Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (8 Votes)
தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 18 - சசிரேகா - 5.0 out of 5 based on 8 votes
Pin It

தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 18 - சசிரேகா

Kaanum idamellam neeye

ஸ்ரீரங்கம்

மாலையானது.

அவனிசுந்தரியின் பேச்சால் அதிர்ச்சியில் பேச்சின்றி அமைதியாக பயணத்தைத் தொடர்ந்தான் நாகேந்திரன் ஒரு முறை கூட அவளை திரும்பிப் பார்க்கும் எண்ணம் கூட எழாமல் அமைதியாக இருந்தான். ஆனால் அவனியோ அவனையே பார்த்துக் கொண்டிருக்க ஸ்ரீரங்கமும் வந்தது.

”ஐயா ஊர் வந்துடுச்சிங்கய்யா” என சொல்லவும் நாகேந்திரனும் நிம்மதியாகி

”பெருமாள் கோயில்ல நிப்பாட்டு வாத்தியாரை இறக்கிடலாம்” என சொல்ல வண்டியும் கோயிலை நோக்கிச் சென்றது.

நாகேந்திரனோ திரும்பிப் பார்க்க அவனியோ ஆர்வமாக அவனைப் பார்த்து சிரிக்க அவனோ அவளை முறைத்துவிட்டு சிதம்பரத்தை பார்த்தான். அவரோ நிம்மதியாக உறங்குவதைக் கண்டவன்

”வாத்தியாரே வாத்தியாரே எழுங்க கோயில் வரப்போகுது வாத்தியாரே” என கத்திவிட்டு அவரது தோளை உலுக்க அவரும் உறக்கம் கலைந்து கண்கள் திறந்து சுற்றிலும் பார்த்துவிட்டு

”கோயில் வந்துடுச்சா”

“வரப்போகுது உங்களை நான் அங்க இறக்கிவிடறேன், நீங்க திரும்பி எப்படியாவது ஊர் போய் சேருங்க நான் வரமாட்டேன்” என சொல்ல அவரோ

”உன் உதவி எனக்குத் தேவையில்லை, எனக்கு போறவழி தெரியும்” என சொல்ல

”இந்த பேச்சுக்கொன்னும் குறைச்சல் இல்லை” என நாகேந்திரன் சொல்லவும் அவரோ

”அவனி கோயில் வரப்போகுது இப்பவாவது சொல்லு நீ என்ன வேண்டிக்கிட்ட”

“அது வந்து அப்பா ஒரு வருஷம் முன்னாடி நான் ஒரு விசயத்தை நினைச்சி அது கிடைக்கனும்னு வேண்டிக்கிட்டேன், அது இப்ப கிடைச்சிடுச்சி அதான் வேண்டுதலை முடிக்க வந்தேன்” என சொல்லவும் நாகேந்திரனோ அதிர்ந்தான்

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

”ஆஹா இவள் எதைச் சொல்றா என்னை பத்தி சொல்றாளா இல்லை வேறயா” என மனதில் நினைத்துக் கொள்ள சிதம்பரமோ

“அப்படி என்னம்மா வேண்டிக்கிட்ட”

“என் கல்யாண வாழ்க்கையை பத்திதான்பா” என சொல்ல

”உன் கல்யாணத்துக்கு என்னம்மா ராஜகுமாரனையே உனக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன் சரியா” என சொல்ல அவளோ மெல்ல தலையாட்டினாள்.

”ராஜகுமாரனா பார்க்கலாம் வாத்தியாரே, நீ இருக்கற இருப்புக்கு கதிரோவியன் கிடைக்கறதே பெரிய விசயம் இதுல ராஜகுமாரன் வேறயா, ஆமா எதுக்கு நீ வேற ஆளை தேடற கைவசம் ஆள் இருக்குல்ல கதிர்தான் இப்ப வாழை மண்டியில வேலை பார்க்கறானே அப்புறம் என்ன அவனுக்கே அவனியை கல்யாணம் பண்ணி வைச்சிடு” என நாகேந்திரன் மிகவும் இயல்பாக சொல்ல அவனியோ அதைக்கேட்டு அதிர்ந்தாள். சிதம்பரமோ

”எனக்குத் தெரியும் நீ எனக்கு உபதேசம் சொல்லத் தேவையில்லை முதல்ல உன் வாழ்க்கையை நீ பாரு, மத்தவங்களை அடக்கி ஆளறதை நிறுத்து”

“ஆரம்பிச்சிட்டியாப்பா யப்பா வாத்தியாரே கோயில் வந்துடுச்சி நீ இறங்கு நல்லது சொன்னா உனக்கு பிடிக்காதே” என சொல்லவும் வண்டியும் கோயில் முன் நின்றது.

அமைதியாக இருவரும் இறங்கவும் நாகேந்திரனோ கோயில் கோபுரத்தைக் கண்டதும் மெல்ல வண்டியை விட்டு இறங்கி கோபுரத்தை நோக்கி கைகூப்பி கோவிந்தா கோவிந்தா என பக்தியாக சொல்லிவிட்டு கண்கள் திறந்தான்.

சிதம்பரமோ அவனியை அழைத்துக் கொண்டு கோயிலுக்குச் செல்ல அவளோ திரும்பித் திரும்பி நாகேந்திரனை பார்த்த வண்ணமே சோகமாக கோயிலுக்குள் செல்வதைக் கண்டு நொந்து போனான்.

மீண்டும் வண்டியில் ஏறப்போனவனிடம் அந்த ஊரைச் சார்ந்தவன் ஒருவன் அவசரமாக ஓடி வந்து முன்நின்றான்

”ஐயா” என அழைக்க நாகேந்திரனும் திரும்பி வந்தவனைப் பார்த்தான்

”அட மருது நீயா நானே பெரியப்பாவை தேடித்தான் வந்தேன். நீயேன் இங்க வந்த”

”பெரிய ஐயா கோயில்லதான் இருக்காரு உள்ள வாங்க” என சொல்ல அவனும் அமைதியாக மருதுவுடன் கோயிலுக்குள் செல்லலானான்.

கோயிலுக்குள் ஓரிடத்தில் இருந்த மண்டபத்தில் அவனது பெரியப்பா சொக்கலிங்கம் இருக்கவே அவரிடம் பணிவாக நடந்து வந்து அவரின் எதிரே நின்று கைகூப்பி வணக்கம் சொல்லி

”எப்படியிருக்கீங்க பெரியப்பா” என கேட்க அவரும்

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பத்மினியின் " காதோடுதான் நான் பாடுவேன்..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

”நல்லாயிருக்கேன் நீ எப்படியிருக்க நாகேந்திரா”

“எனக்கென்ன பெரியப்பா, நல்லாயிருக்கேன்” என சொல்ல

”பின்ன எப்படி நல்லாயில்லாம இருக்க மாட்ட, அதான் கைவசம் சரியான ஆளுங்களை வைச்சிருக்கியே” என சொல்லவும் அவனோ குழப்பத்துடன்

”எனக்கு புரியலை பெரியப்பா யாரைப் பத்திப் பேசறீங்க”

“எல்லாம் கேள்விப்பட்டேன் அதான் உன்கிட்ட அதைப்பத்தி பேசலாம்னு கூப்பிட்டேன்”

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6  7  8  9 
 •  Next 
 •  End 

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

 • AndrilAndril
 • I MyselfI Myself
 • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
 • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
 • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
 • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
 • Un nesam en suvasamUn nesam en suvasam
 • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 18 - சசிரேகாsasi 2019-03-17 11:06
கமெண்ட் சூப்பர் நன்றி ஆதர்வ் சட்னி பண்ண வே்ணடிய அவசியம் இல்லை ஒவ்வொரு ஜென்மத்துக்கும் ஒவ்வொரு வில்லன்ஸ் இருக்காங்க பழையவங்களே வரமாட்டாங்க அப்புறம் ஈஸ்க்கு ஸ்பூன் பீட் பண்ணதான் மீனு இருக்காளே நான் அவள்ட்டயே சொல்லிடறேன் அவளே பார்த்துக்கட்டும் ஆனந்தியை பத்தின கவலையை விடுங்க அவளுக்கும் ஒரு வழி பார்த்தாச்சி நிரஞ்சனா அவனைப்பத்தி நான் இப்போதைக்கு யோசிக்கலை இப்ப என் மைன்ட்ல நாகேந்திரன் அவனிதான் இருக்காங்க கதையை இன்னும் விருவிருப்பா எப்படி கொண்டு போறதுன்னு யோசனையா இருக்கு எப்படியோ கதைக்கு தகுந்த கமெண்ட் தந்து ஊக்கமளித்தமைக்கு மிகவும் நன்றி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 18 - சசிரேகாsasi 2019-03-17 11:03
Quoting Deepak:
Super episode sis. The way ur narrating is good :hatsoff: . The story is going is interesting now days :clap: . Eagerly waiting for next update (y)

நன்றி தீபக் தங்கள் கமெண்ட் படித்து மகிழ்ச்சியாக உள்ளது எப்படியோ கதை விருவிருப்பாக போகிறது என்றீர்களே மிகவும் நன்றிப்பா :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 18 - சசிரேகாதீபக் 2019-03-16 03:48
Super episode sis. The way ur narrating is good :hatsoff: . The story is going is interesting now days :clap: . Eagerly waiting for next update (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 18 - சசிரேகாAdharvJo 2019-03-15 22:09
Achacho indhu ena aniyayama irukku :sad: Indha villain gang thaan Avani oda kadhalukk end card kuduthavangalo :Q: so mean yaar :angry: Indha villains ellam indha life layaum role irundha chutney panidunga 3:) :yes: Mun janmam part was as always superb :hatsoff:

Mr Scene sinappa oru tblspn ghee podhumappa :D Irundhalum ivarukku too much sasi ma'am ivara spl la treat panadhu oru prob amam steam Andha pulla azhuthukittu irukku ivaru ena sapadu rama mathiri :eek: rasichi rusichi sapiduraru...ningale sollunga anandhi kudhuthadhum invite thane :grin: sariyana baby-ya irukaru :yes: Ivarukku meen's mele irukkum interest thana ellam theriyaradhu rombha kashtam….ninga thaan spoon feed pani solanum.. :P
very interesting flow ma'am :clap: :clap: Look forward to see what happens next. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 18 - சசிரேகாsasi 2019-03-15 10:48
Quoting madhumathi9:
:clap: nice epi. wow poga poga romba interesting aaga irukku.adutha epiyai eppothu padippom endru irukku. (y) :thnkx: 4 this epi. :GL: sasi :clap: :-)

ஹாய் மதுமதி நிஜமாவே என்னுடைய கதை விருவிருப்பா இருக்கா ஏதேனும் குறை இருந்தா சொல்லுங்க மாத்தி எழுதறேன் நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 18 - சசிரேகாmadhumathi9 2019-03-14 05:58
:clap: nice epi. wow poga poga romba interesting aaga irukku.adutha epiyai eppothu padippom endru irukku. (y) :thnkx: 4 this epi. :GL: sasi :clap: :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 18 - சசிரேகாViji. P 2019-03-13 21:34
Super episode I am waiting for next episode. :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 18 - சசிரேகாsasi 2019-03-15 10:46
நன்றி விஜி :dance:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 18 - சசிரேகாsasi 2019-03-15 10:46
Quoting Viji. P:
Super episode I am waiting for next episode. :clap:

நன்றி விஜி :dance:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top