Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 33 - பிரேமா சுப்பையா - 5.0 out of 5 based on 2 votes
Change font size:
Pin It

தொடர்கதை - உன்னில்  தொலைந்தவன் நானடி – 33 - பிரேமா சுப்பையா

Unnil tholainthavan naanadi

தாய் மடியில் இருந்து  எழுந்த இளம்பிறை  “வாயை மூடிட்டு வேலையை பாரு” என்பதை செய்கையால் சொல்ல..

இவர்கள் இருவர் செய்கையையும் பார்த்து வியந்தாள் சுந்தரி.

“உத்தரவு மகாராணி..!” என்றவன் அதற்கு மேல் ஏதும் பேசாமல் வண்டியை ஓட்டவும் இவள் மீண்டும் அன்னை மடியில் படுத்துக்கொள்ள., ஆதரவாய் முதுகை வருடினாள் சுந்தரி.

வீட்டிற்கு வந்து   சேரும் வரை யாரும், யாரிடமும் பேசவில்லை. வீட்டிற்குள் கார் நுழைந்ததும் காரில் இருந்து கீழே இறங்கிய சுந்தரி அந்த கட்டிடத்தை பார்த்தபடி உள்ளே செல்ல..,

“மா” என்று அழைத்து அவளை தடுத்து நிறுத்தியவள், “நாங்க அங்க தங்கியிருக்கோம்” என்று அவுட் ஹவுஸை காட்டவும், சுந்தரியின் பார்வையில் ஆயிரம் கேள்விகள்….. இருந்தும் ஒரு வார்த்தையும் பேசாமல் கதிரை பார்த்தபடி அந்த வீட்டிற்குள் செல்ல..,

“ஒரு நிமிஷம்…, ஒரு நிமிஷம்…” என்று சொன்ன வான்மதி,  கையில் ஆரத்தி தட்டோடு வர..,

“மதி….!” என்று நெகிழ்ந்த சுந்தரி அவள் ஆரத்தி தட்டோடு வரவும் “சின்ன பொண்ணு நீ… இதையெல்லாம் செய்ய கூடாது..” என்று சொல்ல

“நான் எவ்வளவு பெரிய பொண்ணு.. இது கூட எனக்கு தெரியாதா…? அக்கட சூடண்டி ..”என்று அவள் சொன்ன திசையில் அனைவரும் பார்க்க, வேலைக்கார பெண்மணி வந்து கொண்டிருக்க,  மதியை கேள்வியாய் பார்த்த கதிரிடம் கண் சிமிட்டி சிரித்தாள் மதி.

வந்தவள் ஆரத்தி சுத்தி அவர்களை உள்ளே அனுப்ப அங்கிருந்து தங்களை பார்த்துக்கொண்டிருந்த வள்ளி, சண்முகம், பாட்டியை பார்த்தவாறே உள்ளே சென்றாள் சுந்தரி.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“தம்பி…!” என்று கதிரை அழைக்க,  “சொல்லுங்க அத்தை” என்றான் கதிர்.

“அம்மா.., அப்பாவை இங்க வரவேண்டாம்னு ஏன் சொன்னீங்க..?” என்று கேட்க

“எப்படி அத்தை… இப்படி…?” என்று வியந்தான்  கதிர்

“என் பொண்ணை பத்தியும் எனக்கு தெரியும்.. அவங்களை பத்தியும் எனக்கு தெரியும்”

“என்னை பத்தி மட்டும் தான் எதையும் தெரிஞ்சிக்க முடியல.. இல்லை அத்தை” என்று கதிர் கேட்க

மௌனமாய் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு “நான் போய் சின்னையாவை பார்த்துட்டு வந்திடுறேன் ராசாத்தி..” என்று சொல்லிவிட்டு நேராக கதிரின் வீட்டு வாசலில் நின்றவளை ஓடி சென்று கை பிடித்து உள்ளே அழைத்து சென்றாள் வள்ளி.

சில நொடிகள் அனைவர் மத்தியிலும் மௌனம் மட்டுமே குடிகொண்டிருக்க, “நடந்த எதை பத்தியும் யாரும் எதுவுமே பேச வேண்டாமே..! நான் கொஞ்ச நாளைக்கு இங்க…அவுட் அவுசுல இருக்கணும்னு நினைக்கிறேன்.. தங்கிக்கலாமா…?” என்று பாட்டியை பார்த்தபடி சுந்தரி பேச

“எதுக்கு மா நீ பெர்மிஷன் கேக்குற..? இது உன் பொண்ணு வீடு..” என்று முந்தி கொண்டு பேசினார் சண்முகம்.

“இருந்தாலும் பெரியவங்க சம்மதம் வேணும்னு நினைக்கிறேன் சின்னையா..” என்று இப்போதும் பாட்டியை பார்த்தபடி பேச

“ஏன்டா உன் சம்மந்திக்கு இப்போ தான் நான் பெரியவன்ற நினைப்பு வருதா..?, எவ்வளவு சொல்லியும் கேக்காம வீட்டை விட்டு போனப்போ..?, பணத்தை வாங்க மறுத்தப்போ..? நான் பெரியவன்னு தோணலையோ..?” என்று கேட்க

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "கலாபக் காதலா..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

ஒரு பெருமூச்சை வெளிவிட்டவள் “நான் தான் ஏற்கனவே சொல்லிட்டேனே மா.. நடந்து முடிஞ்ச எதையும் பத்தி நாம பேச வேண்டாமே..?!” என்று மீண்டும் நிதானமாக  சொல்ல ..,

“இதுவரைக்கும் என் உத்தரவை வாங்கிட்டு தான் எல்லாத்தையும் செஞ்ச மாதிரி இல்ல வந்து நிக்கிறாங்க எல்லாரும்…. இதை பாருடா என்னிக்கு இவ வீட்டு மகாராணியை, என் பேரனுக்கு கல்யாணம் செஞ்சு வெச்சேனோ.. அன்னிக்கே எனக்கும் இந்த வீட்டுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைன்னு ஆயிடுச்சு.. பெருசா கேட்க வந்துட்டா…” என்றவள் “என் குடும்பம் நல்லா இருந்தா சரி தான்… வேற என்ன பெருசா நான் ஆசை பட்டுட போறேன்..” என்று சலித்துக்கொண்டு உள்ளே சென்று விட

“அப்போ நான் வரேன்” என்று கிளம்ப சென்றவளிடம்…. “என் கிட்ட பேசவே மாட்டியா சுந்தரி?” என்று தழுதழுக்க கேட்டாள் வள்ளி

“உங்க கிட்ட பேசாம..? யார் கிட்ட பேச போறேன்..!, என் பொண்ணு, என் கண்ணு முன்னாடி இன்னிக்கு இவ்வளவு சந்தோஷமா இருக்காளே..! அதுக்கு முழு காரணம் நீங்க மூணு பேரும் தான..!” என்றவள் “நிறையா கத்துக்கிட்டேன் வள்ளிம்மா, எனக்கு யார் மேலயும் எந்த வருத்தமோ, கோபமோ, துளி கூட இல்ல. ஏன்? என் மேலயே கூட.., எனக்கு இப்போ வருத்தம் இல்லை” என்று புன்னகைத்தவள் “சரி நான் வரேன்… பிள்ளைங்க எனக்காக சாப்பிடாம இருப்பாங்க” என்று சொல்ல

“கதிர் தான்….. கொஞ்ச நாளைக்கு யாரையும் பார்க்க வந்து,  சங்கடப்படுத்த வேண்டாம்னு சொல்லியிருக்கான் சுந்தரி, அதான் நாங்க…” என்று தடுமாறிய வள்ளியிடம்

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7  8  9 
  •  Next 
  •  End 

About the Author

Prama Subbiah

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 33 - பிரேமா சுப்பையாNaseema Arif 2019-02-10 06:38
Mam,
Super😍😍😍😍, Aduthu enna twist vachurukeenga
Neenga evlo pages eluthinaalum just want read it more and more
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 33 - பிரேமா சுப்பையாsaaru 2019-02-08 22:38
Kathir kudutha shock work aguma
Dr eduku vandrukanga
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 33 - பிரேமா சுப்பையாmahinagaraj 2019-02-08 18:31
சூப்பர் மேம்... :clap: :clap:
கதிர் செம... :GL:
ராசாத்தி அற்புதமான கதாபாத்திரம்.. :GL:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 33 - பிரேமா சுப்பையாmadhumathi9 2019-02-08 17:39
Nice epi.egarly waiting 4 next epi. (y) :clap: :thnkx: 4 this epi. :GL: adutha epiyai eppothu padippom endru miga aavalaaga kaathu kondu irukkirom. (y) antha pudhu nabar yaar?
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 33 - பிரேமா சுப்பையாAdharvJo 2019-02-08 15:50
Ouch ethukku ippo Ila kadhir-i adichanga steam like mother like daughters Ena Oru ottrumai, indha honey kadhir-i ippadi nondhu noodles aga vitutangale facepalm sundari aunty sonna mathiri Vera reason irukkumo?? Ranganayagi-in vijayam etharkkama?? Madhi Oda looty super :dance: thy love each other :yes: (yes enakkitta ivangala vandhu sonnanga 😂😂😜) serthu vaipingala matingala?? Entertaining and emotional epi ma'am 👏👏👏👌 look forward to read next update. Thank you n keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 33 - பிரேமா சுப்பையாSahithyaraj 2019-02-08 15:11
Yaar avanga. Naan miss pannitena :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 33 - பிரேமா சுப்பையாSAJU 2019-02-08 14:05
wow super ud sis
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top