(Reading time: 11 - 21 minutes)

“அரசே , நானும் ஒட்டகத்தில் வரலாமா?” என்றுக் கேட்க எல்லோரும் வியந்துப் பார்த்தனர்.

ராஜபுத்திரப் பெண்கள் முகம் காட்டக் கூடாது என்பதோடு பொது வெளியில் தனியாக இயங்கும் வழக்கமும் கிடையாதே. இந்தப் பெண் சொல்வதற்கு என்ன சொல்லுவாரோ என்று எண்ணிப் பயந்தனர்.

சற்று யோசித்தவர், அங்கிருந்த வீரகளைப் பார்த்து தலை அசைத்தார். உடனே வேகமாக ஒரு ஒட்டகத்தின் கீழ் மூன்று பலகைகள் வைத்து விட்டு ஒதுங்கி நின்றனர்.

இப்போதும் அந்தப் பெண் தன் முகத்தை யாருக்கும் காண்பிக்கவில்லை. கண்கள் மட்டும் தெரியுமாறு இருந்தது. அதை விட அவள் இடுப்பிலும் ஒரு நீள வாள் இருந்தது. அதை அணிந்து கொண்டே அவள் ஒட்டகத்தில் ஏறியதைப் பார்த்தவர்களுக்கு அதிசயமாக இருந்தது.

இப்போது மீண்டும் தலையசைக்கவும் . ஒட்டகங்கள் நகர்ந்தன.. இவர்கள் சென்று சேருவதற்கு இரு நாழிகைகள் ஆனது.

உச்சி வேளையில் பயணம் மேற்கொள்ள கடினமாக இருந்தாலும், இது பனி முடிந்து கோடை தொடங்கும் முன் உள்ள பருவம் என்பதால், அத்தனை களைப்பு தெரியவில்லை.

இந்த ஓட்டக ஊர்வலம் நகருக்குள் நுழைந்த கணம், மக்கள் கூட்டம் நின்று இருந்தனர்.

முன் பகுதியில் அரச புத்திரர்கள் நின்று இருக்க, பின்னால் படை வீரர்கள் அணிவகுக்க, வாத்தியங்கள் முழங்க

“மகாராஜா ரானா பிரதாப் “ என்று கூறவும், “ஜெய் பவானி” என்று மக்கள் வாழ்த்துக் கூற ஆரம்பித்தனர்,

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

மகாராஜா மக்களைப் பார்த்து கை கூப்பி வணங்கி விட்டு அவரும்

“ஜெய் பவானி” என்று கூற, இப்போது ஜெய் பவானி என்ற சொல் எங்கும் எதிரொலித்தது.

பின் வீரர்கள் மக்களைக் கலைந்து போகச் சொல்ல, அவர்கள் சென்றதும், அந்த ராஜ்யத்தின் அரசர்,

“மகாரானாவிற்கு என் வணக்கங்கள்” என்றார். ரானா இறங்கி அவரின் அருகில் சென்று அவரை அணைத்துக் கொண்டார்.

“பிகானர் வம்சத்து தலைவரே. தங்கள் உதவிக்கு நான் தான் தலை வணங்க வேண்டும்”

“இல்லை அரசே. ராஜ புத்திரர்களின் தன் மானம் காக்கத் தங்களைப் போலே ஒருவரைத் தலைவராகப் பெற்ற நாங்கள் தான் வணங்க வேண்டும்”

“ஹ்ம்ம்..” என்று சிரித்தார் ராணா

“மகாராஜ் , தாங்களும், தங்கள் படைகளும் ஓய்வு எடுத்துக் கொள்ள அரண்மனையில் வசதிகள் தயாராய் இருக்கின்றன.”

“எனக்கு ஓய்வு என் சேத்தக் மீதுதான். அது இங்கே இல்லை என்பதால், உங்களோடு வருகிறேன். “ என்றவர், தன்னுடைய படைத் தளபதியிடம் கண்ணைக் காண்பிக்கவும், அவர்கள் இறங்கி பிகானர் படைத் தளபதியோடு சென்றனர்.

“பெண்கள்” என்றுக் கூறும்போதே, அவர்களை அழைத்துச் செல்ல பணிப் பெண் வந்து நின்றாள்.

அவர்கள் வண்டிகளோடு பெண்கள் தங்கும் அரண்மனைக்குச் செல்ல, அப்போது தான் ஒட்டகத்தில் இருந்து இறங்கிய பெண்ணைப் பார்த்த பிகானர் ரானாவிடம் கேட்டார்.

“இவர்கள். ..?”

“என் உடன் பிறந்தோனின் பெண். என்னோடு தான் வருவேன் என்று அடம். பெயர் கிரண் தேவி“ என்று சிரித்தபடியேக் கூறினார்.

“ஆஹா. தங்கள் சகோதரர் சக்தி சின்ஹாவின் புதல்வி அல்லவா.? நிறையக் கேள்விப்பட்டு இருக்கிறேன்”

சற்று வெட்கத்தோடு “தங்களுக்கு என் வணக்கங்கள்” என்று கைகூப்பிக் கூறவும்,,

“என் ஆசிகள் “ என்று வாழ்த்தினார்.

அப்போது “தந்தையே “ என்று அழைத்தபடி வந்தவன் , மஹாராணாவைப் பார்த்தவுடன்,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சாகம்பரியின் "யானும் நீயும் எவ்வழி அறிதும் " - காதல் கலந்த Sci-fi தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“மகாரானாவிற்கு வணக்கங்கள்” என்று தலை வணங்கினான்.

பிகானர் அறிமுகப் படுத்த முயலும்போதே

“அஹா.. பிகானரின் இளவரசன் ப்ரிவிதிராஜ் அல்லவா ? ஆசிகள்” என்று கூறவும். மற்ற இருவரும் திகைத்தனர்.

இதுவரை ப்ரித்விராஜ் மகாரானவை நேரில் பார்த்தது இல்லை. ஆனால் ரானா சரியாகச் சொல்லவும் எப்படி என்பது போல் வியந்து பார்த்தார்கள்.

“நாட்டின் தற்போதைய தேவை உன்னைப் போன்ற வீரர்கள் தான். அதனால் வீரர்கள் வரலாற்றைத் தெரிந்து கொவ்ளது தான் என் வேலை “ என்று சிரிக்கவும், பூமியே அதிர்ந்தது போல் இருந்தது.

தொடரும்!

Episode # 08

Episode # 10

Go to Kaanaai kanne story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.