(Reading time: 11 - 21 minutes)

தொடர்கதை - காணாய் கண்ணே - 09 - தேவி

Kaanaai kanne

பிகானர்க்கு அருகில் உள்ள அந்த கிராமத்திற்கு ஒட்டகத்தில் செல்ல, செல்ல மாணவர்களின் ஆராவாரம் அதிகமாகவே இருந்தது. ஆனால் ப்ரித்வி எச்சரித்து இருந்ததால் , அதை சற்று அடக்கியே வெளியிட்டனர்.

ஒரு சில மாணவர்கள் பயத்தினால் ஒட்டகச் சவாரிக்கு வர மறுக்கவே, அவர்களை ஜீப் மூலம் விழா நடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

ஏதோ  ஏதோ எண்ணங்கள் கிருத்திகாவிற்குத் தோன்றிய போதும் , அவள் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் , ஒட்டகச் சவாரியை அனுபவித்து வந்தாள். அதிலும் அவளுக்கு இது புதிதாகவும் தோன்றவில்லை. அடிக்கடி பழகிப் போன ஒன்றாகவே இருந்தது.

பொதுவாக அவளுக்கு முடி விரித்து விடும் பழக்கம் கிடையாது. நீளமான முடி என்பதால் பராமரிக்க கஷ்டம் என்று, முடிந்த வரை பின்னி விடுவாள்.

இன்றைக்கு பாலைவன சவாரி என்பதால் , நன்றாகப் பின்னி அதைக் கொண்டையாக தன் கேட்சி கிளிப்பில் அடக்கியிருந்தாள். பயணத்திற்கு ஏற்ற உடையாக ஜீன்ஸ் , குர்தி அணிந்து இருந்தாலும், எதற்கும் என்று வைத்து இருந்த ஸ்டோலால் முகத்தை தலையோடு சேர்த்து மறைத்து சுற்றி இருந்தாள்.

சுற்றிலும் மாணவர்கள் பைனகுலரால் பார்த்துக் கொண்டே வர, இவர்களுக்குத் தலைமை தாங்கி மற்றொரு ஒட்டகத்தில் ப்ரதிவி வந்து கொண்டு இருந்தான். அங்கே அங்கே நின்று செல்பி, குரூப் போட்டோ என்று எடுக்க, அதற்கும் சற்று அவகாசம் கொடுத்தே அழைத்து வந்து கொண்டு இருந்தான். மாணவர்கள் ஒரு சிலர் ப்ரித்வியோடும் சேர்ந்து போட்டோ எடுத்தனர்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அந்தக் கிராமத்திற்கு வந்த போது அங்கே மதுரை சித்தரை திருவிழா போல் கூட்டம் இருப்பதைப் பார்த்து எல்லோரும் அசந்து நின்றனர்.

ஒரு பக்கம் ஜெயன்ட் வீல் நிற்க, மற்ற பக்கம் சிறு சிறு கடைகள் இருந்தன. ஊருக்கு வெளியே ஒட்டகத்தில் இருந்து இறங்கி, உள்ளே நடக்க நடக்க, கூட்டம் முண்டியடித்தது.

அங்கே இவர்கள் இறங்கும் போதே சுற்றிலும் ஒரு நோட்டமிட்டு விட்டு, மாணவர்களை எச்சரித்து அனுப்பினான். இவர்களுக்கு என்று ஒதுக்கி இருந்த இருக்கைகளின் விவரத்தைச் சொல்லி, நிகழ்ச்சி ஆரம்பிக்க பதினைந்து நிமிடம் முன் வந்து விடச் சொன்னான்.

எப்போதும் போலே மூன்று குழுவாகப் பிரிந்து தான் சென்றார்கள். தன் உதவியாளர்கள் பொறுப்பில் தான் அனுப்பியும் வைத்தான்.

ப்ரித்வி மட்டும் கிருத்திகா இருந்த குழுவில் இணைந்து கொண்டான். அவன் மனதில் இவர்களைப் பின் தொடர்ந்த அந்த கும்பல் இங்கேயும் வரக் கூடுமோ என்ற சந்தேகம் இருந்தது,

ஆனால் இந்தக் கூட்டத்தில் அவர்களைக் கண்டுபிடிப்பது சிரமம் என்று உணர்ந்து, மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம் என்று அவர்களைக் கவனித்துக் கொண்டான்.

அவனுக்கு இன்னும் கிருத்திகாவைப் பின் தொடர்ந்தார்களா அல்லது மாணவிகள் கும்பலாக இருக்கவே அவர்களைக் கடத்தி வேட்டையாடும் கும்பலைச் சேர்ந்தவர்களா என்று தெரியவில்லை. கிருத்திகாவின் ஓவர் சுறுசுறுப்பு அவர்களின் கண்ணில் பட்டு, அவளைக் கடத்துவது எளிது என்றுப் பின் தொடர்கிறார்களோ என்றும் எண்ணினான்.

இருந்தாலும் ஒவ்வொருவரு பிரிவிலும் முன் பக்கமும், பின் பக்கமும் மாணவர்களை விட்டு, நடுவில் மாணவிகளை நடக்கச் சொன்னான். காலேஜ்ஜில் மாணவர்களும், மாணவிகளும் எதிரும் புதிருமாக இருந்தாலும், வெளி இடத்தில் ஒருவருக்கொருவர் அனுசரித்தே நடந்து கொண்டனர். அதிலும் கிருத்திகா தனியாக அந்த ரகசிய அறைக்குள் சென்று வந்ததைப் பார்த்து, அவளின் பிரெண்ட் திலிப் மற்றும் ராகவி இருவரும் அவளை விட்டுப் பிரியாமல் பார்த்துக் கொண்டு இருந்தனர். ராகவிதான் ஒட்டகத்திலும் க்ருதிகாவோடே வந்தாள்.

ராகவி ,

“ஹேய், கிருத்தி , நான் என்னவோ நம்ம மக்கள் தான் திருவிழா எல்லாம் கொண்டாடுவாங்கன்னு நினைச்சேன். இங்கே நமக்கு மேலே இருக்காங்களே.” என்று கேட்டாள்.

“ஆமாம். நான் கூட எதிர்பார்க்கலை. “ என்று கூறியபடி வந்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "காணும் இடமெல்லாம் நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

சுற்றிலும் ராஜஸ்தான் டூரிசம் ஏற்பாடு செய்து இருந்த பொருட்காட்சி திடல் இருக்க, வேடிக்கைப் பார்த்தபடி வந்தனர். அங்குள்ள ஹன்டிக்ராப்ட் பொருட்கள் எல்லாம் பார்க்க அழகாகவும், விலை குறைவாகவும் கிடைத்தது.

பெட்ஷீட், சோபா கவர் , கார்பெட் இது எல்லாம் சென்னையில் கிடைக்கும் விலையில் பாதி விலைக்கே கிடைத்தது. ஆனால் எப்படிக் கொண்டு செல்வது என்று யோசித்தபடி ஒவ்வொருவரும் பேசிக் கொண்டு நடந்தனர்.

எல்லோரும் ப்ரோக்ராம் நடக்கும் ஸ்டேடியத்திற்குச் சென்று தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர்.

பதினொரு மணிக்கு மேல் நிகழ்ச்சிகள் தொடங்கப் பட்டது. ராஜஸ்தான் சுற்றுலாத் துறை அமைச்சர் வந்து நிகழ்ச்சிகள் தொடங்கி வைத்தார்.

முதலில் ஆர்மி வீரர்கள் பேண்ட் வாசித்தனர். அதற்குப் பின் ஒட்டகங்கள் அலங்கரிக்கும் போட்டி நடந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.