(Reading time: 12 - 24 minutes)

மற்றவர்களின் உற்சாகம் கொஞ்சம் குறைந்து இருந்தாலும், ப்ரித்வி சொன்னதைக் கேட்டனர்.

கீழே வந்து தர்பார் ஹாலில் தொங்கிய லஸ்தர் விளக்குகளின் அழகை ரசித்து விட்டு அடுத்த இடத்திற்குக் கிளம்பினார்கள் மாணவர்கள்.

எல்லோரும் ஏறுவதைச் சரிப் பார்த்து விட்டுத் தன் இடத்தில் அமர்ந்த ப்ரித்வி, திரும்பிப் பார்க்க, அங்கே அந்தப் ப்ரொபசர் இன்னுமே பயம் தெளியாமல் அமர்ந்து இருந்தார். அவ்வப்போது கிருத்திகா இருக்கும் இடத்தைப் பார்த்துக் கண்களை மூடித் திறந்தார். இதைப் பார்த்ததும் ப்ரிதிவிக்குச் சிரிப்பு வந்தது.

இரவு உணவிற்காக ஒரு தாபாவில் நிறுத்தினார்கள். நல்ல சுகாதாரமான இடமே. பாத்ரூம் வசதி குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக இருந்த தாபா.

முகுந்த்கர்க்கில் இருந்து கிளம்பும்போதே இங்கே சொல்லியிருக்க, கார்டன் ரெஸ்டாரென்ட் அமைப்பு என்பதால் அங்கேயே ஒரு புறமாக பப்பே முறையில் அமைத்து இருந்தார்கள்.

ஸ்டுடென்ட்ஸ் அனைவரும் அரட்டை அடித்தபடி உணவை ஒரு பிடி பிடித்தனர். பகல் முழுதும் அலைந்ததில் எல்லோருக்கும் நல்ல பசி.

எல்லோரிடத்திலும் ஒரு ரவுண்டு வந்தவன், கிருத்திகா அருகில் வர,

“பிரின்ஸ் , நான் சொன்ன மாதிரி ஆகிடுச்சா? “ என்று கேட்டாள்.

“என்ன ?” என்று ப்ரித்வி கேட்கவும்

“நேற்றே சொன்னேனே.. என்னுடைய வீர சாகசம் எல்லாம் கேட்டா ப்ரபொசர்ஸ் கோமாவிற்குப் போயிடுவார்னு.. இன்னிக்கு உங்களுக்குப் புரிஞ்சு இருக்குமே” என்று கேட்டாள்.

“நீ பண்ணினதற்குப் பேர் வீர சாகசமா? குரங்குச் சேட்டைன்னு வேணும்னா சொல்லலாம்.”

“வொய் திஸ் கொலைவெறி பிரின்ஸ்?

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“பின்னே, அங்கே இப்படி ஒரு விஷயம் இருக்குன்னா, சம்பந்தப் பட்ட யாரையும் கேட்காமல், யார்கிட்டேயும் சொல்லாமல் அப்படிப் போயிருக்கியே. சப்போஸ் உன்னால் வந்த வழியக் கண்டுப் பிடிக்க முடியாமல் போயிருந்தால், அல்லது அந்தக் கதவு ரிப்பேர் ஆகியிருந்தால் என்ன செய்து இருப்பாய்? அத்தோடு இந்த மாதிரி பழையக் கோட்டை எல்லாம் சட்ட விரோதக் கும்பலுக்கு துணை செய்யும் இடம் என்றுத் தெரியாதா? உள்ளே அப்படி யாரும் இருந்து இருந்தால் ? “ என்று சற்றுக் கோபத்துடனே கேட்டான்.

அவன் சொல்வது புரிந்தாலும், அவளும் எதுவும் வேண்டும் என்று செய்யவில்லை. ஆர்வக் கோளாறின் காரணமாக செய்ததுதானே தவிர, பிரச்சினையைத் தேடித் போக எண்ணி செய்யவில்லை. அதை அவள் விளக்க, ப்ரித்விக்கும் புரிந்ததுதான்.

ஆனாலும் இந்த ஆர்வமே எந்தப் பிரச்சினையில் மாட்டி விடப் போகிறதோ என்று எண்ணிப் பயந்தான்.

ஒருவழியாக இரவு பதினொரு மணி அளவில் பிகானர் நகரத்தை அடைந்தனர்.

டோர்மிடரி போன்ற அமைப்பில் ஸ்டுடென்ட்ஸ் தங்க வைக்கப் பட, தேவையான ஏற்பாடுகளைச் செய்தான் பிரித்வி.

மறுநாள் காலையில் எல்லோரையும் எட்டு மணிக்கு ரெடியாகச் சொன்னவன்,

“இந்த ரெண்டு நாள் உங்களுக்கு விடுமுறை போலத் தான். எஸ். நாம இப்போ ஒட்டகத் திருவிழாவிற்குப் போகப் போறோம். இங்கேர்ந்து பதினஞ்சு கிலோ மீட்டரில் அந்த இடம் இருக்கு. எல்லோரும் போகலாம் “ எனவும், ஹேய் என்று ஸ்டுடென்ட்ஸ் கத்தினர்.

“கைஸ், முக்கியமான விஷயம். அந்தக் கிராமத்திற்குள் நோ ஆல்கஹால், நோ ட்ரக்ஸ் & ப்ரோபர் டிரஸ் கட்டாயம் இருக்கணும். சோ கர்ல்ஸ் ப்ளீஸ் வியர் பார்மல் குர்தி, & கைஸ் நீங்க ப்ளீஸ் வியர் புல் பேன்ட் அண்ட் டீ ஷர்ட். அண்ட் நோ டார்க் கலர் டிரஸ். யூஸ் மைல்ட் கலர்ஸ்.”

“சார், இது என்ன டிரஸ் கோட் எல்லாம் பெஸ்டிவல்க்கு சொல்றீங்க?

“எஸ். இது அவங்களோட கலாச்சாரத் திருவிழா. டூரிஸ்ட் நம்மோட நடவடிக்கைகள் அவங்களுக்குத் தொந்தரவா இருக்கக் கூடாது. சோ அவங்க நமக்கு சில மினிமம் கண்டிஷன்ஸ் கொடுத்து இருக்காங்க. நாட் பார் ஒன்லி அஸ். பார் டூரிஸ்ட் பெர்சன்ஸ். வில் கீப் தட்.”

ப்ரித்வி சொன்னபடி எல்லோரும் அங்கேப் போகத் தயாராகினர். முதல் நாள் முழுதும் கண்ணில் படாத அந்த இன்னோவா இன்றைக்கு இவர்கள் பஸ்சின் பின்னால் வந்தது.

ப்ரித்வியால் தற்போது ஒன்றும் செய்ய முடியவில்லை. எந்த ஸ்டேப் எடுத்தாலும் அவர்கள் இந்தத் திருவிழாவிற்கு வந்தோம் என்று சொல்லி விடுவார்கள். எனவே இவர்களை இப்போதைக்கு ஒன்றும் செய்ய முடியாது என்று உணர்ந்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பத்மினியின் " காதோடுதான் நான் பாடுவேன்..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

பிகானரில் இருந்து அந்தக் கிராமத்திற்கு ஒட்டகச் சவாரி செய்தார்கள்.

அவர்கள் அந்த விழா நடக்கும் இடம் செல்ல , செல்ல க்ருதிகாவிற்கு காதுகளில் ஏதோ சத்தம் கேட்டது. இங்கே இருப்பவர்கள் எல்லாம் மங்கலாகத் தெரிய, அவள் கண் முன் வேறு ஒருக் காட்சி விரிந்தது.

“மகாராஜா ரானா பிரதாப் சிங் “ என்று ஒரு குரல் ஒலிக்க,

“ஜெய் பவானி “ என்று லட்சகணக்கான குரல்களின் பதில் கேட்டது.

இவை எல்லாம் கிருத்திகாவின் கண்ணுக்குள்ளும், காதுக்குள்ளும் மட்டும் தெரிந்தது.

தொடரும்!

Episode # 07

Episode # 09

Go to Kaanaai kanne story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.