(Reading time: 10 - 19 minutes)

“டேய் ரகு என்ன டா நாங்க பேசிட்டு இருக்கோம், நீ என்னமோ யோசிச்சிட்டு இருக்க. என்ன ஆச்சி” என்றாள் கீர்த்தி. (studioவில்)

“ஏய் நிலா, என்ன டி, ஏதோ யோசனையா இருக்க. என்ன விஷயம்” என்றாள் வேதா (வர்ஷா வீட்டில்)

இருவரும் காலையில் நடந்த விஷயத்தை தன் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டார்கள்.

(studioவில்)

“மச்சி நல்ல விஷயம் தானே ட. அதுக்கு ஏன் டா வருத்தமா இருக்க” என்றான் வினோத்.

“டேய் நீயுமா ட, வீட்டில்தான் புரிஞ்சிக்க மாட்டேங்கராங்க. உனக்கு என்ன பத்தி தெரியும் இல்ல. ஐ hate அரேஞ் மேரேஜ்” என்றான் ரகு.

(வர்ஷா வீட்டில்)  

“ஏய் congrates டி நிலா. நெக்ஸ்ட் உன்னோட மேரேஜ் gathering தான்” என்று நிலாவை அனைத்துக் கொண்டாள் வேதா.

“சும்மா இரு டி லூசு. நானே எப்படி escapte ஆகலானு பார்த்துட்டு இருக்கேன். ஐ ஹேட் அரேஞ்சுடு மேரேஜ்” என்றாள் நிலா.

(studioவில்)

“ரகு, உனக்கு லவ் மேரேஜ் தான் விருப்பம் நு எங்களுக்கும் தெரியும். உனக்கு யாரையாவது பிடிச்சிருந்தா அதையாவது வீட்டில் சொல்ல வேண்டியது தானே. அப்பா அம்மா ஒத்துக்கு வாங்கனு தான் எனக்கு தோனுது” என்றாள் கீர்த்தி.

“என் parents கிட்ட நான் லவ் மேரேஜ் தான் பண்ணிக்குவேன் நு எப்பவோ சொல்லிட்டேன். அவங்களும் அதற்குச் சரி நு சொல்லிட்டாங்க. but நான்தான் என் மனசுக்கு பிடிச்ச மாதிரி ஒரு பெண்ணை இன்னும் பார்க்கல” என்றான் ரகு.  

(வர்ஷா வீட்டில்)

“இன்னும் நீ லவ் மேரேஜ் நு தான் சுத்திட்டு இருக்கியா. லவ் எல்லாம் சினிமா ல பார்க்கிறதுக்குத்தான் நல்ல இருக்கும். Real lifeல செட் ஆகாது. உங்க அப்பா இதுக்கு சம்மதிப்பாரனு யோசித்து பார்த்தியா” என்றாள் மலர்.

“யாருனே தெரியாத ஒருதரை மேரேஜ் பண்ணிக்கிறதுல எனக்கு உடன்பாடு இல்ல டி. நான் லவ் மேரேஜ் தான் பண்ணிக்குவேன் நு எங்க parents கிட்ட சொல்லிட்டேன். நான் தப்பு பண்ண மாட்டேன் நு எங்க அப்பாவுக்குத் தெரியும், அதனால எனக்கு பிடிச்சிருந்தா அவங்களுக்கும் ஓகேனு சொல்லிட்டாரு என் அப்பா” என்றாள் நிலா.

இருவர் கூறியதும் அவர்கள் நண்பர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இருவரிடம் எதற்காகக் காதல் திருமணம், எப்படிப் பட்ட partner தேவை என்ற ஒரே கேள்வி கேட்கப் பட்டது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "கலாபக் காதலா..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

ரகு: என்னோட job, என்னோட passion. 9 டு 5 job கிடையாது, நிரந்தரமான வருமானம் கிடையாது. அதுக்காக நான் சம்பாதிக்காமல் இல்லை. அரேஞ்சுடு மேரேஜ் மெண்டாலிட்டில வரப் பெண்ணும், அவங்க parents இத புரிஞ்சிக்க மாட்டாங்க. ஆரேஞ்ச் மேரேஜோட முதல் criteriaவே பையன் என்ன படிச்சிருக்கான், என்ன வேளை பார்க்கிறான் என்பதுதான். ஆனால், என்ன பத்தி தெரிஞ்சி, என்ன லவ் பண்ற பெண்ணு இதை எல்லாம் தெரித்துத்தான் என்ன லவ் பண்ணுவாங்க.

நிலா: 9 டு 5, மெஷின் மாதிரி ஓடி வேலை செய்றது எனக்குப் பிடிக்காது. என்னை பொருத்த வரைக்கும் செய்ற வேலையை பிடிச்சி பேஷனோட செய்யனும். அப்படி செய்றவங்களால தான் வேலைல சந்தோஷமா இருக்க முடியும். வேலையைச் சந்தோஷமா செய்ய முடிஞ்சா அவங்களுக்கு எந்த டெண்ஷனும் தலைக்கு ஏறாது. லைப் ஹாப்பியா இருக்கும். ஸோ என்னோட லைப் பார்ட்ணரும் அப்படிதான் இருக்கனும். என்னை போலத்தான் அவரும் think பண்ணனும்.

ரகு: என்னோட வேலைய பத்தி உங்க எல்லாருக்கும் தெரியும். ஒரு நாள்ல நா நிறையப் பெண்கள் சந்திப்பேன். அவங்க கூடச் சிரித்து சகஜமா பேசனும், பழகனும். அதில் ஒரு சிலர் என்கிட்ட flirt பண்ற மாதிரி கூட பேசுவாங்க. அது என்னோட ஜாப். ஆனா நா எந்தப்   பெண்ணையும் தப்பா பார்த்ததும் இல்ல அந்த எண்ணத்தில் பழகினதும் இல்லை. இது எல்லாம் வெளியே இருந்து பார்க்கிற பெண்ணுக்குப் புரியாது. இதுவே என்னை உண்மையா லவ் பண்ற பெண் புரிஞ்சிக்குவா.

நிலா: உண்மையான காதல் இருக்கிற இடத்தில் தாண்டி சந்தேகம் இருக்காது, தப்பு செய்ற நினைப்பு வராது. ஆயிரம் அழகான பொண்ணுங்க இருந்தாலும், காதலிக்கிற பெண்ணை தவிர வேற யாரையும் பார்க்க தோணாது. அதுதான் உண்மையான காதல். அந்தக் காதல் தான் எனக்கு வேணும், அப்படி 1000 பெண்கள் சுத்தி இருந்தாலும், என்ன மட்டும் உண்மையா லவ் பண்ற ஆள்தான் எனக்குத் தேவை.

ரகு: எல்லாத்தையும் தாண்டி லைப் பார்ட்னர வர பொண்ணு வெறும் wife மட்டும் இல்ல. அவங்கதான் நம்மோட best friend. நம்மோட life end வரைக்கும் வர போறவங்க. நம்மோட நம்பிக்கை பலம் எல்லாம் அவங்கதான். அப்படி ஒரு ரிலேஷன்ஷிப் எனக்கு லவ் மேரேஜ்ல தான் கிடைக்கும் நு நா strongஆ நம்புறேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.