(Reading time: 12 - 23 minutes)

“வேண்டாம் பிரின்ஸ்”

“ஏன் ? பயமா?

“ஹ. ஹ. பயமா ... போலீஸ்க்கு போனா, எங்க வீட்டுப் பெரியவங்கள வரச் சொல்லுவாங்க. அவங்களை ஏன் இவ்ளோ தூரம் வரச் சொல்லணும். பாவம்”

“பாவமா? உங்க வீட்டில் உனக்காகன்னா வரமாட்டாங்களா?

“அவங்க வந்துருவாங்க பிரின்ஸ். ஆனால் அந்த அடி வாங்கியவன் தான் பாவம்”

“அடி வாங்கியவன் மேலே எதுக்கு பாவபடணும்?

நான் ஏற்கனவே ஐஸ் ஒத்தடம் கொடுக்குமளவிற்கு உதைச்சு அனுப்பி வச்சுருக்கேன். எங்க பெரியப்பா வந்தார்ன்னா பாமிலியே இல்லாதவனுக்கு பாமிலி ப்ளன்னிங் பண்ணி விட்டுடுவார் . அவன் பாவம்லே? “ என்றுக் கிருத்திகா கேட்கவும், ப்ரிதிவி அவளை ஏற இறங்கப் பார்த்தான்.

“உங்க ப்ரொபசர் கிட்டயாவது சொல்லலாமா? இல்லை அதுக்கும் ஏதாவது பாவக் கதை வச்சு இருக்கீங்களா?

“நிச்சயம் கதை இருக்கு. “

“அது என்ன?

“நான் பாமிலி பிளானிங் கதையச் சொன்னால், அவர் கோமாவில் போயிடுவாரே ? அப்போ அதுவும் ஐயோ பாவம் கதை தானே?

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“ஹ்ம்ம்.. சுத்தம். அப்போ நீங்க ஜான்சி ராணியாத் தான் சுத்துவீங்க. மக்கள் தான் பாவம் இல்லையா?

“நோ. நோ. மீ பேபி தான். எங்கிட்ட யாரவது வாலாட்டினா தான் ரவுடி பேபியா மாறிடுவேன்”

“அம்மா தாயே ரவுடி பேபி. வாங்க போய் குரூப்லே ஐக்கியமாகலாம்” என்றுக் கூறி அவளை அழைத்துக் கொண்டு சென்றான். செல்லும்போதே நாலாபுறமும் கண்கள் சுற்ற, அந்த இன்னோவாவை சற்றுத் தூரத்தில் கண்டவன், அடிபட்டவர்கள் இரண்டு பேரும் அந்தக் காரில் செல்வதைக் கண்டான்.

அதோடு அந்த அடிபட்டவர்கள் பார்க்க இவர்களை பின் தொடர்ந்தவன் போல் தெரியவில்லை. அவர்களின் கலரும், மீசையும், லோக்கல் ஆட்கள் போல் இருந்ததைக் குறித்துக் கொண்டான்.

எல்லோருமாக ஊர் சுற்றி விட்டு அவர்கள் தங்கியிருந்த ஹவேலிக்குச் சென்று இரவு உணவு உண்டுவிட்டு, தங்கள் அறைக்குச் சென்றனர்.

ப்ரித்வி மீண்டும் கிருத்திகாவிடம் ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லிவிட்டு, தானே சென்று அங்கிருந்த மற்ற வழிகள் எல்லாம் செக் செய்து விட்டு வந்தான். மற்றவர்கள் உறங்கச் சென்று இருந்ததால் அவனின் சோதனை எல்லாம் யாருக்கும் தெரியவில்லை.

ஹவேலிக்கு ஒரே வாசல் தான். அதுவும் பெரிய கோட்டை வாசல் போல் இருந்தது. மேலே மொட்டை மாடியில் மட்டுமே வெளியில் இருந்து வர முடியும். அங்கு இருக்கும் கதவும் பூட்டியிருப்பதைச் சரிப் பார்த்துவிட்டு வந்தான் ப்ரித்வி.

இரவு படுத்ததும் சற்று நேரத்தில் க்ருதிகாவிற்கு கனவு வந்தது. இந்த முறையும் கனவில் முகம் தெரியவில்லை. ஆனால் வார்த்தைகள் தெளிவாக கேட்டது.

ஒரு பல்லக்கில் இரு பக்கமும் திரைகள் தொங்கவிடப் பட்டு இருக்க, உள்ளே ஒரு பெண் அமர்ந்து இருந்தாள். அங்கிருந்த பல்லக்குத் தூக்கியவர்கள் காயம்பட்டு இருக்க, உள்ளே அமர்ந்து இருந்த பெண்ணை நோக்கி, முகம் மறைத்த இரு நபர்கள் தங்கள் கைகளை நீட்டிக் கொண்டு இருந்தனர்.

தூரத்தில் இருந்து அதைப் பார்த்த ஒரு வீரன் குதிரையில் வேகமாக அருகில் வருவதற்குள், அந்த இருவரின் கைகளும் வெட்டப் பட்டு இருந்தன.

அந்தக் குதிரை வீரன் மின்னல் வேகத்தில் அவர்கள் அருகில் வந்து இருக்க , அதை விடவும் அதிக வேகத்தில் அந்த வெட்டுப் பட்டுக் கிடந்த கைகள் கீழே இருந்தன. அந்த முகம் மறைத்த நபர்கள் குதிரை சத்தம் கேட்டு ஓடி விட்டு இருந்தனர்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மகியின் "வேலன்டைன்ஸ் டே" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

அதைப் பார்த்த வீரன், ராஜபுத்திரப் பெண்கள் அன்னியருக்கு முகம் காட்ட மாட்டார்கள் என்பதால் , அதைப் பற்றிக் கவலைப் படாமல் அந்த பல்லக்கையும், அதன் அலங்காரத்தையும் கண்டு, நிச்சயம் ராஜாக்களின் வம்சமாகத் தான் இருக்க வேண்டும் என்று எண்ணினான்.

அதன்படியே

“தங்களுக்கு ஒன்றும் ஆபத்து இல்லையே தேவி? “ என்று கேட்க, யார் என்று திரையின் வழியாகப் பார்த்த அந்தப் பெண்ணுக்கு முகம் சரியாகத் தெரியவில்லை. எனினும் வந்த வேகத்தைக் கணித்ததால், நிச்சயம் படை வீரராக இருக்க வேண்டும் என்று எண்ணினாள்.

அவனின் கேள்விக்குப் பதிலாக “ எனக்கு என்ன ஆபத்து வரப் போகிறது வீரரே?. அந்தக் கோழைகள் தான் பாவம்” என்று பதில் கொடுத்தாள்.

இன்றைய சம்பவத்தைப் போலவே அந்தக் கனவும் இருக்க, திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள் கிருத்திகா.

தொடரும்!

Episode # 06

Episode # 08

Go to Kaanaai kanne story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.