(Reading time: 7 - 14 minutes)

“துரை கேங்க்குள்ள நுழைய . . அவங்க நம்பிக்கைய பெறனும்னா . . அவங்க சொல்ற விஷயங்கள கேட்கணும் . . அதன்படி நடக்கணும். அவங்க எனக்கு கொடுத்த பரிட்சை கொலை செய்யறது”

“துரை குரூப்ல இருந்த ஒருத்தன் தனியா இயங்க ஆராம்பிச்சான். அவனை முடிக்கணும் . . நான் அவனை மலை உச்சியில இருந்து தள்ளிவிட்டுட்டேன்” என முடித்தாள்

“டெட் பாடிய என்ன பண்ணீங்க?”

“டெட் பாடிய பாக்கவே இல்ல . . தள்ளிவிட்டதோட சரி”

“அவன் மேல உங்க கைரேகை பட்டிருக்கா வாய்ப்பு இருக்கா?”

“நிச்சயமா வாய்ப்பு இருக்கு”

“அவன் உங்களை எதிர்க்கலயா?”

“நான் மதிமயக்கி மூலிகையால அவனை மயக்கி தள்ளிவிட்டேன்” எந்த இடத்திலிருந்து தள்ளினாள் என்பதையும் விவரித்தாள்.

“என்னையும் அந்த மூலிகைனாலதான் மயக்கம் அடைய வெச்சியா அக்கா?” சாரு விவாதத்தின் இடையே புகுந்தாள்.

“ஆமா சாரு. . சாரிடா நீ அங்க இருந்தது துரை ஆளுங்களுக்கு தெரிஞ்ச அடுத்த நிமிஷம் உனைக் கொன்னு புதைச்சிருப்பாங்க”

“பரவாயில்லகா” சாரு அவள் கையை பற்றிக் கொண்டாள். அந்த ஸ்பரிசம் இருவருக்குள்ளும் ஆயிரம் ஆர்த்தங்களை கற்பித்தது.

“இறந்தவன்கிட்ட உங்க பொருள் எதாவது இருக்க வாய்ப்பு இருக்கா? ஐ மீன் உங்க தலை முடி இல்ல டிரஸ்ல ஒரு பீஸ் இந்த மாதிரி?” நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாக பேசினான்.

“கண்டிப்பா இல்லனு என்னால உறுதியா சொல்ல முடியும். ஆனா அவனோட பொருட்கள் என்கிட்ட இருக்கு”

“என்ன?”

“இருங்க வரேன்” என சென்றவள் சில நொடிகளில் திரும்பினாள். அதை அவனிடமும் கொடுத்தாள். அதைப் பார்த்த ஆகாஷ் வாயை பிளந்தான்.

“இது கோல்டா?” என தங்க ஊசியை ஆச்சரியம் விலகாமல் பார்த்தபடி கேட்டான்.

“ஆமா சுத்தமான தங்கம் . . சதுரகிரியில இருக்கிற காலாங்கி வனத்துக்கு நார்த் செய்டுல கற்றாமரை  மூலிகை இருக்கு. வேர் பகுதி ஜடை மாதிரி இருக்கும். அதுல இரும்பு ஊசியை குத்தினா அது காப்பரா மாறும். அதையே திரும்ப எடுத்து குத்தினா அது சில்வரா மாறும் அகெய்ன் சில்வரை குத்தினா கோல்டா மாறும். இது எல்லாருக்கும் சுலபமா கிடைச்சிடாது.”

“என்னங்க ஹாரி பாட்டர் கதை மாதிரி இருக்கு” என்றான். சாருவும் அதை வாங்கிப் பார்த்தாள்.

“இதுவும் அவன்கிட்ட இருந்தது” என அவனிடமிருந்து எடுத்த மூலிகையின் போட்டோ மற்றும் குறிப்புகள் போன்றவற்றைக் கொடுத்தாள். அனைத்தையும் நிதானமாக பார்த்தான்.

“இது மட்டும் வெளி உலகத்துக்கு தெரிஞ்சா . .” பேசியவனை இடைமறித்த சாரு “தங்கம் விலை குறைவா கிடைக்கும்” என்றாள்.

“இரும்பு விலை அதிகமாயிடும்” என்றான்.

“சதுரகிரி போன்ற இடங்கள்ல நிறைய மேன்மையான ரகசியங்கள் இருக்கு. இப்போதைய சூழ்நிலைல மக்களுக்கு இதெல்லாம் தெரியாம இருக்கிறதுதான் நல்லது. வெளிய தெரிஞ்சா பெரிய அழிவை தான் ஏற்படுத்தும்” என்றாள் சுவாதி. மற்ற இருவரும் இதை ஆமோதித்தார்கள்.

“ துரைக்கு என் மேல நம்பிக்கை வந்துச்சி. ஆனா எனக்கு எதிரா செயல்பட்டா உன்னை போலீசுக்கு காட்டிக் கொடுப்பேன்னு சிலசமயங்கள்ல மிரட்டுவான். கொஞ்சம் கொஞ்சமா அவனுக்கு சாதகமா நடந்துகிட்டதாலதான் அவனோட மூலிகைகள்ல சாதாரண இலைகளை  கலக்க முடிஞ்சிது. அதோட ஆதாரங்களையும் திரட்டி உங்க அப்பாகிட்ட கொடுக்க முடிஞ்சிது. ஆனா சட்டம் காவல் அரசியல் எல்லா இடத்திலையும் அவன் ஆட்கள் அசுர பலத்தோட இருக்காங்க”

“தங்கமா மாத்தினது பத்தி கேட்கலயா?”

“அவன் தனியா இதை செய்தான். ஆனா வெளில துரை குரூப்ல இருக்கிற மாதிரி காட்டிப்பான். அதனால இந்த விஷயம் துரைக்கு தெரியல”

“சோ குரூப்ல சேர அவன் வெக்கிற பரிட்சையில பாஸ் பண்ண்ணுமா?”

“என் பிரெண்ட் செல்வன் தன் உயிரையே கொடுத்தான்” என சுவாதி சொல்லும் போதே கண்கலங்கியது. சாரு அவள் தோளை ஆறுதலாக பற்றினாள்.

“விஷபோஜனம் கொடுத்து கொன்னுட்டாங்க” கண்களை துடைத்தபடி பேசினாள் சுவாதி.

“விஷபோஜனமா?”

“ஸ்லோ பாய்சன் . . விஷ மூலிகை கலவையினால தயார் செய்தது . . கொஞ்சம் கொஞ்சமா உயிரை எடுக்கும் . . போஸ்ட் மார்ட்டம் பண்ணாலும் கண்டு பிடிக்க முடியாது. இதை தெரிஞ்சே செல்வன் சாப்பிட்டான். தன் உயிரையே இந்த மிஷின்காக கொடுத்தான்”

அப்போது ராம்மூர்த்தி உள்ளே நுழைந்தார். அவர் முக பாவத்திலியே அவர்கள் உரையாடலை கேட்டிருக்கிறார் என்பது புரிந்தது.

“ சுவாதி நீ எந்த கொலையும் செய்யலைமா . . . தைரியமா இரு” என்றார்.

இதைக் கேட்ட மற்ற மூவரும் நிம்மதியானார்கள்.

“அப்பாடா அப்படினா அவன் சாகலயா அங்கிள்?” சாரு கேட்டாள்

“இல்ல அவன் செத்துட்டான்”

மீண்டும் மூவருள்ளும் குழப்பம் குடிக் கொண்டது.

தொடரும் . .

Episode # 23

Episode # 25

{kunena_discuss:1199}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.