Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 23 - சுபஸ்ரீ - 5.0 out of 5 based on 4 votes

சாரு வெட்கத்தில் நெளிந்தாலும் வெளிக்காட்டாமல் “ரூட்ட மாத்தாத மேல சொல்லு” என அதட்டினாள்.

“ராமமூர்த்தி சார்தான் இந்த மூலிகை கடத்தல் பத்தின விஷயங்கள் அதோட இதை துரைதான் நடத்துறான்னும் சொன்னாரு. அவர் எப்பவுமே சொல்லுவாரு மூப்படைல சேர்ந்து யூனிபார்ம் போட்டாதான் நாட்டை காப்பதணும் இல்ல. ஒவ்வொரு குடிமகனுக்கும் தன் நாட்டை காக்கும் கடமை இருக்கு. நம்ம நாட்டுல இருந்து துரும்பகூட எவனும் அனுமதியில்லாம தொடக்கூடாதுனு”

“சதுரகிரி மலைல மட்டும் இல்ல கொள்ளி மலை விராலி மலை எங்கெல்லாம் கடத்தல் செய்றாங்களோ . . அங்கெல்லாம் இவரை மாதிரி ஒத்த கருத்துள்ளவங்க கூட்ட சேர்ந்து செய்றாங்க. இது சீக்ரட் மிஷின்.  எங்களுக்கே இந்த குரூப்ல இன்னும் யார் யார் இருக்காங்கானு தெரியாது. குரூப் மெம்பர்ஸ் அவங்க பேமிலிகிட்ட கூட சொல்லக் கூடாது”

“செல்வனும் ராம்முர்த்தி சாரும் என்னை இந்த குருப்ல சேர்த்துக்கிட்டாங்க. ஒரு பாய்ண்ட்ல நாங்க சதுரகிரி மலைக்கே போக  வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதை ஓபன்னா எல்லார்கிட்டயும் சொல்லிட்டு வந்தா இந்த இடத்தோட புனிதமும் கெட்டுப் போகும். துரை ஆளுங்களுக்கும் விஷயம் தெரிஞ்சிடும். போலீஸ்க்கு இன்பார்ம் பண்ணு அட்வைஸ்தான் வரும். காவல்துறைல இருக்கிற சிலர் இவனுக்காக மட்டுமே சேவகம் செய்றாங்கனு சொல்ல முடியுமா?”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அதனால நான் ஆன்மீகத்துல ஈடுபடறேன்னு சொல்லிட்டு இங்க வந்தேன். அத்தன நாளா அம்மா அப்பா என்னை கவனிக்கவே இல்ல. பணம் சம்பாதிக்கறதுல மட்டுமே குறியா இருந்தாங்க. நான் வெர்க் பண்ற கம்பெனி பேர் கூட தெரியாது. அவங்க வேலையிலயே கவனமா இருந்தாங்க. நாம கூட சூர்யா வீட்லதான் அதிக நேரம் இருப்போம் . . இல்லயா”

ஆமென்றாள் சாருவும். “அந்த டைம்ல அப்பா வேலைக்கு போய்கிட்டு இருந்தார். இப்பதானே வீட்ல இருந்து வேல பாக்குறார். அந்த சமயத்துல அம்மாவும் அப்பாவும் உன்னை கவனிச்சிருந்தா நீ இங்க வந்திருக்க மாட்டே. .. சூர்யா என் பின்னாடி சுத்திருக்க மாட்டான்.” என்றாள் சோர்வாக.

“நான் இங்க வந்ததும் அப்பா எப்படியும் போலீஸ் கேஸ்னு போவார்னு எதிர்பார்த்தேன். அதுக்காக தான் செல்வன் வேற கம்பெனியோட விசிடிங் கார்டை பிரிண்ட் பண்ணி கொடுத்தான்.”

“ஆகாஷிடம் தான் கொடுத்த்து போலி கார்டா?” மனதில் நினைத்துக் கொண்டே “அந்த இங்கிலிஷ் லெட்டர்ஸ் என்ன?” கேட்டாள் சாரு

“அது எந்த மூலிகைய எப்ப கடத்துறாங்னு குரூப் மெம்பர்க்கு சொல்ல . .அதுல எங்க பேரு மட்டும்தான் இருக்கும், ஆனா அதுக்குள்ள சீக்ரட் மெசேஜ் இருக்கும்”

“எனக்கு புரியவே இல்லயே”

“அது சீக்ரட் கோட் வொர்ட் உனக்கு சொல்லிட்டா அப்புறம் எப்படி டீ சீக்ரெட்டாகும்?”

“எனக்குகூட சொல்ல மாட்டியா அக்கா? “ஆனாலும் எனக்கு தெரியுமே” என வேண்டுமென்றே விளையாட்டாய் அழகு காட்டினாள் சாரு

“ம்கூம்” அழுத்தமாக மறுத்தாள் “உன்னால கண்டுபிடிக்கவே முடியாது” சுவாதியே தொடர்ந்தாள் “நாங்களே இங்க பிரச்சனையில இருக்கோம் . . இதுல இன்னொரு ஆள் வேற எங்கள வேவு பாக்க”

“அது யாரு?”

“உன் ஆளு ஆகாஷ்தான். என்னை ரொம்ப வெறுப்பேத்திடான் தெரியுமா? என்னை சுத்திசுத்தி வரது . .” என ஆகாஷ் செய்தவற்றை பட்டியலிட்டாள்.

“அக்கா அவருக்கு மேஜிக் தெரியும் . .”

“அதுக்கு நான்தான் கெடச்சேனா? . . ”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பத்மினியின் " காதோடுதான் நான் பாடுவேன்..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“அக்கா நீதான் இந்த கதையோட வில்லினு நினைச்சிட்டோம்” சிரித்தபடி கூறினாள்.

“நான் ஆகாஷ் துரையோட ஆள்னு நினைச்சேன் சாரு. ஆகாஷ் போட்டோவ வாட்ஸ்அப்ல ராமமூர்த்தி சாருக்கு அனுப்பினேன். அவர்தான் ஆகாஷ் பத்தி சொன்னாரு. நீங்க எல்லாரும் என்க்காக இன்டியா வந்திருக்கிங்கனும் சொன்னாரு. சந்தோஷமா இருக்கு” கண்கலங்கிவிட்டாள்.

அவளை அணைத்தபடி சாரு “இப்பதான் எல்லா பிரச்சனையும் முடிவுக்கு வரப் போகுதே . . இனி ஆகாஷ் எல்லாம் பாத்துப்பான் நீ வீட்டுக்கு போயிடுக்கா”

“இல்ல சாரு நான் இங்க இருந்து ஜெயிலுக்குதான் போயாகணும் . . நான் ஒரு கொலை செஞ்சிட்டேன்” என்றாள் நிதானமாக

சுவாதியின் இந்த வார்த்தைகளை சாருவால் ஜீரணிக்க முடியவில்லை.

தொடரும் . .

Episode # 22

Episode # 24

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

Subhasree

Completed Stories
On-going Stories

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 23 - சுபஸ்ரீJanaki 2019-03-22 08:42
Super epi Subha (y)
Swathi thanga oosi vechitu irunthaaala
thaali vitutaley .. :Q:
So next Enna aagum
Interesting going.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 23 - சுபஸ்ரீSubhasree 2019-03-23 20:16
Quoting Janaki:
Super epi Subha (y)
Swathi thanga oosi vechitu irunthaaala
thaali vitutaley .. :Q:
So next Enna aagum
Interesting going.

Thanks a lot Janaki for your comment :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 23 - சுபஸ்ரீDurgalakshmi 2019-03-21 21:53
Emotional episode :yes:
Swathi yaarai kolai pannanga? :Q:
Happy ending kudunga .. jail vendam
Eagerly waiting for next epi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 23 - சுபஸ்ரீSubhasree 2019-03-23 20:15
Quoting Durgalakshmi:
Emotional episode :yes:
Swathi yaarai kolai pannanga? :Q:
Happy ending kudunga .. jail vendam
Eagerly waiting for next epi

Thank you Durga for your comment :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 23 - சுபஸ்ரீmadhumathi9 2019-03-21 14:06
facepalm kolaiya? Nice epi.waiting to read more. :thnkx: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 23 - சுபஸ்ரீSubhasree 2019-03-23 20:14
Quoting madhumathi9:
facepalm kolaiya? Nice epi.waiting to read more. :thnkx: :GL:

Thanks a lot Madhumathi for your comment :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 23 - சுபஸ்ரீAdharvJo 2019-03-21 08:51
Sis wat is dis :sad: climax stage la ippadi Oru gundu thooki poduringa :Q: yara kollai pananga?? Sky irukrapa bayam yen 😜 charu kaga avaru yena venalum panuvare 😍😍 sisters Oda indha reunion epi was very cute 👌👏👏👏👏 look forward to see what happens next. Thank you and keep rocking!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 23 - சுபஸ்ரீSubhasree 2019-03-23 20:14
Quoting AdharvJo:
Sis wat is dis :sad: climax stage la ippadi Oru gundu thooki poduringa :Q: yara kollai pananga?? Sky irukrapa bayam yen 😜 charu kaga avaru yena venalum panuvare 😍😍 sisters Oda indha reunion epi was very cute 👌👏👏👏👏 look forward to see what happens next. Thank you and keep rocking!!

Thank you Adharv Jo for your comment :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 23 - சுபஸ்ரீsaaru 2019-03-21 06:53
Nice update suba
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 23 - சுபஸ்ரீSubhasree 2019-03-23 20:13
Quoting saaru:
Nice update suba

Thanks a lot Saaru :-)
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #1 30 May 2019 07:27
ஆகாஷ் என்ன செய்தான் என்பதை தெரிந்துக் கொண்டே ஆக வேண்டும் என்னும் ஆர்வம் ரவிக்கு பண்மடங்கு அதிகரித்தது.

ஆதனால் விடாமல் “அமெரிக்காவிட்டு நீங்க வந்தது சூனியம் வெக்கவா? சரி நம்பிட்டோம் பாஸ் . . எப்படி சூன்யம் வெச்சிங்க? விவரமா சொல்லுங்களேன்” கிண்டலாக கேட்டான்.

சாரு மற்றும் சுவாதி முழுமையாக தெரியாத்தால் தெரிந்துக் கொள்ள ஆர்வம் இருந்தது. ஆகாஷ் பத்ரிநாத்தை பார்க்க . . அவர் சொல்லிவிடு என்பதைப் போல ஜாடை செய்தார்.

*******

Don't miss it!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...kaithi-subhashree-27
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 02 May 2019 02:35
“உனக்கும் சூர்யாவுக்கும் கல்யாணம் ஆயிடுச்சா? எப்போ? எப்படி?” என வியந்தபடி பல கேள்விகளை அடுக்கினாள் சாரு. கோபமும் ஏமாற்றமும் ஒரு பக்கம் இருந்தாலும் சந்தோஷமாகவும் இருந்தது.

சிரித்தபடி சுவாதி மீண்டும் அழுத்தம்திருத்தமாக “எனக்கும் கல்யாணம் ஆயிடுச்சி . . . சூர்யாவுக்கும் கல்யாணம் ஆயிடுச்சி . . ” என நிறுத்தினாள்.

ஆகாஷ் இதில் ஏதோ டிவிஸ்ட் உள்ளது என புரிந்துக் கொண்டான். ராமமூர்த்தி எல்லாம் அறிந்தவர் ஆதலால் எந்த ரியாக்ஷனும் அவரிடம் இல்லை. பத்ரிநாத்திற்கு இந்த விஷயத்தில் அவ்வளவாக ஈடுபாடில்லை.

****

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...kaithi-subhashree-26
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 18 Apr 2019 05:34
“சுவாதி நீ கொலை செய்யலைமா . . கவலைப்படாத” என ராமமூர்த்தி ஆறுதல் அளித்தாலும் அவரின் அடுத்த வார்த்தைகள் ஆகாஷ் சாரு சுவாதி மூவரையும் குழப்பதான் செய்தன.

“அப்ப இது துரையோட லீலையா?” ஆகாஷ் சந்தேகமாக கேட்க

அதுவே என்பதைப் போல தலையசைத்த அவன் அப்பா “சுவாதி அந்த ஆளை கீழ தள்ளின இடம் பாதாளம் இல்ல . . ரெண்டு ஆள் நிக்கும் அளவு இடம் இருக்கு . . அதுவுமில்லாம சுவாதியோட உடல் வலிமையும் கணக்குல எடுத்துகணும். சுவாதி அவனை தள்ளின அடுத்த நொடி துரை ஆளுங்க அவனைப் பிடிச்சிக் கொன்னுட்டாங்க”

********

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...kaithi-subhashree-25
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 04 Apr 2019 05:49
அடுத்து வந்த நாட்களில் சாரு உற்சாகம் குறைந்தே காணப்பட்டாள். சுவாதி தான் கொலை செய்ததாக சொல்லிய செய்தி அவளை வெகுவாக பாதித்திருந்தது. ஆனால் சுவாதி மன உறுதியுடன் காணப்பட்டாள். அவளிடம் எந்த மாறுதலும் இல்லை.

ஆகாஷ் இவற்றையெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை. அவன் பத்ரிநாத் மற்றும் தன் தந்தையுடன் துரையை கார்னர் செய்வதிலேயே குறியாக இருந்தான்.

ஆசிரமத்தில் இருந்த இரண்டு துரையின் ஆட்களை வைத்தே துரையின் முகத்திரை கொஞ்சம் கொஞ்சமாக கிழிக்கபட்டுக் கொண்டிருந்தது.

******

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...kaithi-subhashree-24
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 21 Mar 2019 02:14
பத்ரிநாத் மற்றும் ஆகாஷ் வெளியே கிளம்பிவிட்டனர். மற்றவர்கள் அவர்கள் வேலையில் முழ்கிவிட . . சாருவும் சுவாதியும் மனதளவிலும் தனியே விடப்பட்டனர்.

பல ஆண்டுகளுக்கு பின்னர் அக்காளும் தங்கையும் அருகருகே . . சுவாதி அவளை தன் அறைக்கு அழைத்துச் சென்றாள். அருகில் அமர்த்திக் கொண்டு தன் கைகளுக்குள் அவள் கையை சிறைபிடிக்க . . எண்ணங்கள் பின்னோக்கி சென்றது. இருவருமே மௌனமாய் எண்ணவலையில் சிக்கியிருந்தனர்.

*********

படிக்கத் தவறாதீர்கள்!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...kaithi-subhashree-23

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top