(Reading time: 10 - 19 minutes)

தொடர்கதை - காணாய் கண்ணே - 12 - தேவி

Kaanaai kanne

ப்ரித்வியின் ஏற்பாட்டின் படி அன்றைய தினம் மாணவர்கள் பிகானர் நகரத்தைச் சுற்றிப் பார்க்க வேண்டும். முந்தைய இரண்டு நாட்களின் அலைச்சல் சற்று சோம்பலுடனே கிளம்பினார்கள்.

கிருத்திகாவிற்கும் களைப்பாகத் தான் இருந்தது. ஆனால் சீக்கிரம் விழித்து விட்டதால், முதலில் தயாராகி வெளியே வந்து விட்டாள். அன்றைக்கு லோக்கல் ட்ரிப் என்று ஏற்கனவே ப்ரித்வி சொல்லி இருந்ததால், வழக்கமாக அணியும் குர்தி, பட்டியாலா பேன்ட் அணியாமல், லாங் ஸ்கர்ட், கிராப் டாப் அணிந்து இருந்தாள். ஸ்டோல் கழுத்தைச் சுற்றி அணிந்து இருக்க, பார்க்க மிகவும் அழகாக இருந்தாள்.

ப்ரித்வி அவளைப் பார்த்ததும் காலை வாழ்த்துச் சொல்லி ,

“மேடம்ஜி.. இன்றைக்கு தங்களுடைய வீர சாகசம் என்ன என்று முடிவு செய்தாச்சா?” என்று கேட்டான்.

“பாஸ். அது எல்லாம் என்னோட எட்டாம் அறிவு டைம்க்கு டார்ச் போட்டுக் காட்டும். மீ பாலோ தட்”

“அது சரி.” என்று சிரித்தவன், அவளுக்கும் அவனுக்குமாக கப்களில் டீ ஊற்றிக் கொடுத்தான். அதை வாங்கியபடி ,

“பாஸ். எல்லாம் சரி. நேத்திக்கு நீங்க ஏன் திடீர்ன்னு நானும் ரவுடி தான்னு அந்த ரெஸ்ட்லிங்ல கலந்துகிட்டீங்க.”

“நீங்க தானே மேடம் சொன்னீங்க.. ?

“இந்தக் கதை எல்லாம் எங்கிட்ட விடாதீங்க. என்னோட எட்டாம் அறிவு சொல்றபடி பார்த்தா, நீங்க யாரையோ டைவேர்ட் பண்ண முயற்சி செஞ்சுருக்கீங்க.”

அவளின் புத்திக் கூர்மையில் வியந்தவன் ,

“எப்படி சொல்ற கிருத்திகா ?”

“எங்க டூர் ஆர்கனைசரா வந்துட்டு தேவை இல்லாத விஷயத்தைச் செய்யற பெர்சன் நீங்க கிடையாது. உங்களோட அரேஞ்ச்மென்ட்ஸ் அவ்ளோ கிளியர் & ஆர்கனைஸ்ட்டா இருக்கு. அந்த சண்டைப் போடச் சொன்னது நாந்தான். ஆனால் எனக்காக நீங்க இதில் இறங்கி இருக்க வாய்ப்பு இல்லை. அங்க இருக்கிறவங்களோட சென்ட்டர் ஆப் அட்ராக்ஷன் உங்ககிட்ட திருப்ப முயற்சி செஞ்சீங்க,  யாருக்காக இதைச் செய்தீங்கன்னு தான் தெரியல”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவள் ஊகத்தில் வியந்தாலும்  அதைக் காட்டிக் கொள்ளாமல்,

“ஹ. ஹ. உன் எட்டாம் அறிவு ஓவர் டைம் வேலை பார்க்குது போலே. அப்புறம் ரொம்ப சூடாகி , ஓய்வுக்கு சுவிஸ் ட்ரிப் கேட்கப் போகுதுப் பார்த்துக்கோ” என்று பேச்சை மாற்றினான்.

“பேச்சை மாத்தறீங்க. இட்ஸ் ஓகே. இப் பிரிஞ்சால் முற்றிங், பஜார் கமிங் “ என்று கூற, ஒன்றும் புரியாமல் ப்ரித்வி முழித்தான்.

“வாட்.. திருப்பிச் சொல்லு?”

“இப் ப்ரிஞ்சால் முற்றிங், பஜார் கமிங்”

“என்ன சொல்ற ஒன்னும் புரியல?

“கத்திரிக்காய் முத்தினால், கடைதெருவிற்கு தானே வரும்.

“ஊப்ஸ். இத தான் சொன்னியா.. நீ சொன்ன பழமொழியில் ப்ரிஞ்சால் தவிர ஒன்னும் புரியல.

“என்ன பிரின்ஸ்.. ஓல்ட் ஸ்டைலில் பழமொழின்னு சொல்லிகிட்டு. யூத் ட்ரென்ட் படி ப்ரூட் பாஷா சொல்லுங்க “

“அது சரி. நீ சொல்றது ப்ரூட் பாஷா மாதிரி இல்லை. ப்ரூட் அல்வா கேக்கற மாதிரி இருக்கு”

“ஹி.. ஹி.. கண்டு பிடிச்சிட்டீங்களா பாஸ். நீங்க கொடுத்த டீ உங்க கிட்டே பேசினதிலே டைஜெஸ்ட் ஆயிடுச்சு. மை ஸ்மால் ஸ்டமக் ஆஸ்கிங் சம் சாப்பாடு”

“தெய்வமே. உன் இங்கிலீஷ் தாங்க முடியல கிருத்தி. பாவம் அதை விட்டுடு. பிரேக் பாஸ்ட் டைனிங் ஹால் வந்தாச்சு. போய் சாப்பிடு”

“நீங்க வரலையா பாஸ். “

“இல்லைமா.. மை ஸ்டமக் ஆஸ்கிங் கொஞ்சம் ரெஸ்ட். சோ மீ கோயிங்..”

“வாட் அன் இங்கிலீஷ்..?” என்று ப்ரித்விக்கு ஹை பை கொடுத்தாள் கிருத்தி.

சிரித்துக் கொண்டே மற்றவர்களைக் கிளப்பச் சென்றான் ப்ரித்வி.

எல்லோருமாக அன்றைக்கு பிகானர் நகரத்தின் முக்கிய இடங்களான சுனார்க் கோட்டை , லக்ஷ்மி நிவாஸ் அரண்மனை, ராவ் பிகாஜி கோட்டை எல்லாம் பார்த்தனர்.

ஒவ்வென்றும் ஒவ்வொரு நூற்றாண்டில் கட்டப் பட்டக் கோட்டை. ராஜபுத்திரக் கட்டிடக் கலை, முகலாயர்களின் சலவைக் கல் கொண்டு கட்டப்பட்ட அரண்மனைகள் இவை.

அதில் சுனார்க் கோட்டை பார்க்கும் போது கிருத்திகாவிற்கு சொல்லத் தெரியாத உணர்வுகள் உண்டானது.

அந்தக் கோட்டைக்குள் அரண்மனைகள், கோவில், குளம், அருங்காட்சியகம் அனைத்தும் இருந்தது. பார்த்த அத்தனை பேரும் வியந்தார்கள். சிவப்பு நிறக் கல்லும், வெள்ளை மார்பிள் கல்லும் கலந்த அந்தக் கட்டடங்களைக் காணும் போது முன்னோர்களின் அறிவும், ரசனைப் பற்றியும் வியப்பு உண்டானது.

கோட்டைக் கதவுகளில் யானையின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, இரும்பு ஆணிகள் அத்தனை எளிதில் உடையா வண்ணம் பொருத்தப் பட்டு இருந்தன.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.