கிருத்தியைத் தேடிய ப்ரித்வி, அவள் மட்டும் சன்னதியில் அமர்ந்து இருக்கவே, அவள் அருகே சென்று மெதுவாக “கிருத்தி” என்று அழைத்தான். அவள் காதில் விழுந்த மாதிரி தெரியாததால், அவள் தோளில் கை வைத்து அசைத்தபடி “தேவி” என்றான்.
அவன் அசைத்ததில் தன் உணர்வுப் பெற்ற கிருத்திகா ப்ரித்வியைப் பார்த்து முழித்தாள். அவள் திரும்பியதும் அவளின் அழுத விழிகளைப் பார்த்துத் திகைத்த பிரித்வி,
“என்னாச்சுமா?” என்று மென்மையாக வினவினான். அவனின் கேள்வியில் தன்னைச் சுற்றிலும் பார்த்து விட்டு ,
“ஒண்ணுமில்லை பிரின்ஸ்” என்றாள். அவன் மீண்டும் கேட்கவும்,
“நிஜமாவே ஒண்ணுமில்லை பாஸ். என்னவோ அம்மன் முகம் பார்த்ததும் ஒரு பீலிங் அதுதான் கண்ணில் வாட்டர் பால்ஸ்” என்று சிரித்தப் படிக் கூறவும்,
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ![]()
“சரி வா , போகலாம்” என்றான் ப்ரித்வி.
அவனோடு இணைந்து நடந்தாலும் கிருத்திகாவின் எண்ணம் முழுதும், அந்த தீக்குள் இறங்கிய பெண்ணின் நினைவாகவே இருந்தது.
ப்ரித்வியோடு சென்ற கிருத்திகா அன்று அதற்குப் பிறகு அதிகம் பேசிச் சிரிக்கவில்லை. அவளின் பிரெண்ட்ஸ் கூட என்ன என்று கேட்டதற்கு ஒன்றும் சொல்லவில்லை.
ப்ரித்வி அவளைக் கவனித்தபடி தான் இருந்தான். ஆனால் நெருங்கிப் பேச முயற்சி செய்யவில்லை. ப்ரித்வி அன்றைக்குப் படுக்கும்போது கிருத்திகாவின் அழுத விழிகள் அவனை என்னவோ செய்தது. இதுவரை அவளின் பாதுகாப்புப் பற்றியே சிந்திப்பவன், அவள் ஏன் அழுதாள் என்ற சிந்தனையே அவனுள் ஓடியது.
இன்னும் அழுது கொண்டு இருப்பாளா அல்லது சரியாகி இருப்பாளா என்று தெரிந்து கொள்ள வேண்டும் போல் இருந்தது. ஆனால் இந்த நேரத்தில் அவளிடத்தில் போய் நிற்பது முறையல்ல என்ற எண்ணமே அவனைத் தேக்கியது.
தன்னைச் சமாளித்துப் படுத்தவனுக்கு, முதல் நாள் ஒட்டகத்தில் செல்லும்போது முகம் மூடி அவள் கண்கள் மட்டும் தெரிந்த காட்சியும், இப்போது அவளின் முகம் மறந்து அந்த விழிகள் மட்டும் கண்ணீர் விடும் காட்சியும் மாறி மாறித் தோன்றியது. அவனால் என்ன முயன்றும் அந்த கண்களைத் தவிர்க்க முடியவில்லை.
இங்கே கிருத்திகாவோ இன்றைக்கு உறங்கவே பயந்தாள். தன் கண்ணில் தெரிந்த காட்சி, கனவில் வருமோ? அப்போது அந்த உடல் எரிவதைத் தன்னால் தாங்க முடியுமா என்ற கேள்வி எழவே, தூங்க முடியாமல் தவித்தாள்.
தொடரும்!
Go to Kaanaai kanne story main page
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.