(Reading time: 10 - 19 minutes)

“இந்த ஆளுக்கு பணபலம் ஆள்பலம் ரெண்டுமே அதிகம் . . அதனால டைரக்டா மோதினா நாம காணம போயிடுவோம். இப்ப இவன் எல்லார் கண்ணுலயும் பட்டுட்டான். இவன் நடந்தா நியூஸ் உட்காந்தா நியூஸ்.

“இப்ப இவனால் எதையும் செய்ய முடியாது. கொஞ்ச நாள் எப்படியும் அமைதியாதான் இருப்பான். அந்த டைமை நாம பயன்படுத்திக்கனும்”

“சரி இவன் பத்தின விஷயங்கள் எப்படி டிரெண்டிங்ல இருந்திக்கிட்டே இருக்கும்? வேற விஷயங்கள் இதை முந்தினா?” சந்தேகமும் கவலையும் தீவிரமானது ராமமூர்த்திக்கு.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அப்பா இந்த வைரல் டிரெண்டிங் இதெல்லதம் மக்கள் செய்றாங்க அப்படினு சொல்றது ஒரளவுதான் உண்மை. இதுக்குனே சில ஐ.டி கம்பெனிகள் இருக்கு இவங்க மீம்ஸ் கிரியேட் பண்றது ஒரு செய்திய டிரெண்ட் பண்றது இதை எல்லாம் பக்காவ செய்றாங்க.”

“நிஜமாவா?” வாயைபிளந்தார் ராம்மூர்த்தி

“ஆமாப்பா. . ஆனா இதுக்கு காசு பணம் துட்டு மணி கொடுத்தே ஆகணும்” என்றான் நக்கலாக ஆகாஷ்.

“சரி பொதுநல வழக்கு போட்டா அதுல ஜெப்பீங்கனு உறுதியா சொல்ல முடியாதே . . அங்க அவன் பணமும் படையும் பேசாதா?”

“வின் பண்ற சான்ஸ் பிப்டி பிப்டி தான் ஆனா இவன் மூலிகை கடத்தல் செய்ய முடியாது. உளவியல் ரீதியாவும் பாதிப்பு அடைஞ்சிருக்கான். இவனோட லிங் இருந்தா ஆபத்துனு சிலர் விலகவும் ஆரம்பிப்பாங்க”

அதற்குள் பத்ரிநாத் போன் செய்து “மணி சங்கர் ரெண்டு பேரையும் கவனமா பாத்துக்கோங்க . . அவங்க உயிருக்கு ஆபத்து இருக்கு”

“ஆசிரமத்துல இருக்கிற துரை ஆளுங்கதானே?” ராமமூர்த்தி கேட்க

“ஆமாம்”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "காயத்ரி மந்திரத்தை" - சமூக தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

அடுத்து வந்த நாட்களில் மூலிகைகள் வைக்கபட்டிருந்த இடத்தை வனதுறை உதவியோடு காவல்துறை அடைந்தனர். அங்கிருந்த துரையின் ஆட்கள் ஓட்டம் பிடித்தனர். அந்த இடம் முழுவதுமாக காவல்துறை கட்டுப்பாட்டிற்க்குள் வந்தது. சில மீடியாவும் அந்த இடத்தை அடைந்தனர்.

சில வனத்துறை அதிகாரிகள் துரையின் ஆட்களாக இருந்ததால் அவர்கள் நிலைமை மோசமாகியது. என்ன சொல்வது என திணறினார்கள்.

சுவாதிக்கு ஆகாஷ் மேலிருந்த கோபம் வருத்தமெல்லாம் நீங்கி அவன் மேல் நல்ல மதிப்பு உண்டாகி இருந்தது.

இயற்கை ஆர்வளர் ஒருவர் நம் மூலிகைகல பாதுகாக்க சட்டம் வேண்டும் என பொதுநல வழக்கு ஒன்றை தொடங்கினார். இதற்கு முன் இதையொட்டி இருந்த விஷயங்கள் கிடப்பில் கடந்தன. ஆனால் இப்பொழுதோ முதல் உரிமை தரப்பட்டது.

“அடுத்த டார்கெட் மணி சங்கர்”  என ஆகாஷ் கூற . .பத்ரிநாத் “நான் ரெடி” என்றார்.

தொடரும் . .

Episode # 21

Episode # 23

{kunena_discuss:1199}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.