(Reading time: 14 - 28 minutes)

வேகமாக ப்ரித்வி அருகில் செல்ல முயற்சிக்க, அதற்குள் அறிவிப்பாளர் , அடுத்த போட்டியாளர் ப்ரித்விராஜ் என்று அறிவிக்கவும், அப்படியே நின்று விட்டாள். அவன் பேரைக் கேட்டதும் அங்கிருந்த இவர்கள் குழுவினர் அனைவரும் அருகில் வர, கிருத்திகாவும் நின்று கொண்டு இருந்தாள்.

கேம் ஆரம்பிக்கவும், அந்த எதிராளியின் அடிகள் ஒவ்வொன்றும் இடி போல் இருந்தது. பார்த்துக் கொண்டு இருந்த அனைவரும் ப்ரித்விக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று சொல்லிக் கொண்டு இருந்தனர்.

உள்ளூர உதறலெடுக்க, க்ருத்திக்கா தான் காரணம் என்று தெரிந்தால் மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்று பயந்து கொண்டு இருந்தாள். மற்றவர்கள் சொல்வதைக் காட்டிலும், ப்ரித்வியைத் தேவை இல்லாமல் சீண்டி விட்டோமோ என்ற எண்ணமே ஓடியது.

முதல் பதினைந்து நிமிடங்கள் எதிராளியின் கை ஓங்கி இருக்க, அடுத்த பதினைந்து நிமிடங்கள் ப்ரித்வி அடித்து துவம்சம் செய்து விட்டான். அவனின் ஒவ்வொரு அடிக்கும் இங்கே கைதட்டலும் , விசிலும் பறந்தது.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

கடைசியில் அந்த எதிராளி கீழே விழவும், ப்ரிதிவி வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது.

அவன் வெளியில் வரவும், மாணவர்கள் அவனைத் தோளில் தூக்கி சுற்றினர். அவர்களுடைய பேராசிரியர்கள் இருவரும்,

“மிஸ்டர். ப்ரித்வி நீங்க இப்படிப் பண்ணுவீங்கன்னு நினைக்கலை. பொறுப்பா எங்களை வழி நடத்த வேண்டிய நீங்க தேவை இல்லாத வேலை செய்யறீங்க. இதில் உங்களுக்கு ஏதாவது ஆனால், எங்களுடைய நிலைமை என்ன?” என்று சற்றுக் கடுமையாகக் கேட்டனர்.

அவர்கள் கேட்கும்போது கிருத்திகாவும் அருகில் தான் இருந்தாள். அவள் தன்னால் தான் என்று சொல்ல வாயெடுக்க, ப்ரித்வி அவளைப் பார்த்து வேண்டாம் என்பது போல் தலை அசைத்தான்.

பிறகு பேராசிரியர்களிடம் “சாரி சார், இனிமேல் இப்படி நடக்காது. ஒரு ஆர்வத்தினால் இப்படி செய்து விட்டேன்” என்று கூறினான்.

அவர்கள் சற்று அதிருப்தியாக தலையசைத்தாலும், அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை.

அவர்கள் சென்றதும்

“சாரி பாஸ். உங்ககிட்டே விளையாட்டாத் தான் சொன்னேன். நீங்க அதை சீரியசா எடுத்துகிட்டீங்க” என்று குற்ற உணர்ச்சியோடு கிருத்திகா கூறினாள்.

“ஹேய்.. இட்ஸ் ஓகே. நானும் வேடிக்கைகாகத் தான் போனேன். ஆனால் அவன் கொஞ்சம் முரடாகத் தெரிந்ததால் நானும் முழு பலம் கொடுக்க வேண்டியதாயிற்று..”

பிறகு மற்ற கலை நிகழ்சிகளும் பார்த்துவிட்டு தங்கள் அறைக்கு திரும்பிச் சென்றனர்.

ப்ரித்வி மட்டும் அறைக்கு வெளியே வந்து போன் பேசிக் கொண்டு இருந்தான்.

“எஸ் சார். இன்றைக்கும் அவன் பாலோ செய்தான். அவங்க தனியாக ஆர்சேரி அருகில் நின்று கொண்டு இருக்கும் போது பக்கத்தில் மயக்க மருந்து கொண்ட துணியோடு சென்று விட்டான். நான் வேகமாக கிளையன்ட் அருகில் சென்றதும் அவன் சற்றுத் தாமதித்தான். அதற்குள் நம் ஆட்கள் அவனைப் பிடித்து உதைக்க ஆரம்பித்து விட்டனர். அது வெளியில் தெரியாமல் இருக்க எல்லோரின் கவனத்தையும் என் பக்கம் திருப்பி விடவே, அந்த ரெஸ்ட்லிங் சண்டை போடச் சென்றேன்” 

“அந்த ஆள் பற்றிய விவரம் தெரிந்ததா?”

“இல்லை. இவனும் லோக்கல் ரவுடி தான். அவனை யார் அனுப்பினார்கள் என்ற விவரம் சொல்லவில்லை. “

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "காயத்ரி மந்திரத்தை" - சமூக தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“ஓகே. ப்ரித்வி. பட் இன்னும் கொஞ்சம் கவனமா இருங்க. அவனுடைய நடவடிக்கைகள் பார்த்தால் அவன் இத்தோடு விடுவான் என்று தோன்றவில்லை.”

“சார் , எனக்கு ஒரு யோசனை. கிளையன்ட்ட அந்த கும்பலிடமே மாட்ட விட்டு அவனைப் பிடித்தாலென்ன?

“ஹ்ம்ம். யோசிக்கலாம் ப்ரித்வி. கிளையன்ட் பேர் வெளியில் வரக் கூடாது. அது முக்கியம்”

“ஓகே. சார். வில் டூ மை பெஸ்ட்” என்று கூறி முடித்தான் ப்ரித்வி.

ப்ரித்வி கிருத்திகாவின் பாதுகாப்பு பற்றிய கவலையில் தூக்கத்தை தவிர்த்து இருக்க, க்ருத்திகாவிற்கோ அடுத்து கனவில் என்ன என்ன காட்சிகள் வருமோ என்று யோசனையோடு தூங்காமல் கிடந்தாள்.

தொடரும்!

Episode # 09

Episode # 11

Go to Kaanaai kanne story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.