Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (8 Votes)
தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 18 - சசிரேகா - 5.0 out of 5 based on 8 votes

”சாப்பிடுங்கத்தான்” என்றாள்.

அவள் சொன்ன பிறகே அவன் சாம்பாரில் சாதத்தை கலந்து ஒரு வாய் சாப்பிட்டான். தேவாமிர்தமாக தெரிந்தது அவனுக்கு

எத்தனையோ விதவிதமான உணவுகளை சாப்பிட்டவனுக்கு இன்று அவள் கையால் பரிமாறின சாதாரண சாம்பார் சாதம் மிகவும் பிடித்துவிட்டது

”ரொம்ப டேஸ்ட்டா இருக்கு மீனு”

“அம்மா சமைச்சது”

“இருந்தாலும் நீதானே பரிமாறின நல்லாயிருக்கு” என சொல்லும் போதே அவனுக்கு ஃபோன் வரவும் எடுத்துப் பார்த்தான் அது நிரஞ்சன் என இருக்கவே ஆன் செய்தான்

”சொல்லுடா”

“அண்ணா எப்ப வருவீங்க”

“ஏன் என்னாச்சி“

“இங்க ஆனந்தி அழுவுறா, எவ்ளோ ஆறுதல் சொன்னாலும் கேட்க மாட்டேங்கறா” என சொல்ல

”இருடா இப்பதான் சாம்பார் சாதம் சாப்பிடறேன் வந்துடுவேன் நீ அதுவரைக்கும் அட்ஜஸ்ட் பண்ணிட்டே இரு” என அவன் சொல்லும் போதே மீனாவோ

”அத்தான் அப்பளம் வைக்கவா” என கேட்க ஈஸ்வரனோ சரியென தலையாட்ட அவளும் வைத்தாள். அவள் பேசியது ஃபோன் மூலம் நிரஞ்சனுக்கே கேட்டது

”என்னது அப்பளமா அண்ணா சீக்கிரமா வாண்ணா” என கத்த

“வரேன் வரேன்” என சொல்லி ஃபோனை வைத்துவிட்டு சாப்பிடலானான்.

2 வகை கூட்டு, 2 வகை பொறியல், சாம்பார், வத்தக்குழம்பு, ரசம், மோர்குழம்பு, ஊறுகாய், ஜவ்வரசி பாயசம், அப்பளம் என ஜோராய் விருந்து இருந்தது.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

முழுவதும் அவளே அவனுக்கு பரிமாறினாள். அவனும் என்றும் இல்லாமல் இன்று அதிகமாகவே சாப்பிட்டு முடித்து எழுந்தான். அவன் எழுந்து சென்றதும் மீனாவும் கொல்லைப்புறம் அவனைத் தேடி வந்தாள் கைகழுவிக் கொண்டிருந்தவனிடம் நின்றாள் மீனா

”சாப்பாடு எப்படியிருந்திச்சி அத்தான்”

“சூப்பர் மீனா சான்சே இல்ல இப்படியொரு சாப்பாட்டை, நான் என் லைப்ல சாப்பிடலை”

“ஆனா அத்தான் இதைதானே மாமா வீட்ல இருந்தப்பவும் சாப்பிட்டீங்க” என சொல்ல அவனோ அவள் முகத்தைப் பார்த்துவிட்டு

”உண்மைதான் ஆனா அந்த வீட்ல என் மேல ஒரு வித எதிர்பார்ப்போடதானே சாப்பாடு போட்டாங்க ஆனா, இங்க என்மேல எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லையே, உன் அம்மா கூட என்னை ஒரு விருந்தாளியா பார்த்து சமைக்கலை, குடும்பத்தில ஒருத்தனா நினைச்சி சமைச்சாங்க அதான் அந்த சமையல்ல ருசி அதிகமா இருந்திச்சி, முக்கியமா உன் கையால நீயே எனக்கு பரிமாறின, அதனாலயே இன்னிக்கு சாப்பாடு அருமையா இருந்துச்சி ஐ லவ் இட், அம்மா கையால சாப்பிட்ட மாதிரி ஒரு உணர்வு வந்துடுச்சி மீனா” என சொல்லவும் அவளும் சந்தோஷமாக சிரித்தாள்.

ஈரக்கையை துடைக்க துண்டை தேட அது அங்கு இல்லாமல் போகவே மீனாவைப் பார்த்தான்

”இருங்கத்தான் நான் போய் துண்டு கொண்டு வரேன்” என சொல்லி திரும்பியவளின் தாவணியின் முந்தானையை பிடித்து இழுத்தவன் அதில் தன் கை ஈரத்தை துடைத்துவிட்டு

”நான் இப்ப நிரஞ்சன் கிட்ட போகனும்”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

குருராஜனின் "எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“என்னாச்சி அத்தான் ஏதாவது பிரச்சனையா”

“இல்லை ஆனந்தி ஃபோன் பண்ணியிருந்தா சாப்பிட கூப்பிட்டா ஆனா, நான் அவள்ட்ட உன் மேல எனக்கு விருப்பம் இல்லை, நான் உன்னை கல்யாணம் செஞ்சிக்க மாட்டேன்னு சொல்லிட்டேன், அதுல அவள் ரொம்ப அப்செட் ஆயிட்டா அவளை நிரஞ்சன் சமாதானம் செய்றானாம் ஆனா, அவனால முடியலையாம், ரொம்ப மனசு உடைஞ்சி போயிருக்காளாம், அதான் நான் போய் சமாதானம் செய்யலாம்னு இருக்கேன்” என சொல்ல அவளோ

”வேணாம் அத்தான் இப்ப நீங்க அக்காவை தேடிப் போய் சமாதானம் செஞ்சா, அக்கா மனசுல இன்னும் நீங்க ஆழமா பதிஞ்சிடுவீங்க, அவங்களுக்கு கொஞ்சம் யோசிக்க டைம் கொடுங்க, ஃப்ரீயா விடுங்க நீங்க உங்க மனசுல இருக்கறத சொல்லிட்டீங்கள்ல, இனி அக்காவே யோசிக்கட்டும் அக்காவுக்கு தெரியும், இந்த கல்யாண ஏற்பாடு மாமா செஞ்சதுதான் நீங்களோ உங்கப்பாவோ கிடையாதுன்னு, இன்னிக்கு ஒரு நாள் அக்கா அப்படி சோகமா இருந்தாலும் நாளைக்கு சரியாயிடுவா, ஒருவேளை நாளைக்கும் அவள் சரியாகலைன்னா அப்ப நீங்க பேசி புரியவைங்க ஆனா, அக்காகிட்ட பேசறதை விட மாமாகிட்ட பேசிப்பாருங்க, மாமா சொன்னா அக்கா கேட்பாங்க” என அவள் சொல்லவும் ஈஸ்வரனும்

”நீ சொல்றதும் சரிதான் மீனு, சரி நான் இப்ப ஆனந்தி கிட்ட போகலை நிரஞ்சன்கிட்ட போறேன் பிசினஸ் பத்தின வேலையிருக்கு” என சொல்ல அவளும்

”சரிங்கத்தான் போய் வாங்க” என்றாள், அதைக்கேட்டு அவனோ அங்கிருந்துச் செல்ல மனம் இல்லாமல் அவளையே சில நொடிகள் பார்த்துவிட்டு சிரித்தபடியே அவளிடமும் மேகலாவிடமும் விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பி நிரஞ்சனை தேடி குமரவேல் வீட்டிற்குச் சென்றான் ஈஸ்வரன்.  

Episode # 17

Episode # 19

தொடரும்...

Go to Kaanum idamellam neeye story main page

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

Add comment

Comments  
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 18 - சசிரேகாsasi 2019-03-17 11:06
கமெண்ட் சூப்பர் நன்றி ஆதர்வ் சட்னி பண்ண வே்ணடிய அவசியம் இல்லை ஒவ்வொரு ஜென்மத்துக்கும் ஒவ்வொரு வில்லன்ஸ் இருக்காங்க பழையவங்களே வரமாட்டாங்க அப்புறம் ஈஸ்க்கு ஸ்பூன் பீட் பண்ணதான் மீனு இருக்காளே நான் அவள்ட்டயே சொல்லிடறேன் அவளே பார்த்துக்கட்டும் ஆனந்தியை பத்தின கவலையை விடுங்க அவளுக்கும் ஒரு வழி பார்த்தாச்சி நிரஞ்சனா அவனைப்பத்தி நான் இப்போதைக்கு யோசிக்கலை இப்ப என் மைன்ட்ல நாகேந்திரன் அவனிதான் இருக்காங்க கதையை இன்னும் விருவிருப்பா எப்படி கொண்டு போறதுன்னு யோசனையா இருக்கு எப்படியோ கதைக்கு தகுந்த கமெண்ட் தந்து ஊக்கமளித்தமைக்கு மிகவும் நன்றி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 18 - சசிரேகாsasi 2019-03-17 11:03
Quoting Deepak:
Super episode sis. The way ur narrating is good :hatsoff: . The story is going is interesting now days :clap: . Eagerly waiting for next update (y)

நன்றி தீபக் தங்கள் கமெண்ட் படித்து மகிழ்ச்சியாக உள்ளது எப்படியோ கதை விருவிருப்பாக போகிறது என்றீர்களே மிகவும் நன்றிப்பா :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 18 - சசிரேகாதீபக் 2019-03-16 03:48
Super episode sis. The way ur narrating is good :hatsoff: . The story is going is interesting now days :clap: . Eagerly waiting for next update (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 18 - சசிரேகாAdharvJo 2019-03-15 22:09
Achacho indhu ena aniyayama irukku :sad: Indha villain gang thaan Avani oda kadhalukk end card kuduthavangalo :Q: so mean yaar :angry: Indha villains ellam indha life layaum role irundha chutney panidunga 3:) :yes: Mun janmam part was as always superb :hatsoff:

Mr Scene sinappa oru tblspn ghee podhumappa :D Irundhalum ivarukku too much sasi ma'am ivara spl la treat panadhu oru prob amam steam Andha pulla azhuthukittu irukku ivaru ena sapadu rama mathiri :eek: rasichi rusichi sapiduraru...ningale sollunga anandhi kudhuthadhum invite thane :grin: sariyana baby-ya irukaru :yes: Ivarukku meen's mele irukkum interest thana ellam theriyaradhu rombha kashtam….ninga thaan spoon feed pani solanum.. :P
very interesting flow ma'am :clap: :clap: Look forward to see what happens next. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 18 - சசிரேகாsasi 2019-03-15 10:48
Quoting madhumathi9:
:clap: nice epi. wow poga poga romba interesting aaga irukku.adutha epiyai eppothu padippom endru irukku. (y) :thnkx: 4 this epi. :GL: sasi :clap: :-)

ஹாய் மதுமதி நிஜமாவே என்னுடைய கதை விருவிருப்பா இருக்கா ஏதேனும் குறை இருந்தா சொல்லுங்க மாத்தி எழுதறேன் நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 18 - சசிரேகாmadhumathi9 2019-03-14 05:58
:clap: nice epi. wow poga poga romba interesting aaga irukku.adutha epiyai eppothu padippom endru irukku. (y) :thnkx: 4 this epi. :GL: sasi :clap: :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 18 - சசிரேகாViji. P 2019-03-13 21:34
Super episode I am waiting for next episode. :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 18 - சசிரேகாsasi 2019-03-15 10:46
நன்றி விஜி :dance:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 18 - சசிரேகாsasi 2019-03-15 10:46
Quoting Viji. P:
Super episode I am waiting for next episode. :clap:

நன்றி விஜி :dance:
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


sasi's Avatar
sasi replied the topic: #1 03 May 2019 07:49
நன்றி
ராணி's Avatar
ராணி replied the topic: #2 02 May 2019 19:22
சசிரேகா உங்களின் அம்மா போல எண்ணி எழுதுகிறேன். உங்கள் கதை அருமையாக இருந்தது. உங்களின் எல்லா கதைகளையும் படித்திருக்கிறேன். உங்கள் கதை இயல்பாக உள்ளது. படித்ததும் புரிந்துக் கொள்ளும் அளவிற்கு எளிய நடையில் வார்த்தைகள் இருக்கிறது. இதை என் வீட்டில் சொல்லவும் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் (10 பேர்) உங்கள் கதைகளை விரும்பி படிக்கிறோம் எந்த இடத்திலும் படிக்கும் வரிகளோ வார்த்தைகளோ எங்களை கூச்சப்பட வைப்பதில்லை எந்தவித அலங்கார வார்த்தைகளும் அதிகப்படியாக இல்லை நடுத்தர குடும்பங்களில் வாழும் மனிதர்களின் வாழ்க்கை முறை பேச்சு வழக்கு வசதி வாய்ப்புகள் வீட்டில் புழங்கும் நடைமுறை பழக்க வழக்கங்கள் எளிய வாழ்க்கை முறை என நீங்கள் எழுதும் கதைகளின் எழுத்து நடை என் குடும்பத்தினருக்கு மிகவும் பிடித்திருக்கிறது வாழ்த்துக்கள் இப்படியே தொடர்ந்து எழுத எங்கள் அனைவரின் ஆசிர்வாதங்கள் - ராணியும் என் குடும்பத்தினரும்
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 01 May 2019 19:24
தஞ்சையில் உள்ள மீனுவின் பழைய வீட்டில்

ஈஸ்வரன் தர்னேந்திரன் பத்மாவதி முடிவைப் பற்றிய கதையை கூறி நிப்பாட்டவும் சுவாதி தன் அண்ணனிடம்

”அண்ணா ஈஸ்வரன் சொல்றதைப் பார்த்தா ரத்தினங்கள் பரதன்கிட்ட இருக்கும்னு தோணுது”

“அப்ப பரதன் யாரு” என பிரபு கேட்க உடனே நிரஞ்சனோ

”ஓ உங்களுக்கு தெரியாதா நான் சொல்லவா” என கேட்க மற்றவர்களும் சொல்லு என தலையாட்டவும் அவனும் தனக்கு தெரிந்த பரதன் பற்றிய விவரங்களைக் கூறினான்

*****

படிக்கத் தவறாதீர்கள்!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...m-neeye-sasirekha-25
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 24 Apr 2019 19:01
தஞ்சையில் உள்ள மீனாட்சியின் வீட்டில்

2 நாள் ஆராய்ச்சியின் முடிவில் ஈஸ்வரனும் நிரஞ்சனும் பெரிய உண்மையை கண்டுபிடித்தார்கள். அதன் படி ஈஸ்வரன் சொல்ல சொல்ல நிரஞ்சன் ஒரு பெரிய சார்ட்போர்டு ரெடி செய்தான். அதில் பல பல கோடுகளை கிளைகளாக வரைந்து முடித்தான்.

முழுவதும் வரைந்த பின் நிரஞ்சன் ஈஸ்வரனிடம் அதைக் காட்டினான்

”அண்ணா சரியா போச்சா பாருங்க” என அந்த சார்ட் போர்டை நீட்ட ஈஸ்வரனும் அதைப் பார்த்தான். அம்புக்குறிகளும் கோடுகளும் பெயர்கள் என பேமிலி ட்ரீ போல வரைந்திருந்தான். அதன்படி

***********

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...m-neeye-sasirekha-24
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 17 Apr 2019 20:19
சென்னை நோக்கிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை

ராமேஸ்வரத்திலிருந்து கிளம்பிய ஒரு மினிவேன் சென்னையை நோக்கிச் செல்லும் ஹைவே ரோடில் வேகமாக சென்றுக் கொண்டிருக்க அதில் மயங்கிய நிலையில் ஈஸ்வரன் ஒரு சீட்டில் படுத்திருந்தான். அவன் விழுந்துவிடக் கூடாதென கயிறுகளால் அவனை சீட்டோடு கட்டி வைத்திருந்தார்கள் இருவர், அவர்கள் பார்க்கவே நடுத்தர வயது உடையவர்களாக இருந்தார்கள்.

”தூங்கிகிட்டே இருக்கானே எப்பதான் பேசுவான்” என அதில் இருந்த ஒருவர் கோபமாக கத்த அதற்கு மற்றவர்

*********

படிக்கத் தவறாதீர்கள்!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...m-neeye-sasirekha-23

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top