Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
தொடர்கதை - கலாபக் காதலா - 13 - சசிரேகா - 5.0 out of 5 based on 4 votes
Pin It

தொடர்கதை - கலாபக் காதலா - 13 - சசிரேகா

kalaba Kathala

திய நேரம் வீட்டிற்கு வந்த வேணுகோபாலனோ ஹாலில் சோபாவில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த முராரியைக் கண்டு வியந்தார்

”என்னடா மகனே படிக்கறியா” என கேட்க அவனோ

”படிக்கலைப்பா மனப்பாடம் பண்றேன்”

என சொல்ல அவரும் அமைதியாக அவன் பக்கத்தில் அமர்ந்து, அவனிடம் இருந்த புத்தகத்தை வாங்கிப் பார்த்துச் சிரித்தார்

”உனக்கு பித்து பிடிச்சிருக்கு முராரி”

“இன்னும் பிடிக்கலை, இனிமேல பிடிச்சிடும்”

”என்னடா ஆச்சி உனக்கு”

“என்னத்த சொல்றதுப்பா, ராதாகிட்ட மாட்டி நான் கஷ்டப்படறேன், அவளோட நட்பு வேணும், காதல் வேணும்னு ஆனா, இப்ப அவள் சொல்றதை செய்ய முடியாம கஷ்டமாயிருக்கு, நான் ஏதாவது சொதப்பினா அதையே காரணமா வைச்சி என்னை விட்டு விலகி போகலாம்னு ராதா ஆசைப்படறா, எதையாவது செஞ்சி அவளை கைப்பிடிக்கனும்னு நான் ஆசைப்படறேன், இதுல யாருக்கு வெற்றின்னு தெரியலையேப்பா”

“கண்டிப்பா உனக்குதான்டா சரி இப்ப இதை ஏன் படிச்சி நீ மனப்பாடம் பண்ற”

“என் விதிப்பா” என சொல்ல

”என்னடா சொல்ற, நான் போறப்ப நீ டான்ஸ் கத்துக்கத்தானே போன”

“ஆமாம் போனேன் எனக்கு அவள் கத்துக் கொடுக்கற டான்ஸ் ஸ்டெப்ஸ் சரியா வரலைப்பா, அபிநயமும் வரலை, அதோட டான்ஸ் ஆடறேன்னு நான் கீழே விழுந்து எழுந்ததுதான் மிச்சம்” என சொல்ல அவர் சிரித்தார்

”அச்சச்சோ கீழே விழுந்துட்டியா, மீசையில மண் ஒட்டிடுச்சா என்ன” என கேட்டு முராரியின் முகத்தைப் பார்த்து சிரிக்க அவனோ

”அதெல்லாம் ஒட்டலைப்பா, நீங்க வேற சிரிக்காதீங்கப்பா” என காட்டமாக சொல்ல அவரோ

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

”சரி சரி ம் ஆக அவளுக்கு புடிச்ச மாதிரி உன்னால டான்ஸ் ஆட முடியலைன்னு படிக்க ஆரம்பிச்சிட்டியா”

“இல்லைப்பா டான்ஸ் வரலைன்னு சொன்னேன், சரி வா பாட்டு கத்துக்கோன்னு இதோ இந்த பக்கத்தில இருக்கறத பாடி காட்டினா, திரும்ப என்னை பாடச்சொன்னா, என்னால முடியலை அதான் மனப்பாடம் பண்ணி பாடி காட்டச் சொல்லிட்டு, அவள் நிம்மதியா தூங்கறப்பா, எனக்குதான் நிம்மதி போச்சி” என அலுப்பாகச் சொல்ல அவரோ

”காதல்னா அப்படித்தான் முராரி, நீ கேட்டதும் கிடைச்சிட்டா உனக்கு அதோட மகிமை புரியாதே, அல்ப்பமா நினைச்சிடுவ, அதே நீ கஷ்டப்பட்டு ராதாவை அடைஞ்சாதான் அவளோட நீ காலமெல்லாம் சந்தோஷமா வாழ்வ”

”புரியுதுப்பா ஆனா, ராதா ஏதோ சதி பண்றாப்பா, எனக்கு வராததா பார்த்து எனக்கு கத்துக் கொடுக்கறா, அதுல நான் தப்பு பண்ணா என்னை வேணாம்னு சொல்லிட்டு போயிடுவாள்னு தோணுதுப்பா” என சோகமாகச் சொல்ல அந்நேரம் அங்கு வந்தாள் ராதா

”அங்கிள்” என ஆசையாக அழைத்துக் கொண்டு அவரிடம் வர அவரோ சந்தோஷமாகச் சிரித்தார்

”என்னம்மா என் பையனை ஆட வைக்க முடியலைன்னு பாடகனாக்க போறியா என்ன”

”என்ன செய்றது அங்கிள், அவருக்கு நாட்டியம் வரலை ஆனா அவர் நல்லா பாடுவாரே அதான் பாட்டு கத்துக் கொடுக்கிறேன்” என சொல்லவும்

”என்னவோம்மா செய் ஆனா, பார்த்து கத்துக்கொடு இவன் கொஞ்சம் கோபக்காரன், நீ செய்ற காரியத்தில வெறுப்பு வந்துடப் போகுது”

“அப்படி எதுவும் ஆகாது அங்கிள்” என சொல்லிக் கொண்டே இன்னொரு சோபாவில் அமர்ந்தாள். முராரியை பார்த்தவள்

”என்ன படிச்சி மனப்பாடம் பண்ணிட்டீங்களா”

“ம்” என்றான் கோபமாக

”என்ன கோபம் நான் நல்லதுதானே சொல்றேன்”

“இந்த வயசுக்கு எனக்கு எது நல்லதோ அது கிடைச்சா எனக்கு அதுவே போதும்”

”உங்களை விட்டா நீங்க கண்டபடி உளறிக்கிட்டு இருப்பீங்க, சரி சரி படிச்சது போதும் எங்க பாடுங்க”

“பாடறதா முதல்ல நான் படிச்சதை ஒப்பிக்கிறேன் அது சரியா இருக்கான்னு பாரு அப்புறம் பாடறேன்”

“இது சரியா வராது படிக்கறப்பவே பாட்டா படிச்சி மனசுல பதிய வைச்சிருக்கனும்ல”

”இதப்பாரு ராதா நான்” என அவன் பேசுகையில் இடையில் புகுந்தாள் ராதா

”ராதா இல்லை டீச்சர்”

”சரி ராதா டீச்சர் போதுமா”

“போதும் என்ன விசயம் சொல்லுங்க”

“ஒரே நாள்ல எல்லாத்தையும் கத்துக்க முடியாது டீச்சர் புரிஞ்சிக்குங்க”

“அதே போல ஒரே நாள்ல நீங்க ஆசைப்படறதும் கிடைக்காதே, அதை நீங்களும் புரிஞ்சிக்குங்க”

“நீ எதையோ மனசுல வைச்சிக்கிட்டு பேசற” என்றான்

About the Author

Sasirekha

Sasirekha

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - கலாபக் காதலா - 13 - சசிரேகாராணி 2019-04-05 10:55
கதையை எப்படி எப்படியோ கொண்டு போய் சுத்த விடறீங்களே கோவிந்த் குழம்பின மாதிரி நாங்களும் சேர்ந்து குழம்பியாச்சி ராதாவோட விளையாட்டு வினையாகப் போகுது முராரிக்கு அவங்க அப்பாவே ஒவ்வொரு முறையும் விளக்கம் கொடுத்தா பாவம் ராதா நிலைமை என்னாகுமோ :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 13 - சசிரேகாsasi 2019-04-08 11:34
Quoting ராணி:
கதையை எப்படி எப்படியோ கொண்டு போய் சுத்த விடறீங்களே கோவிந்த் குழம்பின மாதிரி நாங்களும் சேர்ந்து குழம்பியாச்சி ராதாவோட விளையாட்டு வினையாகப் போகுது முராரிக்கு அவங்க அப்பாவே ஒவ்வொரு முறையும் விளக்கம் கொடுத்தா பாவம் ராதா நிலைமை என்னாகுமோ :Q:

நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கலாபக் காதலா - 13 - சசிரேகாvijayalakshmi 2019-04-05 10:45
nice epi sasi good :clap: murari radhavin kadhal vera level radha muraiya fool aakarangala illai radhave fool aagarangalanu theriyalaye steam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 13 - சசிரேகாsasi 2019-04-08 11:34
Quoting vijayalakshmi:
nice epi sasi good :clap: murari radhavin kadhal vera level radha muraiya fool aakarangala illai radhave fool aagarangalanu theriyalaye steam

நன்றி விஜிக்கா
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கலாபக் காதலா - 13 - சசிரேகாmadhumathi9 2019-04-04 20:00
wow nice epi.radhaavin unarvai muraari purinthu kollavillaiye.muraariyin appaathaane sonnar :Q:
Egarly waiting 4 next epi. :GL: (y) :thnkx: 4 thix epi.tqvm sasi :-) (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 13 - சசிரேகாsasi 2019-04-08 11:34
Quoting madhumathi9:
wow nice epi.radhaavin unarvai muraari purinthu kollavillaiye.muraariyin appaathaane sonnar :Q:
Egarly waiting 4 next epi. :GL: (y) :thnkx: 4 thix epi.tqvm sasi :-) (y)

அது வந்து மது முராரிக்கு காதல் இப்பதானே வந்திருக்கு இனிமேல புரிஞ்சிக்குவாரு கமெண்ட் சூப்பர் நன்றி மது
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கலாபக் காதலா - 13 - சசிரேகாmadhumathi9 2019-04-04 19:57
wow nice epi.radhaavin unarvai muraari purinthu kollavillaiye.muraariyin appaathaane sonnar :Q:
Egarly waiting 4 next epi. :GL: (y) :thnkx: 4 thix epi.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top