(Reading time: 14 - 28 minutes)

“பாஸ், இப்போ தான் இன்னும் ஆர்வம் ஜாஸ்தியா இருக்கு. ப்ளீஸ் பெர்மிசன் வாங்கிக் கொடுங்க”

தங்கள் டூர் லிஸ்ட்டில் இல்லாத எந்த விஷயத்திற்கும் அவர்கள் பொறுப்பு இல்லை. அத்தோடு இது அவன் வேலையும் இல்லை. ஆனால் என்னவோ ஆரம்பத்திலிருந்து கிருத்திகாவின் செயல்களில் வியப்பும், ஆச்சயர்யமும் கொண்ட ப்ரித்விக்கு அவளிடத்தில் மறுக்க மனம் வரவில்லை.

அந்தப் பொறுப்பாளரிடம் பேசி சம்மதம் வாங்கினான். அவர் எது நடந்தாலும் அவன் பொறுப்பே என்று எச்சரித்தே சம்மதித்தார்.

அப்போது உணவு இடைவேளை முடியும் சமயம். இன்னும் சில நிமிடங்களில் அடுத்தக் கட்ட போட்டி நடைபெறும். இது நான்காவது சுற்றிற்கான நேரம்.

அங்கே கிட்டத்தட்ட பத்து கிலோ எடையுள்ள வில் இருக்க, அதை அசால்ட்டாக எடுத்தாள் கிருத்திகா. பார்த்துக் கொண்டு இருந்த பொறுப்பாளரும், ப்ரித்வியும் வியந்தனர்.

பின் ஒன்றன் பின் ஒன்றாக ஐந்து அம்புகளை இருபது நொடிகளில் மிகச் சரியாக குறியில் விட்டாள். கிட்டத்தட்ட இது கின்னஸ் ரெகார்ட்டிற்கு சமமான புள்ளிகள்.

உணவு இடைவேளை முடிந்து வந்த வீரர்களும் , பார்வையாளார்களும் அசந்து கைதட்டினார்கள். கை தட்டல் ஒலியில் திரும்பியவளுக்கு சட்டென்று காதுகளில்,

“இளவரசி கிரண் தேவி ..”

“ஜெய் பவானி” என்ற குரல் கேட்டது.

அத்தோடு அவள் அருகில் நின்று இருந்த வீரன்

“இது என்ன மாயம் தேவி? தங்களின் பூபோன்ற கரங்களில் இத்தனை வலு எங்கிருந்து வந்தது?”

என்ற குரலும் கேட்டது.

கிருத்திகா தன்னைச் சுதாரித்துக் கொண்டு சுற்றியும் பார்க்க, எல்லோரும் கைதட்டிக் கொண்டு இருந்தனர்.

ப்ரித்வி அவள் அருகில் நின்று கொண்டு ,

“ இப்போ சந்தோஷமா தேவி?” என்று வினவ, கிருத்திகா முழித்தாள். கனவில் வந்த வீரன் போல் கேட்கிறாரே என்று திகைத்தாள்.

“என்ன தேவி?” என்று கேட்க,

“தேவி என்று கூப்பிடுறீங்களே ?” என்றாள் கிருத்திகா.

“லிஸ்டில் உன் பெயர் கிருத்திகா தேவி என்றுப் பார்த்தேன். நீ செய்யும் வீர சாகசங்களுக்கு இந்தப் பெயர் தான் பொருத்தமாகத் தோன்றியது அதான் தேவி என்று அழைத்தேன்” என்று ப்ரித்வி கூறவும்,

வெட்கத்தோடு “கேலி பண்ணாதீங்க பாஸ்” என்றாள்.

அதற்குள் ஒரு சிலர் வந்து கிருத்திகாவிடம் பாராட்டாகப் பேச , அவள் ,மொழித் தெரியாமல் விழித்தாள். அதைப் பார்த்து சிரித்த ப்ரித்வி, அவளுக்கு அதை மொழி பெயர்த்துக் கூறினான்.

ப்ரித்வி “ஆமாம், இப்படி வீரத்தின் திருவுருவா இருக்கிற தங்களுக்கு கரப்பான் பூச்சியின் மேல் மட்டும் என்ன அனுதாபம். அதைப் பார்த்து பயந்ததாக செய்திகள் வந்தனவே “ என்று நாடக பாணியில் கேட்டான்.

அவனின் கேள்வியில் திகைத்தவள், “ஹலோ பிரின்ஸ், இது எல்லாம் தப்பான இன்பார்மேஷன். உங்களுக்கு யாரு சொன்னா?” என்று சண்டைக்குச் சென்றாள்.

“ஹ.. ஹ.. அது எல்லாம் உளவுத்துறை ரிபோர்ட். சொல்ல முடியாது ஆனால் செய்தி உண்மைதானே” என்று மீண்டும் கேட்கவும், க்ருதிகாவிற்கு ரோஷம் வந்தது.

“ஹலோ பாஸ், ரொம்ப சிரிக்காதீங்க. நானாவது கரப்பான் பூச்சிக்கு மட்டும் தான் பயப்படறேன். அவ்விடம் எப்படியோ?”

“நாங்க எல்லாம் எதுக்கும் பயப்பட மாட்டோம் மேடம்”

“ஹ. இத நாங்க நம்பனும்னா, இங்கே நடக்கிற ஏதாவது ஒரு போட்டியில் கலந்துகிட்டு ஜெயிச்சுக் காட்டுங்க பார்ப்போம்”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பத்மினியின் " காதோடுதான் நான் பாடுவேன்..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“இது எல்லாம் ஜுஜுப்பி. எந்த போட்டின்னும் நீயே சொல்லு” என,

அவள் சுற்றிப் பார்த்து விட்டு,

“கும்பல் போட்டி எல்லாம் வேணாம். ஜஸ்ட் ஒன் டு ஒன். அந்த ரெஸ்ட்லிங் மட்டும் கலந்துகிட்டு ஜெயிச்சு காட்டுங்க. ஒரு ரவுண்டு ஜெயிச்சாக் கூட ஒத்துக்கறேன். நீங்க தைர்யசாலின்னு” என்றாள் கிருத்திகா.

கிருத்திகாவின் பேச்சைக் கேட்டு அந்த போட்டியில் கலந்து கொண்டவனைப் பார்க்க, அவனோ ப்ரித்வியை விட இரண்டு பங்கு உடலும், உயரமும் கொண்டு எதிராளிகளைப் பந்தாடிக் கொண்டு இருந்தான்.

ப்ரித்வி அங்கே சென்று போட்டிக்குப் பேர் கொடுக்கவும், கிருத்திகா திகைத்தாள். அவள் விளையாட்டுக்குத் தான் சீண்டினாள். ஆனால் ப்ரித்வி நிஜமாகச் சண்டைப் போடப் போகிறான் என்றதும் எதிராளியைப் பார்த்தவள் அவனின் உடல் அமைப்பைப் பார்த்து அவளுக்கு மயக்கமே வந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.