(Reading time: 7 - 14 minutes)

தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 24 - சுபஸ்ரீ

idhaya siraiyil aayul kaithi

டுத்து வந்த நாட்களில் சாரு உற்சாகம் குறைந்தே காணப்பட்டாள். சுவாதி தான் கொலை செய்ததாக சொல்லிய செய்தி அவளை வெகுவாக பாதித்திருந்தது. ஆனால் சுவாதி மன உறுதியுடன் காணப்பட்டாள். அவளிடம் எந்த மாறுதலும் இல்லை.

ஆகாஷ் இவற்றையெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை. அவன் பத்ரிநாத் மற்றும் தன் தந்தையுடன் துரையை கார்னர் செய்வதிலேயே குறியாக இருந்தான்.

ஆசிரமத்தில் இருந்த இரண்டு துரையின் ஆட்களை வைத்தே துரையின் முகத்திரை கொஞ்சம் கொஞ்சமாக கிழிக்கபட்டுக் கொண்டிருந்தது. தொடக்கத்தில் துரையை ஹீரேவாக காட்டப்பட்ட மீமஸ்கள் மற்றும் யூடியூப் வீடியோக்கள் போக போக அவன் தான் எல்லாற்றிருக்கும் காரணம் என்பதாக வெளிவந்துக் கொண்டிருந்தது.

இது அனைத்தும் ஒரே நாளில் நடப்பவை அல்ல. அனுதினமும் அவனைப் பற்றிய செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. மக்கள் அனைவருக்குமே மூலிகை கடத்தல் பற்றிய செய்திகள் சமூக ஊடகங்கள் மூலம் பரவியிருந்த்து.  காவல்துறையில் இருந்த ஒருசில துரையின் ஆட்கள் அவனுக்கு உதவ தயக்கம் காட்டினர்.

சாருவால் சுவாதியின் நிலைமையை பொறுத்துக் கொள்ள இயலவில்லை. ஆதலால் ஆகாஷிடம் பேசியே ஆக வேண்டும் என முடிவெடுத்தாள். அன்றே அதற்கான சூழ்நிலையும் அமைந்தது.

“ஆகாஷ் உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்” என ஆரம்பித்தாள்.

“சொல்லு” அவ்வளவே அவன் பதில். புறாவின் மூலம் எடுத்த வீடியோவை எடிட் செய்துக் கொண்டிருந்தான்.

“அக்கா ஒரு கொலை செஞ்சிட்டா” துக்கம் தொண்டையை அடைக்க

“சூர்யாவையா? தேங்க் காட்” என  சொல்லியவன் பெரியதாக நகைத்தான். “அந்த சூர்யாவ தானே உங்க அக்கா போட்டு தள்ளிட்டா? . . அவனை என்னடா செய்றதுனு இருந்தேன் . . நம்ம கல்யாணத்துல வந்து கலாட்டா பண்ணுவானே நினைச்சேன்”

அவனை முறைத்தவள் “ஆகாஷ்” கோபமாக பொரிந்தவள் மேலே பேச இயலாமல் சோகமாக வெளியேற எத்தனிக்க

அவள் கையை பிடித்து இழுத்தவன் “ ஜஸ்ட் கிட்டிங் டா . . உட்காரு நீ சொன்னத கேட்டுக்கிட்டுதான் இருக்கேன் . . கவலப்பட்டு அழறதனால நோ யூஸ் . . லைப்ப ரீவைண்ட் பண்ணவா முடியும்?”

அவன் சொன்னதெல்லாம் உண்மைதான் ஆனால் அவளாள் மனம் கலங்காமல் இருக்க முடியவில்லை. கண்களில் நீர் எட்டி பார்த்தது.

அவன் பேச்சை இடைமறித்து “நான் சீரியசா பேசிட்டு இருக்கேன். நீ என்னடானா” மேலும் உஷ்ணமானவளை பார்த்து  . .

“நோ டெரரிசம் பேபி” என பயந்தவனைப் போல பாசாங்கு செய்தவன். “சரி சொல்லு யாரை எப்போ எப்படி போட்டு தள்ளினா உங்க அக்கா?”

“மலை உச்சியில இருந்து ஒருத்தன தள்ளிவிட்டுடா?”

“ஏன்?”

“துரை குரூப்க்குள்ள நுழைய அவங்க நம்பிக்கைய பெறனும் . . அதனால . .  . . ”

“டெட் பாடிய என்ன பண்ணாங்க?”

“அது . .  ” யோசித்தவள் அவசரமாக அறையைவிட்டு வெளியேறினாள்.

தன் வேலையை முடித்துவிட்டு அவளிடம் பேசலாம் என அவனும் விட்டுவிட்டான்.

இரண்டொரு நொடிகளில் திரும்பிய சாரு உடன் சுவாதியை அழைத்து வந்தாள். “சுவாதி ஆகாஷ் கேட்குற கேள்விக்கு பதில் சொல்லு?” என அவளை நாற்காலி போட்டு உட்காரவும் வைத்தாள்.

இத்தனை நாள் ஆகாஷ் மற்றும் சுவாதி எலியும் பூனையுமாக இருந்தவர்கள். ஆனால் இனி அப்படி இல்லை. ஒருவரைப் பார்த்து ஒருவர் புன்ன்கைத்துக் கொண்டனர். அதில் நிர்மல்யமான உண்மை அன்பு அக்கறை இருந்தது.

யார் முதலில் பேச தொடங்குவது என்ற தயக்கம் இருந்தது. ஏனெனில் விஷயம் அப்படி ஆயிற்றே . . . கொலைகாரனை கேள்வி கேட்பதுப் போல கேள்வியால் துளைத்து எடுக்க ஆகாஷிற்கு சங்கடமாய் இருந்தது. தன் வீட்டு வருங்கால மாப்பிள்ளையிடம் தான் செய்த கொலைப் பற்றி பேச சுவாதிக்கு தயக்கமாக இருந்தது.

இருவருக்குமான பாலம் சாருதான். அவளால் இருவரின் நிலையும் புரிந்துக் கொள்ள முடிந்தது. “அக்கா ஆகாஷ்க்கு எல்லாம் தெரியும்” என்றாள் மிருதுவாக. அக்காவின் மனம் புண்படாதபடி. பின் ஆகாஷிடம் நிதானமாக கேள் என்பதைப் போல சுவாதி பின் சென்று ஜாடை செய்தாள்.

“சாரு ஏதோ சொல்லிட்டு இருந்தா . . ” என ஆகாஷ் மௌனத்தை கலைந்தான்.

“ஆமா நான் ஒரு கொலை பண்ணிட்டேன்” என்றாள் சுவாதி தீர்க்கமாக

“ஏன்? எப்படி?“ ஆகாஷ் சுறுசுறுப்பானான். பதிலை உன்னிப்பாக கவனித்துக் கொள்ள தயாரானான். அவன் வரையில் கடந்த காலம் முக்கியமல்ல நிகழ் காலத்தை நமக்கு சாதகமாக மாற்ற வேண்டும் என்பதே குறிக்கோள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.