(Reading time: 8 - 15 minutes)

தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 23 - சுபஸ்ரீ

idhaya siraiyil aayul kaithi

த்ரிநாத் மற்றும் ஆகாஷ் வெளியே கிளம்பிவிட்டனர். மற்றவர்கள் அவர்கள் வேலையில் முழ்கிவிட . . சாருவும் சுவாதியும் மனதளவிலும் தனியே விடப்பட்டனர்.

பல ஆண்டுகளுக்கு பின்னர் அக்காளும் தங்கையும் அருகருகே . . சுவாதி அவளை தன் அறைக்கு அழைத்துச் சென்றாள். அருகில் அமர்த்திக் கொண்டு தன் கைகளுக்குள் அவள் கையை சிறைபிடிக்க . . எண்ணங்கள் பின்னோக்கி சென்றது. இருவருமே மௌனமாய் எண்ணவலையில் சிக்கியிருந்தனர்.

பள்ளியில் இருந்து தங்கையை கைபிடித்து அழைத்து வந்தது. பட்டாசு வெடிக்கையில் நானிருக்கிறேன் என தைரியம் சொன்னபடி அருகில் நின்றது. செல்லச் சண்டைகளும் குட்டி யுத்தங்களும் மனதில் நிழலாடியது.

அக்காவின் சிந்தனையே தங்கையின் சிந்தனையுமாயின. சாரு கண்களில் கண்ணீர் விழட்டுமா என அவளிடம் கேட்டபடி விழிகளுக்குள் நின்றிருந்தது. அவள் தன் ஆணையால் அணைப் போட்டிருந்தாள்.

ஒரே நிறத்தில் ஆடைகள் எடுப்பதும் அதற்கு ஏற்றபடி தொங்கடான்கள்  வாங்கியது. பின்பு அவற்றை மாற்றி அணிவது இன்னும் எத்தனை எத்தனையே இதயப் பேழையில் இருந்த அற்புதமான நினைவுகளை இருவரும் மணக்கண்ணில் கண்டனர்.

“அக்கா என்னோட வீட்டுக்கு வந்திடு . . மிச்சமிருக்கிற விஷயங்கள பத்ரிநாத் சாரும் ஆகாஷம் பார்த்துப்ப்பாங்க” என்றாள் சாரு

“என் குட்டி தங்க இத்தன பெரிய ஆளாயிட்டாளா . . பாக்க சந்தோஷமா இருக்குடி . . அமெரிக்காவுல டான்ஸ் ஆடிகிட்டு இருக்க நினைச்சா . . இங்க வந்து நிக்கிற” என்றாள் சுவாதி வாஞ்சையோடு சாருவின் கன்னங்களை தடவியபடி

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“உன்னை மறந்துட்டேன் நினைச்சியாகா?”

“இல்லமா உன்னை பத்தி எனக்கு தெரியாதா?”

“சூர்யா ரிஜெக்ட் பண்ணிட்டானு வருத்தபடறியா” வருத்தமுடன் கேட்டாள் சாரு

“அட நீ வேற .அதெல்லாம் இல்லடா . . என் பிரெண்டு செல்வன்னால தான் இங்க வந்தேன். இது சிக்கலான இடம் அதான் எதையும் உன்கிட்டயோ இல்ல அம்மா அப்பாகிட்டயோ சொல்ல முடியல”

“யாரு செல்வன்? உன் பிரெண்டா? இப்ப எங்க இருக்காரு?” என பல கேள்விகளை இடைவிடாமல் கேட்டாள். செல்வன் என்கிற பெயர் ஏற்படுத்திய அதிர்வே அதற்கு காரணம். சென்னையில் ஆகாஷோடு தான் செல்வனை பற்றி அறிந்த விஷயங்கள் ஊர்வலமாய் மனதில் ஓடின.

“செல்வன் இப்ப உயிரோட இல்ல . . நான் இங்க வர காரணமே செல்வன்தான் . . எனக்குள்ள இங்க நடக்கிற விஷயங்களை விதைச்சதும் அவன்தான்” என்றாள் மனக்கண்ணில் செல்வனின் முகத்தை கண்டவளாய்

“ஆனாலும் சொல்லிட்டு இங்க வந்திருக்கலாம்” குறைப்பட்டுக் கொண்டாள் தங்கை

“சொல்லிட்டா மட்டும் உடனே நீ அம்மா அப்பா மூணு பேரும்  சந்தோஷமா போயிட்டு வானு சொல்லிடுவிங்களா?”

“சுவாதி சொல்லி இருந்தால் நிச்சயமாய் பெற்றோர் சம்மதித்து இருக்க மாட்டார்கள் தான்” என நினைத்து மௌனமாய் இருந்தாள் சாரு. “சரி எப்படி இங்க வந்தே . . செல்வனோட அறிமுகம் எப்படி ஆச்சு? ஆகாஷ் அப்பாவ எப்படி தெரியும்?”  என மனதில் எழுந்த வினாக்களை கொட்டித் தீர்த்தாள்.

“நானும் செல்வனும் முதல்ல ஒரே கம்பெனியில வேலையில இருந்தோம். அவனை பிரெண்டாதான் எனக்கு அறிமுகம். நிறைய விஷயங்கள் பேசுவான் மக்கள் நலன் உலகம் இதைப்பத்தின அக்கறை அவன்கிட்டே அதிகமா இருந்துச்சி. அவனோட எண்ணங்களும் ரசனைகளும் என்னோட எண்ணங்களும் ஒரே மாதிரி இருந்தது”

“அவன் சிலசமயங்கள்ல எதையாவது ரகசியமா எழுதுவான். எங்கயாவது போயிடுவான். வித்தியாசமான நடவடிக்கை. அவன்கிட்ட எதோ ரகசியம் இருக்குனு தோணும். சந்தேகமா கூட இருந்தது.”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "காணும் இடமெல்லாம் நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“நான் உன்னை நினைச்ச மாதிரியாக்கா?”

“ஆமா சாரு. அவன் எழுதினதை ஒரு நாள் நான் பாத்துட்டேன். ஆனா எனக்கு ஒண்ணுமே புரியல. எல்லாமே இங்கிலிஷ் கேபிடல் லெட்டர்ஸ் அவ்வளவுதான். அவன் போன இடம்  துரையோட பார்மாசிடிகல் கம்பெனி. அந்த சமயத்துல கூட அந்த கம்பெனில எதோ இல்லீகல் வேலை நடக்குதுனு செய்தி வந்தது. உடனேயே வதந்தினு முற்றுபுள்ளி வெச்சிட்டாங்க. எல்லாமே மறைஞ்சி மறந்து போச்சு”

“ஒருநாள் செல்வன்கிட்ட கேட்டேன் . . அவனோட பயங்கரமா சண்டையும் போட்டேன்.”

“நானே உன்கிட்ட பேசணும் இருந்தேன். ஆனா நீயே கண்டுபிடிச்சிட்டே. இனி என்னோட இடத்துல நீதான் இருக்க போறேனு சொன்னான் அதுவும் புன்னகையோட . . சண்டை போட்டா கோப்படாம சிரிக்கிறானேனு தோணிச்சி . . சத்தியமா எனக்கு அந்த நிமிஷம் தலையும் புரியல காலும் புரியல. அவன் என்னை ராமமூர்த்தி சார்கிட்ட கூடிட்டு போனான்”

“அதாவது உன் வருங்கால மாமனார்தான் எங்க ஹெட்” என சுவாதி முடித்து சாருவை விழி அகற்றாமல் பார்க்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.