(Reading time: 12 - 24 minutes)

தொடர்கதை - காணாய் கண்ணே - 08 - தேவி

Kaanaai kanne

கிருத்திகாவிற்கு சில நாட்களாக நடக்கும் நிகழ்வுகள் கனவிலும் தோன்றுவது ஏன் என்று புரியவில்லை. நடப்பதற்கு முன் என்றாலும் ஒரு எச்சரிக்கை போலே என்று எண்ணலாம். நடந்த பின் ஏன் என்ற யோசனை ஓடியது.

அதிலும் அந்த பல்லக்கில் இருந்த உருவமும், குரலும் அவளைப் போல் இருந்ததோ என்று சந்தேகம்.

இதுவரை வந்த கனவைக் கோர்வையாக யோசித்தவளுக்கு அடுத்து என்ன நடக்கும்  என்று குறுகுறுப்பாக இருந்தது

மறுநாள் காலையில் ப்ரேக்பாஸ்ட் முடித்துவிட்டு எல்லோரும் அந்த ஊரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினார்கள்.

முதல் நாள் போலவே மூன்று குழுக்களாகப் பிரிந்தவர்கள், ப்ரோபாசர்ஸ் இருவரும், ப்ரித்வியும் அந்தக் குழுவை வழிநடத்தினார்.

முதலில் நேராக அங்கிருந்த புகழ் பெற்ற சிவன் கோவிலுக்கும், கோபிநாத் கோவிலுக்கும் சென்றனர்.

இரு கோவில்களும் ஷெகாவத் பிரிவினரால் கட்டப்பட்டது. வடஇந்தியக் கோவில்களிலும் இவர்களின் கட்டிட முறை வித்தியாசமானது. அதைப் பற்றிய விவரங்கள் எல்லாம் ப்ரித்வியின் உதவியாளர்கள் கூற, மாணவர்கள் அவர்களின் சந்தேகங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தனர்.

காலையில் கிளம்பியதிலிருந்து ப்ரித்வி சுற்றி சுற்றிப் பார்த்தபடியே வர, முதல் நாள் இன்னோவாவில் தொடர்ந்தவர்கள் இன்றைக்குப் பின் தொடரவில்லை என்பதைக் கண்டு கொண்டான். என்றாலும் கவனத்தோடே இருந்தான்.

மதியம் எல்லோருக்கும் சாப்பாடு ஏற்பாடு செய்யப் பட்டு இருக்க, அந்த ஹவேலிக்குச் சென்று சாப்பிட்டு விட்டு வந்தார்கள்.

ஹவேலியில் சாப்பிடும் போதே ,

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“கய்ஸ், உங்க திங்க்ஸ் எல்லாம் பாக் பண்ணி நம்ம பஸ்சில் ஏற்றிடுங்க. இப்போ நாம இந்த ஊரோட கோட்டையைப் பார்த்துட்டு , ஈவ்னிங் அப்படியே பிகானர் புறப்படறோம். சோ எதுவும் விட்டுடாம இருக்கச் செக் பண்ணிக்கோங்க. முக்கியமா உங்க பர்ஸ், செல் போன், கார்ட்ஸ், சார்ஜர், போட்டோஸ் எடுத்துட்டு வந்து இருந்தா அதை முதலில் எடுத்து வச்சுக்கோங்க. மற்ற ஏதாவது மிஸ் ஆனாலும் நாம வாங்கிக்கலாம்” என்று பிரிதிவி கூறினான்.

அதற்கு “ப்ரோ, ப்ளேயிங் கார்ட்ஸ் எங்க பாக்கெட்லேயே இருக்கு” என்று ஒரு மாணவன் கூற,

இன்னொருவனோ “ப்ரோ, அது என்ன போட்டோஸ் சொல்றீங்க? இப்போ எல்லாமே மொபைல்தானே. பிசிகல் போட்டோஸ் எல்லாம் யாரு எடுத்துட்டு வருவா?” என்று வினவினான்.

“தம்பி, ப்ளேயிங் கார்ட்ஸ் மிஸ் ஆனா வாங்கிக்கலாம். உங்க ஐடி கார்ட்ஸ், முக்கியமா டெபிட் கார்டு மிஸ் ஆனால் அந்த ப்ளேயிங் கார்டு கூட உங்களால வாங்க முடியாம போயிடும். இது லாங் டூர் என்பதால் உங்க பாமிலி மெம்பெர்ஸ், உங்களுக்குப் பிடிச்சவங்க போட்டோஸ் யாரவது எடுத்துட்டு வந்துருக்க வாய்ப்பு இருக்கு இல்லையா. டேபிள் மேலே வச்சுட்டு மறந்துடக் கூடாதுன்னு தான் சொல்றேன். “ பிரித்வி பொறுமையாக விளக்கிச் சொல்ல,  சாப்பிட்டு முடித்த பின் அவரவர் பொருட்களை எடுத்து வைத்தனர்.

சரியாக ஒருமணி நேரத்தில் எல்லோரையும் கிளம்பச் சொன்னவன் இவர்கள் தங்கியிருந்த அறைகளைப் போய் ஒருமுறை செக் செய்துவிட்டே வந்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சுபஸ்ரீயின் "இதயச் சிறையில் ஆயுள் கைதி..." - காதலும் மர்மமும் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

எல்லாம் சரியாக இருக்கவே, நேராக அந்த ஊரில் உள்ள கோட்டைக்குச் சென்றார்கள். கோட்டையைப் பற்றிச் சொல்லும்போது ஷெகாவத் பிரிவினர் ஆட்சி செய்த போது ஊரில் ஒவ்வொரு பணக்காரரும் இதே போல் கோட்டைக் கட்டிக் கொண்டு இருந்ததாகவும், சமூக மாற்றம் மற்றும் படையெடுப்புகளின் காரணமாக அவை அழிந்து விட்டதாகவும் அந்த ஊரில் இருந்தவர்கள் கூறினார்கள்.

இந்தக் கோட்டையை முழுதும் சுற்றிப் பார்த்தவர்கள் அதில் பல குடும்பங்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் அங்கே அங்கே கிடைத்ததைப் பார்த்து வியந்தனர்.

மாலை வரை அங்கேயே கழிய, சரியாக சூரியன் அஸ்தமிக்கும் நேரம் கோட்டையின் உச்சியில் நின்று சூரிய அஸ்தமனத்தை ரசித்தனர்.

எல்லோரும் அதில் லயித்து இருக்க, ப்ரித்விக்குப் போன் வந்தது. முதல்நாள் அவன் கேட்டு இருந்த தகவல்களோடு, அந்த இன்னோவா காரை வாடகைக்கு எடுத்தவர்கள் முகவரி மட்டுமில்லாது, மொத்த விவரமும் தெரிந்து கொண்டு ப்ரித்வியிடம் பேசினார்கள்.

“சார், அந்த இன்னோவா டெல்லி ...... ட்ரவல்ஸ் சேர்ந்தது. நேத்திக்கு காலையில் டெல்லி கண்டோன்மென்ட் ஸ்டேஷன் பக்கத்தில் இருந்து வண்டி எடுத்து இருக்காங்க. டிரைவர் வேண்டாம்னு சொல்லிட்டு ஸெல்ப் டிரைவிங்கில் வராங்க. அவங்க சென்னையைச் சேர்ந்தவங்க. அதில் ஒருவன் இப்போ அங்கே இருக்கிற ஆளுங்கட்சியில் செல்வாக்கானவரின் மகன். வர்ற தேர்தலில் எம்.எல்.ஏ சீட்டுக்கு ட்ரை பண்ணிட்டு இருக்கார். ஆனால் அவர் பையன் மோசமானவன். எல்லாக் கெட்டப் பழக்கமும் உண்டு போலே. அதிலும் லேடீஸ் விஷயத்தில் மோசம் என்று சொல்கிறார்கள். அவனால் கொஞ்சநாள் முன்னாடி பிரச்சினை ஆகி விட்டதாம். தேர்தல் நேரத்தில் பிரச்சினை வரக் கூடாது என்று தான் அந்த அரசியல்வாதி அவனை வெளியூர் அனுப்பி இருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். அவரின் மகன் அந்த நால்வர் கும்பலில் ஒருவன். அவரின் சிபாரிசில் தான் அந்த வண்டி அவர்களுக்குக் கிடைத்தது” என்று மொத்த விவரமும் சொன்னார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.