(Reading time: 11 - 21 minutes)

தமிழ்நாட்டில் மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளைக் குளிப்பாட்டி, நெட்டி மாலை, வித விதமான கலர் நூல்களால் ஆன மாலை என்று அணிவிப்பது போல் அங்கேயும் நடைபெற்றது. ஒட்டகங்களுக்கு கலர் கலரான நூல்களில் கட்டப்பட்ட மாலைகள், அதன் இருக்கைகள் என்று கிடைத்த இடத்தில் அலங்காரம் செய்து அதற்கு பரிசு வழங்கப்பட்டது.

பின் ஒட்டகத்திற்கு ஹேர் ஸ்டைல் அதாவது அதன் ரோமங்களை வெட்டுதல், அழகுபடுத்துதல் எல்லாம் செய்தார்கள். பார்க்க சிரிப்பாகவும் , அதே சமயம் இவர்களின் ரசனை எல்லாம் வித்தியாசமாகவும் இருந்தது.

சர்கஸ்களில் காண்பிப்பது போல் ஒட்டகத்தை அணிவகுத்தல், இசைகேற்ற நடனம் ஆட வைத்தல் என்று பார்க்க பிரமிப்பாக இருந்தது.

அழகுப் போட்டிகள் ஆண்கள், பெண்கள் இருபிரிவினருக்கும் நடக்க, ஒரே கைதட்டலும், விசிலுமாக இருந்தது. பின் ராஜஸ்தான் பாரம்பரிய இசை, நடனம் எல்லாம் நடக்க அதுவும் பார்த்து மகிழ்ந்தார்கள்.

இதற்கிடையே சாப்பாடு, டீ , ஸ்நாக்ஸ் எல்லாம் வந்து கொண்டே இருந்தது. வேண்டும் என்பதை வாங்கிச் சாப்பிட்டு வந்தார்கள்.

எல்லாம் முடிய இரவு எட்டு மணி ஆனது. அப்போதும் நிலா வெளிச்சத்திலும், ஜீப் வெளிச்சத்திலும்  ஒட்டகத்தில் மெல்ல எல்லோரும் தங்கள் இடத்திற்குச் சென்று சேர்ந்தார்கள். வித்தியாசமான அனுபவத்தை அசை போட்டபடி எல்லோரும் தங்கள் அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டார்கள்.

கிருத்திகாவிற்கு இன்றைக்கு மீண்டும் கனவு வர வாய்ப்பு இருக்கிற்து என்று தோன்றியது. அந்த நினைவோடு படுத்ததால், சற்று நேரத்திலேயே அவளுக்கு கனவு வந்து விட்டது. இதைக் கனவு என்று தெரிந்தும் கூட , கண் முழித்தால் மறைந்து விடுமோ என்று எண்ணினாலும், அவளால் செய்ய முடியவில்லை.

இன்றைக்குச் சென்றது போல் ஒட்டகத்தில் ஒரு பெண் ஏறுகிறாள். அதிலிருந்து கிருதிகாவிற்கு காட்சிகள் தெரிய ஆரம்பிக்கின்றன.

அது ஒரு இளங்காலைப் பொழுது. சூரியன் கிழக்கே உதயமாகி சில மணி நேரங்களே சென்று இருக்க, பாலைவனப் பறவைகள் எங்கோ ஒலி எழுப்பிக் கொண்டு இருந்தன.

அப்போது கிட்டத்தட்ட ஏழடி உயரமும் அதற்கேற்ற உடலும் கொண்ட ஒருவர் கருப்பு நிறகக் புரவியில் ஏறி வர, அவருக்குப் பின்னே கிட்டத்தட்ட ஒரு நூறு குதிரை வீரர்கள் வந்தார்கள்.

வீரர்களுக்கு நடுவில் சில திரை போட்டு மூடியிருந்த பல்லக்குகளும் வந்தன.

கருப்பு நிறக் புரவியில் அமர்ந்து இருந்தவர் யாரையோ தேடுவது போல் இருக்க, அவர் கண் சிமிட்டும் நேரத்திற்குள் அங்கே சிலர் வந்து நின்று இருந்தனர். அவர்களும் பார்க்க ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர்களாகத் தான் தெரிந்தார்கள்.

ராஜபுத்திரர்களின் உடையோடு அவர்கள் இடுப்பில் தொங்கிய நீண்ட வாளும், அவர்கள் மார்பில் இருந்த சில ஆரங்களும் அவர்களின் அந்தஸ்தைப் பறை சாற்றின.

கறுப்புக் புரவியின் மேல் அமர்ந்தவர் முன் சென்று தலை தாழ்த்தி

“மகாராஜாவிற்கு வணக்கம்” என்று கூறினார்கள்.

“ஹ்ம்ம்” என்று மட்டும் சொன்னார்.

“மகாராஜ், தங்கள் செல்வதற்குத் ஒட்டகங்கள் தயார் செய்து இருக்கிறோம்”

“ஏன், புரவியில் செல்ல முடியாதா?

“இந்தப் பாலைவனத்திற்கு ஏற்ற மிருகம் ஒட்டகம் தான் மகாராஜ். குதிரைகள் வெகு விரைவில் களைத்து விடும். “

“இவைகளை எங்கே இளைப்பாறச் செய்வது?

“எங்கள் புரவி காப்பாளர்களை அழைத்து வந்து இருக்கிறோம். அவர்களிடத்தில் ஒப்படைத்தால், அதைப் பராமரித்து பாதுகாத்து நிற்பார்கள். தங்கள் வேலை முடிந்து திரும்பி வந்தவுடன் , புரவிகளை தங்களிடத்தில் ஒப்படைப்பார்கள் மகாராஜ் “

தன் புரவியை “சேத்தக்” என்று அழைத்து அதன் காதில் அவர் ஏதோ சொல்ல, அது விறைத்துக் கொண்டு நின்றது. மேலும் அதைத் தடவிக் கொடுத்தபடி ஏதோ பேசவும் , மெதுவாக அசைந்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பத்மினியின் " காதோடுதான் நான் பாடுவேன்..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“சேத்தக் கவனிப்பவர் யார்? “ என்றுக் கேட்க, ஒருவன் முன் வரவும், அவனிடத்தில் சில விஷயங்களைச் சொல்ல, அவனும் மெதுவாகக் கேட்டு அதன் பின் புரவியின் அருகில் சென்று அதன் காதுகளைத் தடவிக் கொடுத்தான். கொஞ்சம் சிலிர்த்தாலும் அது வளைந்து கொடுக்கவே திருப்தியுற்றவர்,

“நீ சேட்டக் மட்டும் பார்த்துக் கொள். மற்றவர்கள் மீதிப் புரவிகளைப் பார்த்துக் கொள்ளட்டும்” என்று கூற, அவர்கள் தலையசைத்தனர்.

“ஹ்ம்ம்.. புறப்படலாம்” என்று இவர்களை அழைக்க வந்தவர்களைப் பார்த்துக் கூறவும், நூற்றுக்கணக்கான ஒட்டகங்கள் வந்து நின்றன.

அந்த ஏழடி உயரம் கொண்ட மனிதர் மட்டும் எளிதாக ஒட்டகத்தில் ஏறிவிட, மற்றவர்கள் சற்றுப் பயத்தோடு ஏறினார்கள். பல்லக்கில் வந்தவர்களுக்கு ஒட்டகத்தோடு இணைத்து சின்ன கூண்டு வண்டிகள் தயார் செய்யப் பட்டு இருக்க, அவர்களை அதில் செல்லுமாறு கேட்டுக் கொண்டனர்.

அப்போது ஒரு பெண் மட்டும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.