Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (8 Votes)
தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 18 - சசிரேகா - 5.0 out of 5 based on 8 votes

”நான் அவளை பார்த்துக்கிறேன்ப்பா, நான் அவள் அப்பாதான் அவளை விடு பாவம் அவள் பயந்திருக்கா நான் பார்த்துக்கறேன்” என சொல்லி அவள் புறம் கை நீட்ட அப்போதுதான் அவனுக்கு புரிந்தது அவனியை தான் அணைத்துக் கொண்டிருப்பது, சுயநிலை வந்தவன் சட்டென அவள் மேல் இருந்து தன் கையை விலக்கி அவளை சிதம்பரத்திடம் தள்ளி விட்டான். அதில் கண்கள் கலங்கினாள் அவனி

அவன் தள்ளிவிடவும் அவனியை பிடித்துக் கொண்ட சிதம்பரமோ

”இப்ப ஏன் அவளை தள்ளிவிடற பாவம் சின்ன பொண்ணு”

”எதுவும் பேசாதீங்க எல்லா பிரச்சனையும் உங்களால வந்தது” என கத்தினான் நாகேந்திரன்.

”இப்ப ஏன் கத்தற, நான் என்ன செஞ்சேன்”

“உங்களை யாரு உங்க பொண்ணை ஊரே பார்க்கற மாதிரி நாட்டியம் ஆட வைச்சது. இப்ப பாருங்க என்னாச்சின்னு இது தேவையா சொல்லுங்க”

“இப்படி ஆகும்னு எனக்கென்ன தெரியும், அவனிக்கு அடுத்து சில பெண்கள் கூட ஆடினாங்களே”

“இருக்கலாம் ஆனா நம்ம ஊர்லயே அவனியை விட அழகான பொண்ணு யார் இருக்கா சொல்லுங்க” என கத்தவும் அவனியின் முகமோ கவலையில் இருந்து புத்துணர்ச்சிக்கு உடனே மாறியது. அவள் சிரிப்புடன் குதூகலமாக அவனைப் பார்த்தாள். அவள் ஏன் அப்படி பார்க்கறாள் என புரியாத நாகேந்திரனோ

”என்ன பார்வை கண்ணை நோண்டிடுவேன், வீட்டை விட்டு வெளியே ஒரு அடி எடுத்து வைச்ச உன்னை சிவதாணு ஆளுங்க தூக்கிட்டுப் போய்டுவாங்க புரியுதா” என சொல்லவும் அவளோ

”இது அநியாயம் அப்ப நான் எங்கயும் போக கூடாதா”

“கூடாது”

”கோயிலுக்கு கூடவா”

“ஆமாம் போக கூடாது”

“கடைத்தெருவுக்கு”

“கூடாது”

“கோலம் போட” என அவள் சொல்ல அவளையே முறைத்துப் பார்த்தான். அதைப் பார்த்த சிதம்பரமோ

”அவனி அமைதியா இரு உன் நல்லதுக்குத்தானே அவன் அப்படி சொல்றான்”

“ஆனா அப்பா எத்தனை நாளைக்கு இப்படியே ஒளிஞ்சி இருக்க முடியும், நான் வெளிய வரலைன்னா என்ன அந்தாளுங்க வீட்டுக்குள்ள வந்துட்டா” என கேட்க அதற்கு நாகேந்திரன் தைரியமாக

”நான் இருக்கறப்ப எவன் வருவான்”

“நீங்க எல்லா நேரமுமா எனக்கு காவலா இருப்பீங்க” என அவள் கேட்கவே அவன் சிதம்பரத்தை கேள்வி முகத்தோடு பார்த்தான்.

”அவள் சொல்றதும் சரிதானே, இப்ப என்ன செய்றது” என சிதம்பரம் சொல்ல நாகேந்திரனோ

“பேசாம அவளுக்கு கதிரோட கல்யாணம் பண்ணி வைச்சிடுங்க, கல்யாணம் ஆயிட்டா அவளை யாரும் தொடமாட்டாங்க” என சொல்ல

”நீ சொல்றதும் சரிதான் இப்போதைக்கு அவனிதான் எனக்கு முக்கியம், சீக்கிரமா அவளுக்கு நான் கதிரோட கல்யாணம் செஞ்சி வைச்சிடறேன் அதான் நல்லது” என சொல்ல அவனிக்கு நெஞ்சே அடைத்துவிட்டது.

பாறாங்கல்லான மனதுடன் கண்களில் ஒளியில்லாமல் நாகேந்திரனை ஒரு கேள்வியுடன் பார்த்து வைத்தாள். அவளின் பார்வையில் தெரிந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தலைகுனிந்து அமர்ந்தான் நாகேந்திரன்.

”அத்தான் அத்தான் எழுங்கத்தான் டைம் ஆயிடுச்சி” என மீனாட்சி படுத்து உறங்கிக் கொண்டிருந்த ஈஸ்வரனை தட்டி எழுப்பினாள்.

மெல்ல கண்விழித்தவன் எதிரே இருந்த மீனாவைப் பார்த்து

”என்ன விசயம்”

“சாப்பாடு ரெடி அத்தான், வாங்க சாப்பிடலாம்” என்றாள் சிரிப்புடன்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சந்யோகிதாவின் "வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

அவளது சிரிப்பே அவனுக்கு உற்சாகத்தைத் தர அமைதியாக எழுந்து அமர்ந்தான். ஆனால் அவன் கனவில் கண்ட நிகழ்வுகளால் அவனது முகம் வாடியிருந்தது. அதைப்பார்த்த மீனாவோ

”என்னாச்சி அத்தான், உங்க முகம் ஏன் இப்படி வாடியிருக்கு உடம்பு கிடம்பு சரியில்லையா” என அக்கறையாக கேட்க அவனோ

”கெட்ட கனவு மீனு அதான்”

“ஓ இந்த கனவு வேறயா சரி, அதை விடுங்கத்தான் வாங்க சாப்பிடலாம்” என சொல்லிவிட்டு அவள் சென்றுவிட ஈஸ்வரனும் சில நொடிகள் கனவில் வந்ததை ரீவைன்ட் செய்து  நினைத்துப்  பார்த்தான்.

”அவனி நாகேந்திரனை லவ் பண்றாளே, எப்படி அவளால கதிரை கல்யாணம் செஞ்சிக்க முடியும் இந்த நாகேந்திரன் ஏன் அவனியோட மனசை புரிஞ்சிக்க மாட்டேங்கறான். அவளுக்கு அவனை பிடிச்சிருக்கு, அதே போல அவனும் அவளை விரும்பினா என்னவாம்” என தன்னையே கேள்வி கேட்டான்.

Add comment

Comments  
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 18 - சசிரேகாsasi 2019-03-17 11:06
கமெண்ட் சூப்பர் நன்றி ஆதர்வ் சட்னி பண்ண வே்ணடிய அவசியம் இல்லை ஒவ்வொரு ஜென்மத்துக்கும் ஒவ்வொரு வில்லன்ஸ் இருக்காங்க பழையவங்களே வரமாட்டாங்க அப்புறம் ஈஸ்க்கு ஸ்பூன் பீட் பண்ணதான் மீனு இருக்காளே நான் அவள்ட்டயே சொல்லிடறேன் அவளே பார்த்துக்கட்டும் ஆனந்தியை பத்தின கவலையை விடுங்க அவளுக்கும் ஒரு வழி பார்த்தாச்சி நிரஞ்சனா அவனைப்பத்தி நான் இப்போதைக்கு யோசிக்கலை இப்ப என் மைன்ட்ல நாகேந்திரன் அவனிதான் இருக்காங்க கதையை இன்னும் விருவிருப்பா எப்படி கொண்டு போறதுன்னு யோசனையா இருக்கு எப்படியோ கதைக்கு தகுந்த கமெண்ட் தந்து ஊக்கமளித்தமைக்கு மிகவும் நன்றி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 18 - சசிரேகாsasi 2019-03-17 11:03
Quoting Deepak:
Super episode sis. The way ur narrating is good :hatsoff: . The story is going is interesting now days :clap: . Eagerly waiting for next update (y)

நன்றி தீபக் தங்கள் கமெண்ட் படித்து மகிழ்ச்சியாக உள்ளது எப்படியோ கதை விருவிருப்பாக போகிறது என்றீர்களே மிகவும் நன்றிப்பா :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 18 - சசிரேகாதீபக் 2019-03-16 03:48
Super episode sis. The way ur narrating is good :hatsoff: . The story is going is interesting now days :clap: . Eagerly waiting for next update (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 18 - சசிரேகாAdharvJo 2019-03-15 22:09
Achacho indhu ena aniyayama irukku :sad: Indha villain gang thaan Avani oda kadhalukk end card kuduthavangalo :Q: so mean yaar :angry: Indha villains ellam indha life layaum role irundha chutney panidunga 3:) :yes: Mun janmam part was as always superb :hatsoff:

Mr Scene sinappa oru tblspn ghee podhumappa :D Irundhalum ivarukku too much sasi ma'am ivara spl la treat panadhu oru prob amam steam Andha pulla azhuthukittu irukku ivaru ena sapadu rama mathiri :eek: rasichi rusichi sapiduraru...ningale sollunga anandhi kudhuthadhum invite thane :grin: sariyana baby-ya irukaru :yes: Ivarukku meen's mele irukkum interest thana ellam theriyaradhu rombha kashtam….ninga thaan spoon feed pani solanum.. :P
very interesting flow ma'am :clap: :clap: Look forward to see what happens next. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 18 - சசிரேகாsasi 2019-03-15 10:48
Quoting madhumathi9:
:clap: nice epi. wow poga poga romba interesting aaga irukku.adutha epiyai eppothu padippom endru irukku. (y) :thnkx: 4 this epi. :GL: sasi :clap: :-)

ஹாய் மதுமதி நிஜமாவே என்னுடைய கதை விருவிருப்பா இருக்கா ஏதேனும் குறை இருந்தா சொல்லுங்க மாத்தி எழுதறேன் நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 18 - சசிரேகாmadhumathi9 2019-03-14 05:58
:clap: nice epi. wow poga poga romba interesting aaga irukku.adutha epiyai eppothu padippom endru irukku. (y) :thnkx: 4 this epi. :GL: sasi :clap: :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 18 - சசிரேகாViji. P 2019-03-13 21:34
Super episode I am waiting for next episode. :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 18 - சசிரேகாsasi 2019-03-15 10:46
நன்றி விஜி :dance:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 18 - சசிரேகாsasi 2019-03-15 10:46
Quoting Viji. P:
Super episode I am waiting for next episode. :clap:

நன்றி விஜி :dance:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top