரனும். அவர்கள் சந்தேகங்களுக்கு புரியற மாதிரி விளக்கம் சொல்லுங்க. முக்கியமா பொறுமையா சொல்லுங்க. உங்களுக்கு எதிலாவது சந்தேகம் இருந்தால் எனக்கு கால் பண்ணுங்க. நான் மூணு குரூப்லே ஒரு இடத்தில் இருப்பேன். எனக்குச் சொன்னால் உங்க உதவிக்கு உடனே வருவேன். மற்றபடி சாப்பாடு நேரம் எல்லாம் எல்லோரும் ஒரே இடத்தில் தான் . புரிந்ததா?” என்றுக் கேட்க, அவர்களும் தலை ஆட்டினர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.