Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (7 Votes)
தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 17 - சசிரேகா - 5.0 out of 5 based on 7 votes
Pin It

தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 17 - சசிரேகா

Kaanum idamellam neeye

ஸ்வரன் கவனமாக டேப்பில் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொன்றையும் தன் மனதில் பதிய வைத்துக் கொண்டிருந்தான். நேரம் போனதே தெரியவில்லை. விடிந்து விட்டது கூட அறியாமல் அவன் தனது கனவுக் கதையில் மூழ்கியிருந்தான். விடிகாலை பொழுதில் டேப் முடிந்துவிட்டது.  அவனுக்கு ஆச்சர்யத்தை அளித்தது.

”இவ்ளோதானா” என சொல்லியபடியே அவசரமாக அந்த டேப்பை ரீவைண்ட் செய்து மீண்டும் முதலில் இருந்து போட்டான். கேட்டதே திரும்ப வரவும் அதை ஆப் செய்துவிட்டு பெருமூச்சு விட்டபடியே கட்டிலில் படுத்தான். அவனது நினைவுகள் முழுவதும் குழம்பியே இருந்தன.

”இந்த கேசட் எப்படி ரிக்கார்டு பண்ணியிருப்பான். அன்னிக்கு டாக்டர் சுவாதிகிட்ட போனது ஞாபகம் இருக்கு அதுவரைக்கும் நடந்த கதை எனக்குத் தெரியும், டேப்பில கேட்ட கதையில சிலது எனக்குத் தெரியாதது, அப்படின்னா அன்னிக்கு நிரஞ்சன் என்னை சுவாதி வீட்ல தான் தங்க வைச்சிருக்கான்.

எனக்கு மயக்க மருந்து கொடுத்து ஏதோ செஞ்சிருக்காங்க, அதுலதான் நான் இப்படி உளறியிருக்கேன் அதையும் பதிவு செஞ்சிருக்காங்க. ஆனா கனவுல பத்மாவதியை விட்டுட்டு போன தர்னேந்திரன் என்னவானான் தெரியலையே, அதுக்கப்புறம் பத்மாவதிக்கு என்ன ஆச்சின்னும் தெரியலையே எப்படி தெரிஞ்சிக்கறது.

ஏதோ தப்பு நடந்திருக்கு, அன்னிக்கு முழுசா நான் அந்த கதையைச் சொல்லி முடிக்கலை அப்படின்னா என்ன அர்த்தம் எனக்கு தெரிஞ்ச நிகழ்வுகள் மட்டும்தான் நான் சொல்லியிருக்கேன், ஒருவேளை அதுக்கப்புறம் தர்னேந்திரனால பத்மாவதியை சந்திக்க முடியலைன்னு தோணுது, அதனாலதான் அதுக்கப்புறம் நடந்த நிகழ்வுகள் எனக்கு கனவுல வரலை, அப்படின்னா அன்னிக்கு பத்மாவதிக்கு என்ன நடந்திருக்கும்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அதுக்குள்ள எனக்கு வேற கனவு வருது, இந்த நாகேந்திரன் யாரு ஒருவேளை நான்தான் அந்த நாகேந்திரனோ அப்படின்னா பத்மாவதிதான் அவனி சுந்தரியா இல்லை வேறயா? இல்லை அந்த கனவு கதைக்கும் இந்த கனவு கதைக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கோ ஒண்ணும் புரியலையே

பத்மாவதி கனவு நடந்த காலம் ஜமீன்தார் வாழ்ந்த காலத்தில நடந்திருக்கலாம், இந்த நாகேந்திரன் கனவு நடந்த காலம் அதுக்கப்புறமான  காலத்தில நடந்திருக்கலாம், முதல்ல இந்த பத்மாவதி என்ன ஆனாள்ன்னு நான் தெரிஞ்சிக்கனும், அதுக்கு முன்னாடி ஆனந்திகிட்ட சில விசயங்களைப் பத்தி பேசனும், பாவம் அவள் என் மேல ஆசைப்படறது தப்புன்னு அவளுக்கு நான் புரிய வைக்கனும்.

இத்தனை நாள்ல மீனா இப்பதான் என்னை நல்லவிதமா புரிஞ்சிக்கிட்டிருக்கா, அவள் மனசையும் நான் நோகடிக்காம இனிமே நடந்துக்கனும், நிரஞ்சனும் என்னால ரொம்ப கவலையா இருக்கான், எனக்கு எதுவும் கெட்டது நடக்கக்கூடாதுன்னு ஜாக்கிரதையா நடந்துக்கறான். புது ப்ரான்ச் வேலைகள் வேற அப்படியே இருக்கு, எதையுமே என்னால செய்ய முடியலையே என தன்னையே பல கேள்விகளால் கேட்டு பதில் கிடைக்காமல் குழம்பித் தவித்து நேரத்தை விரயம் செய்தவனுக்கு சட்டென ஒரு யோசனை பிறந்தது.

”அகழ்வாராய்ச்சி டிபார்ட்மெண்ட்ல பத்மாவதி பத்தி விசாரிச்சா தெரிஞ்சிடும், இந்தக் கதை நடந்தது கன்னியாகுமரின்னா கண்டிப்பா ஏதாவது விவரங்கள் இருக்குமே, இதைப்பத்தி நான் நிரஞ்சன் கிட்ட பேசனும் முடிஞ்சா அவனை வைச்சே பத்மாவதியை பத்தி தெரிஞ்சிக்கனும். உண்மையிலயே பத்மாவதின்னு ஒருத்தி அந்த காலத்தில வாழ்ந்தாளான்னு நான் தெரிஞ்சிக்கனும், அப்பதான் என்னால எதையும் நம்ப முடியும்.

ஆமாம் முதல்ல பத்மாவதி சம்பந்தப்பட்ட விவரங்களை சேகரிக்கனும். எனக்கு தெரிஞ்சி அவள் பேரு பத்மாவதி, அவள் அப்பா பேரு புவன பூபதி பாண்டியன், ஜமீன்தார் வேற, கண்டிப்பா இந்த பேர் பத்தி ஏதாவது தகவல்கள் அகழ்வாராய்ச்சி டிபார்ட்மெண்ட்ல கிடைக்கும், எதுக்கும் இன்டர்நெட்ல இதைப்பத்தி சர்ச் பண்ணிப் பார்க்கனும் எஸ் எஸ் ஐ காட் இட்” என தனக்குத்தானே பேசியபடியே உற்சாகமாக எழுந்து அமர்ந்தவன் அந்த அறையில் தேடிப்பிடித்து தனது லேப்டாப்பை எடுத்துக் கொண்டு படுக்கைக்கு வந்தவன் அதில் இன்டர்நெட் மோடம் கனெக்ட் செய்து அகழ்வாராய்ச்சி டிபார்ட்மெண்ட் பிரிவில் சென்று விவரங்களை தேடலானான்.

அப்படியே புவன பூபதி பாண்டியன் ஜமீன்தார் பற்றின தகவல்கள் ஏதாவது கிடைக்குமா என ஆர்வமாகத் தேடலானான்.

நேரம் வேகமாகச் சென்றது

காலை 9.30 மணிக்கு நிரஞ்சன் ரெடியாகி ஈஸ்வரனைக் காண வந்தான். அங்கு ஈஸ்வரனோ லேப்டாப்பும் கையுமாக மூழ்கியிருப்பதைக் கண்டு திகைத்தவன்

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பத்மினியின் " காதோடுதான் நான் பாடுவேன்..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

”என்ன அண்ணா இன்னும் ரெடியாகலையா” என கேட்க ஈஸ்வரன் காதில் அவன் பேசியது விழவேயில்லை, அவன் கண்கள் மானிட்டர் திரையை விட்டு அகலவில்லை. ஈஸ்வரனது செயல்கள் கண்ட நிரஞ்சனோ சந்தேகத்துடன்

”அண்ணா” என கத்த அதற்கும் பதில் தரவில்லை. அவனிடம் சென்று அவனது தோள்களை உலுக்கினான் நிரஞ்சன்.

”ஆஆஆ ம்ம் என்ன யாரு ஓ நீயா சொல்டா” என சொல்லிய ஈஸ்வரனிடம்

”என்ன அண்ணா செய்றீங்க”

“ஒரு ரிசர்ச் பண்றேன்”

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 17 - சசிரேகாராணி 2019-03-12 15:27
கனவில் வரும் காதல் அருமையாக பயணம் செய்கிறது நிஜத்தில் ஈஸ்க்கு மீனா மேல் உண்டான புது நட்பின் பயணம் அருமையாக உள்ளது
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 17 - சசிரேகாsasi 2019-03-07 19:24
Quoting madhumathi9:
:clap: nice epi.ennada idhu nagenthiranukku vantha sodhanai facepalm avani solvathellam unmaithaano :Q: :clap: :clap: poga poga romba interesting aaga irukku.adutha epiyai eppo padippom endru irukku. : :thnkx: 4 this epi. :GL:

நன்றி மது தோழி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 17 - சசிரேகாmadhumathi9 2019-03-07 15:53
:clap: nice epi.ennada idhu nagenthiranukku vantha sodhanai facepalm avani solvathellam unmaithaano :Q: :clap: :clap: poga poga romba interesting aaga irukku.adutha epiyai eppo padippom endru irukku. : :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 17 - சசிரேகாதீபக் 2019-03-07 14:02
Super sis story :hatsoff: really increasing curiosity of the story. The theme of the story is good :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 17 - சசிரேகாsasi 2019-03-07 19:24
Quoting Deepak:
Super sis story :hatsoff: really increasing curiosity of the story. The theme of the story is good :clap:

நன்றி தீபக் :dance:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 17 - சசிரேகாAdharvJo 2019-03-06 20:25
No doubt sasi ma'am indha nag & scene sinappa Esh one & the same :D Rendu perukkum ena oru ottrumai :yes: Nag is different than all other heros of ur stories (y) :P
Avani-k etho avanga mun janmam theriyum pole irukku likewise indha life la Ess-k kanava vandhu torture panudhu facepalm very lively+interesting updates sasi ma'am :clap: :clap: suspense increase aga aga curiosity is building high :yes: eppo thaan solluvinga :Q: Ninga andha recorded voice konjam meen's k pottu kati irukkalam nanum enoda sandhegathai clarify seithu irupen :o BTW scene sinappa Inga lunch-k yarum invite panala thoongi elunga lunch sapidalam avalodhan sonnadhu adhukke ivaru ippadi feel panurare sasi ma'am :D appadi partha mega aunt kuda thaan BF-k invite panunaga :roll: :P comedy boss ninga….Baby bro mele kannu vaikadhinga pavam avaraiyum anandhiyum deal la vittu vandhu Inga chit chat panikittu steam
thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top