(Reading time: 14 - 28 minutes)

தொடர்கதை - காணாய் கண்ணே - 10 - தேவி

Kaanaai kanne

கிருத்திகா திடுக்கிட்டு எழுந்தாள். கனவில் கேட்ட அந்தச் சிரிப்பொலி இப்போது கூட கேட்பது போல் ஒரு பிரமை ஏற்பட்டது. எழுந்து மணி பார்க்க அது இரவு இரண்டு மணியைக் காட்டியது. சுற்றுமுற்றும் பார்த்ததில்,  அவளோடு தங்கியிருந்த பிரெண்ட்ஸ் எல்லாரும் ஆழ்ந்து உறங்கிக் கொண்டு இருந்தார்கள்.

கிருத்திகாவின் கனவில் வந்த மகாரானா பிரதாப் தவிர ப்ரித்விராஜ், ஒட்டகத்தில் லாவகமாக ஏறிய பெண் , அவர்கள் சென்ற இடம் எல்லாமே இன்றைக்கு நடந்த நிகழ்வுகளோடு மிகவும் ஒத்திருந்தது.

கிருத்திதிகாவிற்கு மீண்டும் தன் படுக்கையில் படுக்க யோசனையாக இருந்தது. கனவு என்றால் அது கண் விழித்ததும் நினைவு இருக்காது. ஆனால் இவளுக்கோ நன்றாக நினைவு இருக்கிறது. இதை எப்படி எடுக்க என்று தெரியவில்லை.

அத்தோடு இன்றைக்கு காலையிலேயே ஒட்டகத்தில் செல்லும் போது காதுகளில் கேட்டக் குரல் பற்றி யோசிக்கையில், இது வெறும் கனவு கிடையாது. எதையோ நினைவுப் படுத்துவதாகவேத் தோன்றியது.

அன்றைக்கு அலைந்த அலைச்சலால் கண்கள் சொருக, வேறு வழியின்றி படுத்தாள். நல்ல ஆழ்ந்த தூக்கத்திற்குள் செல்லுகையில் அந்த ராணாவின் சிரிப்பு மீண்டும் காதுகளில் கேட்டது. அத்தோடு அந்தக் கனவும் தொடர்ந்தது.

ரானா பிரதாப் சிங் ப்ரித்விராஜ் பற்றிக் கூறவும் கேட்டுக் கொண்டு இருந்த பிகானர் தலைவர் பெரும் மகிழ்ச்சி கொண்டார்.

ப்ரித்விராஜ்ஜும்,

“தங்களைப் போன்ற மாவீரர் என்னை அறிந்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது மகாராஜ் “ என்று தலை வணங்கினான்.

“அதற்கு முற்றிலும் தகுதியானவான் தான் நீ” என்றுக் கூறிக் கொண்டு இருக்கும் போதே, ஒட்டகத்திலிருந்து இறங்கிய தன் தம்பி மகள் அங்கேயே நின்று இருப்பதைக் கண்ட ரானா பிரதாப்,

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“தேவி , நீ உள்ளே செல்லலாம். மற்றவர்களோடு தங்கிக் கொள்” என்றார்.

“மகாராஜ் , போர்ப் பயிற்சி நடைபெறும் இடத்திற்குச் செல்லும் போது என்னையும் தாங்கள் அழைத்துச் செல்ல வேண்டும்” என்றுக் கேட்டாள் அந்தப் பெண்.

அவளின் கேள்வியை மற்றவர்கள் ஆச்சரியமாகப் பார்க்க, மகாரானாவோ,

“உன் ஆர்வத்திற்கு அளவே இல்லையா தேவி. “

‘காகூ.. “ என்று சற்று வெட்கத்துடன் கூற,

“சரி.. சரி. தற்போது ஒய்வு எடுத்துக் கொள். நாளைதான் போர்ப் பயிற்சி நடக்கும் இடத்திற்குச் செல்கிறோம்” என்று கூறினார் ராணா,

தன் பெரிய தந்தையான ரானா பிரதாப் மற்றும் பிகானர் தலைவர் இருவரிடமும் தலை வணங்கி விடை பெற்றாள்.

இதை எல்லாம் வேடிக்கை பார்த்த ப்ரித்விராஜ்க்கு அந்தப் பெண்ணை ஏற்கனவே அறிந்து இருக்கிறோமோ என்ற சிந்தனை ஓடியது.

அன்று ஒருநாள் இருக் கொள்ளைக்காரர்களின் கைகளைத் துண்டாடியவள் என்ற நினைவு வந்தது. அன்றைக்குச் அதிகார அளவில் இருக்கும் யாராவது ஒருவரின் உறவினராக இருப்பாள் என்று எண்ணியிருந்தான். மஹாராணாவின் புதல்வி என்று தெரிந்த பின் ஆச்சர்யம் அடைந்தான். அதோடு அந்தத் துணிச்சலும் எங்கிருந்து வந்தது என்றும் புரிந்து கொண்டான்.

மஹரானாவின் சகோதரரின் மகளான கிரண் தேவி தன் பெரிய தந்தையின் மேல் அளவில்லா மதிப்பு வைத்து இருந்தாள். அவளுக்குப் போர்க் கலைகளின் மீது இருந்த ஆர்வம் காரணமாக மகாராணாவே அவளுக்கு வாள்ப் பயிற்சி அளித்து இருந்தார். குதிரையேற்றமும் பழக்கி இருந்தார்.

மஹாராணாவின் புரவியான சேத்தக்கையும் பழக முயற்சித்தாள். ஆனால் அது விடவில்லை. ராணாவைத் தவிர வேறு யாராலும் அதில் அமர முடியாது.

அவளின் தந்தை ஷக்தி சிங் பெண்ணாக அடங்கி இரு என்று அவளை திட்டிய போதும் , ரானா அவள் இஷ்டத்திற்கு விடும்படி கூறியதால், ஒன்றும் சொல்லாமல் விட்டார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சுபஸ்ரீயின் "இதயச் சிறையில் ஆயுள் கைதி..." - காதலும் மர்மமும் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

ஷக்தி சிங் உதய்பூரிலிருந்து அரச வேலைகளைப் பார்க்க, ரானா ஊர் ஊராகச் சென்று படை திரட்டுவார். அவரின் அரசியல் பயணமானாலும் சரி, போர் பயிற்சி நடைபெறும் இடமானாலும் கிரண் தேவி தானும் செல்ல விரும்பினாள்.

கிரண் தேவி பற்றிய விவரகள் பிகானர் வரையிலும் எட்டி இருந்தாலும், இதுவரை அவளை யாரும் பார்த்தது இல்லை.

பெண்கள் தங்கி இருக்கும் இடத்திற்குச் சென்ற கிரண் தேவிக்கும் ப்ரித்விராஜை அடையாளம் தெரிந்து இருந்தது.

அன்றைக்குக் கொள்ளைக்காரர்களிடம் இருந்து காப்பாற்ற வேகமாக வந்த வீரன் என்று புரிந்து கொண்டாள். வெறும் போர் வீரன் என்று எண்ணியிருக்க, இளவரசனாகப் பார்த்ததும் ஆச்சர்யம் அடைந்தாள்.

ராஜபுத்திர இளவரசர்கள் எல்லோரும் சற்று ஆரவாரமாக இருப்பவர்கள். எந்த விஷயத்திர்காகச் சென்றாலும் நான்கு, ஐந்து பேர் இல்லாமல் செல்ல மாட்டார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.