(Reading time: 10 - 19 minutes)

தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 22 - சுபஸ்ரீ

idhaya siraiyil aayul kaithi

ன் தந்தை ராமமூர்த்தியை கண்ட ஆகாஷ் மனதில் ஆயிரம் வினாக்கள் எழுந்தன. அவன் முகத்தை வைத்தே யூகித்தவர்.

“நான் மட்டும்தான் இங்க வந்திருக்கேன் . . அம்மா யு.எஸ்.ல லலிதா வீட்ல இருக்கா. நீ எப்படிடா இருக்க?” என்றார். தந்தைக்கே உரித்த பாசத்தை வெளிக்காட்டியது அவர் குரல். வாஞ்சையோடு தலையை கோதினார்.

“நல்லா இருக்கேன் பா” என்றான் ஆகாஷ். இன்னமும் அவன் கைகள் அவரை வளைத்தபடியே இருந்தது.

“சுவாதிய உங்களுக்கு தெரியுமா? அங்க நீங்க இதை சொல்லவே இல்ல” என்றான்.

அவனை தன் அருகிலேயே அமரும்படி செய்கை செய்தவர் “சுவாதியை தெரியும் . .ஆனா சுவாதி சாருவோட சிஸ்டர்னு  இப்ப சமீபமாதான் எனக்கே தெரியும்”

“நீங்க  இத்தன வருஷமா மூலிகைய காப்பாத்துற விஷயம் சொல்லவே இல்ல”  கொஞ்சம் வருத்தம் தொனித்தது.

“இது சீக்ரட் மிஷின்டா எல்லார்கிட்டயும் சொல்லிக்கிட்டு இருக்க முடியுமா கண்ணா?” என்றார். ஆனாலும் தன்னிடம் சொல்லவில்லை என்கிற வருத்தம் ஆகாஷ் முகத்தில் இல்லாமல் இல்லை.

மற்றவர்கள் தந்தை மகனுக்கு இடையே வராமல் வெறுமனே பார்வையாளர்களாக மட்டுமே இருந்தனர்.

“சரி நீ என்ன ப்ளான் போட்டிருக்க சொல்லு?” விஷயத்தை தொட்டார்

“சூன்யம் வெச்சிட்டேன்” என சுருக்கமாக முடித்துவிட்டான்.

“கமான் ஆகாஷ் விளையாடாத” லேசாக கோப்பட்டார்.

ஆகாஷ் பத்ரிநாத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெற்றி புன்னகையோடு . .  “பெர்வெக்டா ஒர்க் ஆகுதுபா”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

இவன் எதோ விளையாடுகிறான் என நினைத்த ராமமூர்த்தி. பத்ரிநாத்தை கேள்விக்குறியோடு பார்த்தார்.

பத்ரிநாத் ஆகாஷ் சொல்வது உண்மை என்பதை தலையசைத்து உறிதி செய்தார்.

இதற்கிடையில் “சூன்யமா?” சாரு உதடுகள் அசைந்தன இருப்பினும் வெளியே கேட்க தயக்கமாக இருந்தது..

இத்தனை நாள் ஆகாஷ் எதுவும் சொல்லாமல் நழுவிக் கொண்டிருந்தான். ஆகையால் இன்று கேட்டே விடுவது என்னும் தீவிரம் அவளுள். “எல்லாருக்கும் புரியுமபடி சொல்லேன்” என அவள் கேட்ட அதே நொடி பத்ரிநாத்தின் செல்போன் அலற அதில் அவள் குரல் காணாமல் போனது. அதற்கு மேல் அவளுக்கு பேச சந்தர்பமே கிட்டவில்லை.

செல்போனை காதில் வைத்தவர் . . “ஓ . .ஓ.கே” என சில வார்த்தைகள் மட்டுமே பேசிக் கொண்டே ஆகாஷிடம் தன் கட்டை விரலை உயர்த்தி காண்பித்தார்.

போனை கட் செய்தவர் “ஆகாஷ் உன்னோட பிளான் வொர்அவுட் ஆகுது . . லெட்ஸ் கோ” என யாரிடமும் எதையும் சொல்லாமல் வேகமாக நகர்ந்தார். ஆகாஷ் பின்தொடர்ந்தான்.

மற்றவர்களும் ஆவலாக அவர்களை தொடர்ந்தனர். ஆனால் அங்கு வரும்போது எப்படி தனிதனியாக வெவ்வேறு பாதைகளில் வந்தனரோ அதையே பின்பற்றினர்.

ஆசிரமத்திறக்கு சற்றே தொலைவில் பல சேனல்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. தொலைக்காட்சி நிருபர்களும் பத்திரிக்கை நிருபர்களும் நிறைய பேர் கூட்டமாக இருந்தனர்.

அதில் பல பேர் பாகுபலியை போல கேமராக்களை தங்கள் தோளில் வைத்து ஏங்கிளை சரி பார்த்துக் கொண்டிருந்தனர். வேறு சிலரோ கையடக்க கேமரா இன்னும் சிலரோ செல்போன் கேமராவே போதுமென இருந்தனர்.

அவர்களை காணவும் . . என்ன நடக்கிறது எனத் தெரிந்துக் கொள்ளவும் பொதுமக்கள் கூடியிருந்தனர். அந்த இடம். எப்பொழுதும் இருப்பதைவிட மாறுப்பட்டு காணப்பட்டது. எந்த அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது.

கூட்டத்தின் நடுவே தொழிலதிபர் போர்வையில் மூலிகைகளை கடத்தும் துரை மற்றும் ஆசிரமத்தில் இருக்கும் அவன் இரண்டு கூட்டாளிகள் நின்றிருந்தனர். அத்தனை மைக்கும் கேமராவும் அவர்களை நோக்கி நீண்டிருந்தது. சில போட்டேகிராபர்கள் அவ்வபொழுது மின்னல் அடித்தார்கள்.

“இங்க மூலிகை கடத்துராங்கனு உங்களுக்கு எப்படி தெரியும்?” மைக் பிடித்த ஒருவர் கேட்க

இரண்டு கூட்டாளிகளில் ஒருவன் “ரொம்ப வருசமா இது நடக்குது . . ரெண்டு மூணு பேரா வருவாங்க மூலிகை பரிப்பாங்க . . அப்புறம் ஆள் எஸ்கேப்”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "காணும் இடமெல்லாம் நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“நீங்க பாத்திருக்கிங்களா?”

“சாமி சத்தியமா என் ரெண்டு கண்ணால பாத்திருக்கேங்க” என அவன் மைக் மேல் சத்தியம் செய்தான்.

“எங்க துரை சார்தான் அல்லாத்தையும் காப்பாத்தினாரு” என மற்றொரு கூட்டாளி தன் பங்கிற்கு பேசினான்.

“கடத்தின மூலிகைகள் எங்க இருக்கு?” இன்னொரு மைக் கேட்க . .

“யாருக்கும் தெரியாம இந்த மலைக்கு அந்தாண்ட மலைல ரகசியமா மூலிகைகல வெச்சிருக்காரு” என பதிலளித்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.