(Reading time: 10 - 19 minutes)

நிலா: அரேஞ் மேரேஜ்ல கிடைக்கிற ரிலேஷன்ல ஒரு கம்பல்ஷன் இருக்கும். அதுல உருவாகிற ரிலேஷன்ஷிப் வெறும் கணவன் மனைவி உறவாதான் இருக்கும். அது எனக்கு வேண்டாம். நல்லா பழகின ரெண்டு ப்ரெண்ட்ஸ், பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் ஆகி அதற்குப் பிறகு லவ் ப்ண்ணறபோ அதுல வர ப்ரெண்ட்ஷிப் லைப் புல்லா இருக்கும். அப்படி ஒரு ரிலேஷன் தான் எனக்கு வேணும். அது லவ் மேரேஜ்ல மட்டும்தான் கிடைக்கும்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

(studioவில்)

“மச்சி நி சொல்றது எல்லாம் சரி டா. லவ்தானு strongஆ இருக்கிற நீ, காலேஜ்ல இருந்து உனக்கு எத்தனைப் பேர் propose பண்ணிருக்காங்க. ஆனா நீ யாரையும் கண்டுக்கவே இல்லையே” என்றான் ஜான்.

“என்ன பொறுத்த வரைக்கும் காதல் என்பது, ஒரு பொண்ண முதல் தடவை பார்த்தோன அவள் தான் நமக்கு னு தோனனும். லப் முழுக்க அவ கூடத்தான் இருக்கனுனு தோனனும். சிம்பு சொல்ற மாதிரி “அந்தக் காதல் நம்மல அப்படியே அடிக்கனும்”. எனக்கு love at first sightல தான் நம்பிக்கை இருக்கு. அதற்காகத்தான் வெயிட் பண்றேன். எவ்வளவு நாள் ஆனாலும் வெயிட் பண்ணுவேன்.” என்று கூறி முடித்தான் ரகு.

(வர்ஷா வீட்டில்)

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "காணாய் கண்ணே..." - காதல் & சரித்திரம் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“ஏன் டி எனக்கு தெரிஞ்சே உன்னிடம் நிறையப் பேர் லவ் சொல்லிருக்காங்க. லவ் மேரேஜ் தான் செய்யனும் ன அதுல யாருக்காவது ஒகே சொல்லிருக்கலாம் இல்ல. இவ்வளவு நாள் ஏன் சும்மா இருந்த” என்று கேள்வி எழுப்பினாள் ரம்யா.

“ரம்யா, நீ கேட்கிறது கரெக்ட் தான். உனக்குத் தெரிந்த சில proposal மட்டும் இல்ல, உனக்கு தெரியாமலும் சிலர் என்னிடம் காதல் சொல்லிருக்காங்க. அதில் சிலரை எனக்கு முன் பின் தெரியாது. மீதம் உள்ளவர்கள் எனக்கு நல்ல நண்பர்கள் தான் ஆனாலும் அவர்கள் மீது எனக்குக் காதல் உணர்வு வந்தது இல்லை. என்னைப் பொறுத்த வரை நல்ல நட்பில் இருந்து வரும் காதல் தான் இறுதி வரை இருக்கும். அதுதான் எனக்கு வேண்டும். அந்தக் காதலுக்காக எத்தனைக் காலம் வேண்டுமானாலும் காத்திருக்கலாம்.” என்று கூறி முடித்தால் நிலா.

(இருவரிடமும்)

“சரி இப்போ என்ன பண்ண போறீங்க” என்று இருவரிடமும் அவர்கள் நண்பர்கள் கேட்டனர்.

இருவரும் ஒரே நேரத்தில் “முடிவு பண்ணிட்டேன், எனக்கு லவ் மேரேஜ் தான், அத strongஆ வீட்டில் சொல்ல போறேன்” என்றார்கள்.    

தொடரும்

Episode # 01

Episode # 03

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.