Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
தொடர்கதை - கலாபக் காதலா - 10 - சசிரேகா - 5.0 out of 5 based on 4 votes
Pin It

தொடர்கதை - கலாபக் காதலா - 10 - சசிரேகா

kalaba Kathala

செவ்வாய் கிழமை

விடிகாலையில் கண் விழித்தாள் ராதா, கண்கள் எரிந்தன, கண்கள் திறக்க முடியாமல் சிரமப்பட்டாள். இரவு முழுவதும் அழுததன் விளைவு கண்கள் சிவந்து சிறிது வீக்கத்துடனும் இருக்கவே தனது உள்ளங்கையால் கண்களை தேய்த்துக் கொண்டு மெல்ல எழுந்து அமர்ந்தாள். கண்களை நன்றாக திறந்து சுற்றிலும் பார்த்தாலும், அது அவளது அறையே தான், தான் இன்னும் நந்தவனத்தில்தான் இருக்கிறோம் என்ற எண்ணம் வர நொந்துப் போனாள் ராதா. அவள் பக்கத்தில் தேவி இருந்தது நிம்மதியானது.

பாவம் தேவி நேற்று அவளை காண வரும்போதே உடல் நிலை சரியில்லை என பொய் கூறி படுத்திருந்தாள். முராரியின் செயலில் அதிர்ந்தவள் அவனிடமிருந்து விலகி இருளில் கோபத்தில் உடல் நடுங்க பயத்தில் நின்றிருந்தாள் முராரியோ

”ராதா” என முன்பை விட இன்னும் ஆசையாக அழைக்க அவளுக்குப் பக்கென்றது. தனிமை, இருள் கவிழ்ந்த இரவு நேரம், வெளியே மழை, தன்னிடம் காதலாக வரும் முராரியிடம் இருந்து எப்படி தப்புவது என நினைத்தாள், கண்கள் மூடி கண்ணனை பலமாக வேண்டிக் கொண்டு கண்களைத் திறந்தாள். கண்ணனின் அருளால் சட்டென கரெண்ட் வந்துவிட வெளிச்சத்தில் அவள் முதலில் கண்ட காட்சி முராரியின் மகிழ்ச்சியான முகமும் அவன் அவளை ஆசையாக அணைத்த விதமே, என்ன தோணிற்றோ அந்த நொடி பொறுமையாக எடுத்துச் சொல்லியிருக்கலாம், அது தவறு என புரிய வைத்திருக்கலாம், என் தந்தை என் மீது நம்பிக்கை வைத்துள்ளார் என சொல்லியிருக்கலாம், எனக்கு உன் மேல் காதல் இல்லை என்றிருக்கலாம், உன்னுடன் நட்பாக பழகுவதில் விருப்பமில்லை என சொல்லியிருக்கலாம், நீ எனக்குத் தேவையில்லை என சொல்லியிருக்கலாம் ஆனால் ராதா எதுவும் சொல்லவில்லை, அந்நேரத்தில் அவளுக்கு அவனை பார்த்தபிறகு தோன்றியது ஒன்றே ஒன்றுத்தான், வேறு எதுவும் தோணவில்லை அவன் தன்னிடம் முறையற்று எதுவும் செய்துவிடக் கூடாதென தடுப்பதற்கான வழியைத் தேர்ந்தெடுத்தாள், தைரியமாக வலது கையை தூக்கினாள் பலம்கொண்டு முராரியின் கன்னத்தில் விட்டாள் ஒரு அறை

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

பளார்....

அவசரமாக கண்கள் திறந்தாள் ராதா, முகம் வேர்த்திருக்க பக்கத்தில் தேவி உறங்குவதைக் கண்டு நிம்மதியடைந்தவள்

”நேத்து என்னவெல்லாம் ஆயிடுச்சி. எனக்கு எப்படி மனசு வந்துச்சி, நானா விரும்பி முராரிகிட்ட பழக நினைச்சேன், என் காரணமாதான் முராரிக்கு என் மேல ஆசை வந்துச்சி. ஆனா அவர் செஞ்சதும் தப்புதான், ஒரு முறை முத்தம் கொடுத்தது தப்பு, அதுக்கு அவர் தந்த விளக்கம் என்ன, தெரியாம கொடுத்தேன், கொடுத்தப்ப எனக்கு தப்புன்னு தோணலைன்னு சொன்னார், அப்ப நேத்து கொடுத்ததுக்கு என்ன விளக்கம் சொல்வார், இல்லை அவர் எல்லை மீறி நம்மகிட்ட நடந்துக்கிறார்.

என் வீட்டு மானம் மரியாதையை நான் குலைக்கவே மாட்டேன். காதல்ல கட்டிப்பிடிக்கனும், முத்தம் கொடுக்கனும்னு ஏதாவது வரையறை இருக்கா இல்லை புது சட்டம் இருக்கா, எப்படி அவருக்கு இப்படி தோணியிருக்கலாம் நட்பாவே பழக நினைக்காத பொண்ணுக்கிட்ட காதலா எப்படி பழகுவாராம், தப்பு பண்ணிட்டீங்க முராரி, நீங்க செஞ்ச தப்புக்கு நான் கொடுத்த தண்டனையே போதும், இதுக்கு மேல அவர் என்கிட்ட எப்படி நடந்துக்குவாருன்னு தெரியலையே, எப்படி நடந்துக்கிட்டாலும் சரி, நாம கொஞ்சம் விலகியிருந்தா நமக்கு நல்லது, நாம தேவிகூடவே இருக்கலாம்” என நினைத்து ஆழமான மூச்சு விட்டவள் மெல்ல எழுந்து குளிக்கச் சென்றாள்.

அரை மணி நேரம் கழித்து திரும்பி வந்தவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது, படுக்கையில் ஒரு கிப்ட் பாக்ஸ் இருக்கவே அதிர்ந்தாள், தேவி இன்னும் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு வியந்தாள் ராதா.

”தேவி தூங்கறா, கதவு தாப்பாள் போட்டிருக்கு, அப்ப இந்த பாக்ஸ் எப்படி வந்துச்சி” என அவள் யோசிக்கும் போதே பால்கனியின் திரை காற்றுக்கு பறப்பதைக் கண்டு அதிர்ந்தாள்

”நான் பால்கனி கதவை மூடிட்டுதானே படுத்தேன், இப்ப எப்படி திறந்திருக்கு” என அவசரமாக பால்கனிக்கு சென்று எட்டிப்பார்த்தாள். அங்கு யாரும் இல்லை ஆனாலும் குழம்பிய மனதுடன் கட்டிலுக்கு வந்து நின்றாள்.

அங்கிருந்த பாக்ஸை எடுத்துப் பார்த்தவளுக்கு பயமே வந்தது. இது முராரியுடையதா அவர்தான் வைத்தானா, திறக்கலாமா வேணாமா நேற்று அவரை அடித்த பின்பும் எப்படி எனக்கு பரிசு தர துணிந்தார். இதுல என்ன இருக்கும் வேண்டாம் நமக்கெதுக்கு” என நினைத்தவள் அந்த பாக்ஸை பத்திரமாக வேறு பக்கம் வைத்துவிட்டு கண்ணாடி முன் நின்று தன்னை அலங்காரம் செய்துக் கொண்டிருந்தாள்.

தேவியோ மெல்ல கண்விழித்து ராதாவைப் பார்த்துச் சிரித்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "காணாய் கண்ணே..." - காதல் & சரித்திரம் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

”ராதா” என அழைக்க அவளோ திரும்பி தேவியை பார்த்து

”எழுந்தாச்சா” என கேட்க

”உன்கிட்ட ஒண்ணு சொல்லனும்”

“சொல்லு”

“பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என  தேவி சொல்லவும் ராதாவிற்கு ஆச்சர்யமாகிப் போனது

About the Author

Sasirekha

Sasirekha

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - கலாபக் காதலா - 10 - சசிரேகாmadhumathi9 2019-03-15 06:09
wow nice epi sasi.but kadaisiyil govinth vanthu ippadi kuzhappam pannuvathai ethir paarkkaveillai :sad: govinth ninaippathu pola radhaavai muraariyidam sellaamal thadukka mudiyuma :Q: but radha nichayamaaga seiya maattaal endru thonuthu :Q: eanendraal aarambathileye govithai patri purinthu kondaval.so egarly waiting 4 next epi. :thnkx: (y) (y) :clap: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 10 - சசிரேகாsasi 2019-03-16 12:34
Quoting madhumathi9:
wow nice epi sasi.but kadaisiyil govinth vanthu ippadi kuzhappam pannuvathai ethir paarkkaveillai :sad: govinth ninaippathu pola radhaavai muraariyidam sellaamal thadukka mudiyuma :Q: but radha nichayamaaga seiya maattaal endru thonuthu :Q: eanendraal aarambathileye govithai patri purinthu kondaval.so egarly waiting 4 next epi. :thnkx: (y) (y) :clap: :GL:

ராதை மனசுல என்ன இருக்குன்னு ராதைக்குதான் தெரியும் நிஜமாவே அவளுக்கு முராரி மேல காதல் இருந்தா அந்த காதலே அவளுக்கு சரியான பாதையை காட்டட்டும் நன்றி மதுமதி உங்கள் கேள்விக்கான பதில்கள் அடுத்தடுத்து வரும் எபியில் உள்ளது நன்றி
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top