(Reading time: 10 - 19 minutes)

தொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 02 - குருராஜன்

Enakena yerkanave piranthavan ivano

நிலா எங்கிற வெண்ணிலா தான் நம்ம கதையோட ஹீரோயின். நல்ல அழகு, செம friendly, ஜாலியான அதே சமயத்தில் மெட்சுரான பெண்ணு. பி.ஈ. ஆர்கிடெக் முடிச்சிட்டு, ஒரு தனியார் கண்சல்டண்சில ஆர்கிடெக் கண்சல்டெண்டா வேளை பார்க்குறா.

தன் தாய் தன்னைப் பார்ப்பதை பார்த்து “என்ன டார்லிங், சைட் அடிக்கிறியா” என்றால் கிண்டலாக.

“அடி கழுத” என்று செல்லமாக சிவகாமி கையை ஓங்க, அவளுக்கு பே காட்டி விட்டு ஓடி காபி டம்ளரை எடுத்தாள் நிலா.

“என்ன ஆச்சரியமா இருக்கு, மகாராணி இன்றைக்கு 7 மணிக்கெல்லாம் ரெடி ஆயிட்டீங்க” என்று நிலாவை ஓட்டினார் சிவகாமி.

“டார்லிங், last weekஏ சொன்னேன் இல்ல, இன்னைக்கு என் ப்ரெண்ட் வர்ஷாவோட engagement. So we friends are going early.” என்று காபியை சுவைத்துக் கொண்டே பதில் கூறினாள் நிலா.

“மாதம் ஒரு ப்ரெண்டுக்கு கல்யாணம் நு சொல்ற. உன்னோட மேரேஜ் பத்தி பேசினா மட்டும் பிடி கெடுக்க மாடேங்குற. நேற்று கூட நம்ம விச்சு மாமா ஒரு நல்ல வரன் வந்திருக்குனு போட்டோ ஜதகம் குடுத்துட்டு போனார்” என்று சிவகாமி பேசி முடிப்பதற்குள்.

“ஆரமிச்சிடியாமா நீ. எப்போ பார்த்தாலும் போட்டோ, ஜதகம் நு” என்று கூறிக் கொண்டே hallக்கு வந்தவளை “நிலா குட்டி வாடா இங்க” என அழைத்தார் வெண்ணிலாவின் தந்தை சங்கர்.

தன் தந்தை எதற்கு அழைக்கிறார் என்று அவளுக்கும் தெரியும்.

“டாடி பிளிஸ், நீங்களாவது புரிஞ்சிக்கோங்க” என்று தன் தந்தையின் அருகில் உட்கார்ந்து கெஞ்சுவது போல் பேசினாள்.

“நிலா குட்டி, first இந்த கவர்ல இருக்கிற போட்டோவை பார். உனக்குப் பிடிக்காமல் நாங்க எதையும் செய்ய மாட்டோம் அது உனக்கும் தெரியும் இல்ல” என்று ஒரு பேப்பர் envelope நிலாவிடம் நீட்டினார் சங்கர்.

வேண்ட வெறுப்பாக கவரை வாங்கியவள், அதைப் பிரிப்பதற்குள் அவளது செல்போன் சிணுங்கியது. அப்பாட “escape” என்று மனதில் நினைத்துக் கொண்டு “அப்பா போன்” என்று தன் அறைக்கு ஓடிச் சென்று தன் செல் போனை எடுத்தாள்.

“சொல்லு டி எங்கே இருக்க” என்று எதிர் முனையில் இருக்கும் தன் தோழியிடம் கேட்டாள்.

அதற்கு எதிர் முனையில் இருந்து பதில் வர, “ஓ வந்துட்டியா. இதோ வந்துட்டேன்” என்று கூறி போனை கட் செய்தாள் நிலா.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அறையில் இருந்து வெளியே வந்தவள், ஸாரி பா ராதிகா வந்துட்டா. நான் கிளம்பனும். ஈவினிங் பேசலாமா. நீங்கத் தப்பா நினைக்களனா” என்று தன் தந்தையிடம் அனுமதி கேட்டாள்.

“சரி பார்த்து போயிட்டு வாமா. ஈவினிங் பேசிகளாம்” என்று மட்டும் கூறினார்.

தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடினாள் நிலா. இதை பார்த்துக் கொண்டிருந்த சிவகாமி, தன் கணவனை பார்த்து முறைத்தார்.

மனைவியின் பார்வைக்கான அர்த்தத்தை புரிந்து கொண்ட சங்கர், “வெளியே போர குழந்தையை அது இதுனு சொல்லி disturb பண்ணக் கூடாது சிவகாமி. ஈவினிங் வரட்டும், கண்டிப்பா நான் பேசுறேன்” என்று சமாதானம் சொன்னார்.

“என்னமோ போங்க” என்று கூறிவிட்டு சமையல் அறைக்குச் சென்றார்.

studioவில் இருந்த வேளை ரகு செய்து கொண்டிருந்தான். அதை அவன் முடிக்கும் தருவாயில் அவனது ஃபெரெண்ட்ஸ் சாம், வினோத், கீர்த்தி அங்கு வந்தனர். சனிக் கிழமை என்றால் அனைவரும் ஒன்று கூடுவது வழக்கம் தான்.

“டேய் ரகு, என்ன ட இன்றைக்கு எந்த modelsயும் காணோம்” என்று சுற்றி முற்றிப் பார்த்தவாறே கேட்டான் சாம்.

“நீ வருவனு ரகுவிற்கு தெரியும், அதான் எல்லாரையும் சீக்கிரம் போக சொல்லிருப்பான். நீ உன் ஜொல்லு வாய முடிட்டு உட்காரு” என்று அவன் தலையில் தட்டினாள் கீர்த்தி.

அதற்கு வெறும் சிரிப்பை மட்டும் பதிலாய் தந்தான் ரகு.

“மச்சி, என்ன டா ஆச்சி, இந்நேரம் இவன் பேசினதுக்கு 100 counter கெடுத்திருப்ப” என்றான் ஜான்.

“இரு மச்சி, workல final touch செஞ்சிட்டு இருக்கேன். முடிச்சிட்டு ஒரு 2 minsல வந்துடுறேன்” என்று மட்டும் கூறிவிட்டு தன் வேளையைத் தொடர்ந்தான் ரகு.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிரேமாவின் சுப்பையாவின் "உன்னில் தொலைந்தவன் நானடி..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“கீர்த்தி, கவனிச்சியா. இன்றைக்குப் பையன் சரி இல்ல. ஏதோ missing.” என்றான் வினோத்.

அதைக் கீர்த்தியும் கவனிக்கத் தவறவில்லை. இருந்தாலும் “டேய் அவன் தான் வேளையை முடிச்சிட்டு வர னு சொல்றான் இல்ல விடு” என்றாள் தன் நண்பனுக்கு சப்போர்டாக.

தன் வேளையை முடித்துவிட்டு, வந்து அவர்களுடன் அமர்ந்தான் ரகு.

அதே வேளையில் நிலாவும் வேளையை முடித்துவிட்டு தன் தோழிகளோடு வந்து ஒரு இடத்தில் அமர்ந்தாள்.

சுற்றி தன் நண்பர்கள் பேசிக் கொண்டிருக்க, நிலாவும் ரகுவும் மட்டும் அதில் ஈடுபாடு இல்லாமல் காலையில் வீட்டில் நடந்ததைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.