(Reading time: 10 - 19 minutes)

“அந்த இடம் ரொம்ப தொலைவு . . அந்த எடத்தோட போட்டோஸ் இதோ” என சில புகைப்படங்களை காட்டினான்.

அவை புறாவை விட்டு ஆகாஷ் எடுத்த சில போட்டோக்கள்.

இவற்றை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த சுவாதி ராமமூர்த்தி ஆச்சரியத்துடன் ஆகாஷை பார்க்க . . அவன் கண்ணடித்தான். எதையும் பேசாமல் அங்கே கவனியுங்கள் என செய்கை செய்தான்.

அவர்கள் கவனம் மீண்டும் அங்கே செல்ல துரை பேசிக் கொண்டிருந்தான் “ இந்த மூலிகைகள் நம்ம நாட்டு சொத்து அதை பாதுகாப்பது நம்ம கடமை. நம்ம மூலிகைல மருந்து உற்பத்தி பண்ணி அதை நமக்கே விலை அதிகமா கொடுக்கறாங்க. இது வன்மைய கண்டிக்க வேண்டிய ஒன்று” என  பேசினான்.

“என்ன நடவடிக்கை எடுத்தீங்க” நிருபரின் கேள்வி

“அவங்க்கிட்ட இருந்து மூலிகைகளை கைப்பற்றி என் பாதுகாப்புல வெச்சிருக்கேன்”

“நீங்க ஏன் இத போலீசுக்கு தெரிவிக்கல?”

“சொல்லலாம்னு இருந்தேன் . . அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க. நிச்சயமா இதைப் பத்தி போலிசுக்கு விரிவாக சொல்லுவேன் . . .எனக்கு முக்கியமான வேல இருக்கு . . சாரி” என கூட்டத்தைவிட்டு நழுவினான்.

அவன் சென்று காரில் ஏறி அமர்ந்து போனதை அத்தனை கேமராக்களும் படம் பிடித்துக் கொண்டன. துரைக்கு கேமராவும் மைக்கும் புதிதல்ல ஆனாலும் ஒருவித படபடப்பு அவனுள் தென்பட்டது.

“இளம் தொழிலதிபர் துரை தன் நாட்டின் மேல் வைத்துள்ள ஈடுபாட்டையும் கடமையும் போற்றதக்கது” என ஒரு சேனல் பெண் கையில் மைக்குடன் கேமராவைப் பார்த்து பேசிக் கொண்டிருந்தாள்.

ஒருசில மணி நேரத்திற்க்குள் சதுரகிரி மலை மிக மிக பிரபலமாகிவிட்டது. சதுரகிரி மலையின் மகத்துவம் அதன் வரலாறு என அத்தனையும் பேசப்பட்டது. அதனோடு மூலிகைகளின் நன்மைகள் பற்றி பல சேனல்களில் எல்லாவித மருத்துவர்களும் போட்டி கொடுத்த வண்ணம் இருந்தனர்.

பேஸ்புக் டிவிட்டர் வாட்ஸ்அப்பிலும் செய்திகள் வேகமாக பரவின. முதலும் முடிவுமின்றி.

ஆகாஷ் மற்றும் அவன் சகா மீண்டும் அதே வீட்டிற்குள் வந்தனர். ஆகாஷ் மற்றும் பத்ரிநாத் முகத்தில் அத்தனை சந்தோஷம்.

தன் செல்போனில் செய்திகளை பார்த்த ராமமூர்த்தி “என்னடா இதெல்லாம? மீடியா எப்படி இங்க?” என கேட்க

”ஆசிரமத்துல ரெண்டு பேரு இருக்காங்க இல்லயா . . அவங்க மீடியாக்கு சொல்லி இருக்காங்க”

“உளறாத . . அவங்கதான் கடத்தறதே. .அப்புறம் எப்படி?”

“அவங்கள சொல்ல வெச்சது ஆகாஷ் ஆச்சே” என பத்ரிநாத் முந்திக் கொண்டார்

“ரெண்டு பேரையும் விலைக்கு வாங்கிட்டயா?” அப்பா கேட்க

“பத்து பைசா செலவு பண்ணல” என ஆகாஷ் பெருமையாக கூறினான்.

“அதானே பார்த்தேன் வேலண்டைன்ஸ் டேக்கு கூட கிப்ட் வாங்கி தர மாட்டானே இவன் . . வாட்ஸ்அப்ல எவன் மெசேஜ் பார்வோர்ட் பண்றவன் ஆச்சே. . இவனா காசுக் கொடுதிருப்பான்” என  சாரு மைண்ட்வாய்ஸ் ஓடியது.

“இப்ப எல்லார் கண்ணு முன்னாடியும் பாலுக்கு காவலா பூனைய போட்டாச்சு . . அதனால பால் திருட்டு போகாது. அதுலையும் மீடியா முன்னால” என பத்ரிநாத் கூற

“இதெல்லாம் அடுத்த பிரேக்கிங் நியூஸ் வரவரைக்கும்தான் . . அப்புறம் நம்ம நேஷனல் டிசீஸ் மறதி எல்லாருக்கும் வந்திடும். அப்ப பூனை திரும்ப பால திருடுமே” என பதிலுக்கு ராம்மூர்த்தி கூறினார்.

“அதை யோசிக்காம இருப்போமா? இன்னும் ஒரு வாரத்துக்கு இந்த விஷயம் மறந்துப் போகாது.” என்றவர் ஆகாஷை பார்த்து “மத்த விடியோஸ் மற்றும் போட்டோசை அப்பாக்கு காட்டு” என்றார்.

அவனும் புறா மூலம் எடுத்த அத்தனை வீடியோ மற்றும் போட்டோசை காட்டினான். அவரும் பார்த்தார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பத்மினியின் " காதோடுதான் நான் பாடுவேன்..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“சரி இத வெச்சி என்ன செய்ய போறீங்க?”

“கொஞ்சம் கொஞ்சமா ஹீரோவா இருக்கிற துரைய வில்லன் மோடுக்கு மாத்தணும். முதல்ல அவனை ஜனங்க மனசுல நிக்க வைக்கணும் அப்புறமா ஆதாரத்தோட காட்டணும்”

“இப்ப மக்கள் மனசுல நம்ம மூலிகையோட முக்கியத்துவம் பத்தின வீடியோஸ் மீம்ஸ் சர்குலேட் ஆகும் அடுத்தது இதை இவன் பாதுகாக்கல கடத்துறான்னு தெரிஞ்சா மக்கள்ல வெறுப்பாங்க. மீடியாக்கு ஹீரோவ ஜீரோ ஆக்கவும் முடியும். ஜீரோவ ஹீரோ ஆக்கவும் முடியும். அத்தன சக்தி இருக்கு”

“இன்னும் ஒரு வாரத்துக்கு இது டிரென்டிங்கா இருக்கும். அதுக்குள்ள இந்த விஷயம் சட்டபடி மூவ் ஆகும். பொதுநல வழக்கு போடப்படும்” என்றார் பத்ரிநாத்

“எதுக்கு தலைய சுத்தி மூக்கு தொடணும் . . டைரக்டா கேஸ் போடலாமே”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.