(Reading time: 12 - 23 minutes)

ஐடனேரி பார்த்து ஏற்பட்ட சந்தேகங்களும் தெளிவுப் படுத்திக் கொண்டனர். ஒரு மணி நேரம் சென்றதும் , மாணவர்கள் எல்லாம் அந்தப் பெரிய ஹாலில் வந்து நின்றனர். வந்தவர்களுக்கு முதலில் சூடான டீ கொடுக்கப்பட்டது.

பிரித்வி ஏற்கனவே சொல்லியபடி அல்பபெட் ஆர்டர் படி மாணவர்களை மூன்று குழுவாகப் பிரித்து, அவர்களுக்குத் தன் உதவியாளர்களை தலைமையாக ஏற்க வைத்தான். பின்

“எல்லோரும் இப்போ ஊரைச் சுற்றிப் பார்க்கப் போறோம். இங்கே உள்ள மக்களப் பற்றித் தெரிஞ்சிக்கோங்க. எல்லோரும் ஒரே பாதையில் போகணும்னு இல்லை. யாரும் அவங்க அவங்க கைட் விட்டுத் தனியாப் போக வேண்டாம். இப்போ மணி நாலு ஆகுது. எட்டு மணிக்கு இங்கே வந்தால் நைட் டின்னெர் சாப்பிடலாம். அதுவரை நீங்க சுத்திட்டு வரலாம்.” என்று அனுப்பி வைத்தான்.

எல்லோரும் கிளம்பவும், ப்ரிதிவியும் ஒரு குழுவோடு இணைந்து கொண்டான். அந்தக் குழுவில் தான் கிருத்திகாவும் இருந்தாள்.

முகுந்த்கர்க் கிராமமும் இல்லாத, பெரிய நகரமும் இல்லாத ஊர். அந்த ஊரில் நிறைய தெருக்கள் இருக்க, தெருவிற்கு ஒரு ஹவேலியாவது இருந்தது.

சிறு வண்டியில் விதவிதமான பாரம்பரிய ஆடைகள் அங்கே விற்பனைக்கு இருந்தன. பெண்கள் அதை ஆச்சர்யமாகப் பார்த்து இருந்தனர். அதோடு அவர்களுக்குத் தேவையான கண்ணாடி வளையல்கள், பொட்டு என பார்க்க பார்க்க கண்களைப் பறித்தது.

தமிழ்நாட்டுப் பக்கம் சந்தை என்று சொல்வது போலே, காய்கறிகள் எல்லாம் வெளியில் விற்றார்கள். அநேகம் ஆண்களே இருக்க, பெண்களின் நடமாட்டம் குறைவே. இதை எல்லாம் கவனித்துக் கொண்டு, தன் குறிப்பேட்டில் எழுதிக் கொண்டு வந்தாள் கிருத்திகா.

ஒரு சின்ன தெருவில் உள்ளே திரும்பும்போது உள்ளிருந்து ஏதோ சாமி ஊர்வலம் போல் ஒன்று வர, எல்லோரும் ஒதுங்கினர். இடம் கிடைக்க , கிடைக்க சுற்றுலா வந்தவர்கள் உள்ளே சென்று இருக்க, கிருத்திகா கடைசியில் வந்து கொண்டு இருந்ததால் , அவர்களை விட்டுப் பிரிந்து விட்டாள்.

அப்போது ப்ரித்வி அந்த இன்னோவா கார் நின்று இருப்பதைப் பார்த்து விட்டு அதன் அருகே செல்ல முயற்சித்தான். ஆனால் ஊர்வலம் தடுக்கவே அவர்கள் அருகில் செல்ல முடியவில்லை. அந்த இன்னோவா வேறு பக்கம் நகர, ப்ரித்வியும் அவர்களை பாலோ செய்தான்.

அதற்குள் அந்த ஊர்வலம் கடந்து இருக்கவே, இப்போது இவன் தொடர்வது அவர்களுக்குத் தெரிய வரும் என்று எண்ணி, அவர்களை விட்டுப் பழைய பாதையைத் தொடர்ந்தான்.

அந்த ஊர்வலம் சென்று முடியவும், கிருத்திகா அந்த தெருவிற்குள் தங்கள் குழுவோடு சென்று சேர வேகமாக நடந்தாள்.

ஒரு சிறு கடையைத் தாண்டும்போது கிருத்திகாவின் பின்னே ஒருவன் வர, முன்னாடி ஒருவன் அவளை மறைத்தார் போல் சென்றான். அவர்களின் அசைவில் வித்தியாசத்தை உணர்ந்த க்ருதிக்கா அலெர்ட் ஆனாள். ஆனால் காண்பித்துக் கொள்ளவில்லை.

அந்தத் தெருவில் உள்ளவர்கள் ஊர்வலத்தின் பின்னே சென்று இருக்க, இவர்கள் குழுவோ சற்றுத் தொலைவில் சென்று கொண்டு இருந்தார்கள். அவர்களை அழைக்க இவள் வாயைத் திறக்கும் சமயம், பின்னாடி வந்து இருந்தவன் அவள் வாயை மூடினான்.

முன்னால் இருப்பவன் ஒரு கர்ச்சீப் எடுத்து அவள் மூக்கின் அருகில் கொண்டு வர முயல, க்ருத்திகாவோ முயன்று திமிறி, தன் காலால் எதிரில் வந்தவனை உதைத்தாள். உதைத்த இடமோ வெளியில் சொல்ல முடியாத இடம். அவன் அலறிக் கொண்டு கீழே விழுந்த அதே நேரத்தில், திகைத்துப் பார்த்துக் கொண்டு இருந்த தன் பின்னால் இருந்தவனுக்கு இரண்டு கராத்தே அடிக் கொடுத்துக் கீழேச் சாய்த்தாள்.

“ஏண்டா .. இன்னுமாடா இந்த ஹைதர் அலி காலத்து டெக்னிக்க நம்பிகிட்டு இருக்கீங்க. இன்னிக்கு இருக்கிற வீடியோகேம்ஸ்லேயே எக்கச்சக்க புது டெக்னிக் வந்துட்டு இருக்கு. போய்க் கத்துகிட்டு வந்து கடத்த ட்ரை பண்ணுங்க.” என்று அவர்களை கேலி செய்து கொண்டு இருந்தாள் கிருத்திகா.

அந்த ஊர்வலத்தின் சத்தத்தில் வெளியில் யாருக்கும் இவர்களின் அலறல் கேட்கவேயில்லை. ஆனால் ப்ரித்வி இன்னோவா காரை பின்தொடர்வதை விட்டுவிட்டு இங்கே வரும் போது கிருத்திகா சண்டை போடுவதைப் பார்த்து விட்டான்.

அவன் அவள் அருகில் வருவதற்குள். அந்த இரண்டு பேரும் ஓடி இருக்க,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பத்மினியின் " காதோடுதான் நான் பாடுவேன்..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“ஹேய் .. என்ன ஆச்சு? அவங்க என்ன செஞ்சாங்க?” என்று கேட்டான் ப்ரித்வி.

“ஒன்னும் இல்லை சார். கொஞ்சம் கையப் பிடிக்க வந்தாங்க. நான் உதைச்சு அனுப்பி விட்டுட்டேன். “

“உங்ககிட்டே ஏற்கனவே சொல்லி இருக்கேன் தானே. தனியா யாரும் போகாதீங்கன்னு?”

“இல்லை பிரின்ஸ். நம்ம குரூப் கூடத் தான் போயிட்டு இருந்தேன். நடுவில் இந்த ஊர்வலத்தினால் அங்கிருந்து பிரிஞ்சு வந்துட்டேன். திருப்பி போய் சேர்ந்துக்கறதுக்குள்ளே இப்படி ஆயிடுச்சு” என்று கிருத்திகா கூறவும், ப்ரித்வியாலும் புரிந்து கொள்ள முடிந்தது. அவனும் அந்தக் கூட்டத்தைக் கண்டான் தானே.

“ஒஹ். கிருத்திகா , உங்களுக்கு இதோட ரெண்டாவது தடவை பிரச்சினை நடக்குது. போலீஸ்லே கம்ப்ளைன்ட் பண்ணிடலாமா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.