(Reading time: 12 - 24 minutes)

இவங்க என்ன தான் எதிர்பாக்குறாங்க?மூணு வயசுலயே பிள்ளைங்க பத்து பதினஞ்சு வயசு அளவுக்கு மெச்சூர்டா இருக்ணும்னு சொல்றாங்களா?நம்மளை மூணு மணிநேரம் ஒரு இடத்துல அமைதியா உக்கார சொன்னா நம்மாளால  முடியுமா?இதுல பிள்ளைங்க மேல இத்தனை கம்ப்ளைண்ட் ஒண்ணும் சொல்துக்கு இல்ல.

நல்ல ஸ்கூல்னு அடிச்சு பிடிச்சு சீட் வாங்குறோம் அப்போ அவங்க சொல்றதெல்லாம் கேட்டுதான் ஆகணும்.நம்ம பிள்ளையோட ஒரு சீட்டுக்கு அம்பது பேர் காத்துட்டு நிக்குறான் அந்த தைரியம் தான்..வேற என்ன சொல்ல முடியும்..வரேன்ங்க”,என்றவர் எழுந்து செல்ல அவர் கூறுவதின் உண்மை ரொம்பவே புரிந்தது மதுவிற்கு.

வீட்டிற்கு வந்து ஸ்ரீகாந்திடம் புலம்பியவள் மகளை அழைத்து பேச ஆரம்பித்தாள்.ஆனால் அந்த வாண்டோ எதையும் காதில் வாங்காமல் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்க கோபம் வந்தவளாய் மகளைத் திட்டித் தீர்த்தாள்.

அந்நேரம் அங்கு வந்த ஸ்ரீகாந்த் மகளை கையில் தூக்கிக் கொண்டு மகளிடம்,”அம்மாக்கு வேற வேலையே இல்ல செல்லம்..நீ வா நாம விளையாட போலாம்.”

“ஸ்ரீகா ஆயிரம் தடவை சொல்லிட்டேன் இப்படி பண்ணாதனு அவ கொஞ்சம் பயப்படுறதே எனக்கு மட்டும் தான் அதையும் இப்படி பண்ணா உருப்பட்டா மாதிரிதான்.”

“சும்மா புலம்பாத மது நீ கண்டிக்குறதை பார்த்தா எதோ பத்து வயசு குழந்தையை திட்டுற மாதிரி இருக்கு..அதுக்கெல்லாம் காலம் இருக்கு சும்மா உன் கடுப்பை அவகிட்ட காட்டாத..”

மதுவிற்கோ ஐயோவென்று இருந்தது.இது எப்போதும் நடக்கும் ஒன்றுதான்.மகளை ஒரு வார்த்தை கூற விடமாட்டான் ஸ்ரீகாந்த்.மனைவியின் செயலில் நியாயம் இருந்தாலும் அவளைத் தான் திட்டுவான்.இப்படி பல பல போராட்டங்களோடு நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது.

அன்று பள்ளி ஆண்டு விழாவென மது ஸ்ரீகாந்த் இருவருமே சென்றிருந்தனர்.சிறப்பு விருந்தினராய் உளவியல் மருத்துவர் ஒருவர் தனது உரையை ஆரம்பித்தார்.பொதுப்படையான விஷயங்களை சில நிமிடங்கள் பேசிவிட்டு குழந்தை வளர்ப்புப் பற்றி கூற ஆரம்பித்திருந்தார்.

“இன்னைக்கு கால கட்டத்துல இருக்குற டப்பஸ்ட் ஜாப் என்னனு கேட்டா குழந்தை வளர்ப்பு தான்.ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதம் தான் ஆனா அவங்களை நேர்வழிப் படுத்த வேண்டிய நமது கடமை குழந்தையோட மூணு மாசம் குறைஞ்சபட்சம் ஆறுமாசத்துல இருந்து ஆரம்பிக்குது.

கேட்குறதுக்கு சிரிப்பா இருந்தாலும் இதுதான் உண்மை.முதல் பாடம் அவங்களுக்குத் தெரிய வேண்டியது என்ன தெரியுமா இந்த உலகத்துல நாம நினைக்குற எல்லா பொருளும் நமக்கு கிடைக்காது.

என்ன பாக்குறீங்க இதுதான் மிக முக்கியமான பாடமே!!உங்க குழந்தை ஒரு விஷயத்துக்காக அழ ஆரம்பிக்குதுனு சொன்னா அதுதான் அவர்களின் முதல் ஆயுதம்.அதை பார்த்து கரைஞ்சு அவங்க கேட்குறதை கொடுக்குற பெற்றோர் தான் அதிகம்.

ஆரம்பத்துல சாதாரணமா ஆரம்பிக்குற அந்த அழுகை நாளடைவில் அவங்களுக்கான பிரம்மாஸ்திரம்.எந்த சூழலில் எப்படி அழுதா தன் காரியம் நடக்கும்னு நால்லா புரிஞ்சு வச்சுகிட்டு அப்படி அந்த அழுகையை பயன்படுத்துவாங்க.சோ பிள்ளைங்க ஏமாற்றம் அடைஞ்சுற கூடாதுனு நினைச்சு அவங்க கண்ணீர்ல பெத்தவங்க நீங்க தான் ஏமாந்துட்டு இருப்பீங்க.

இன்னொரு முக்கியமான விஷயம் பல வீடுகள்ளையும் நடக்குறதுனு பார்த்தா அப்பா இல்ல அம்மா யாரோ ஒருத்தர் கொஞ்சம் கண்டிப்பா இருப்பாங்க.கட்டுப்பாடோட வச்சுக்கணும்னு நினைப்பாங்க.அப்படி இருக்கும் போது இரண்டில் இன்னொருத்தங்க இருக்காங்க பாருங்க அவங்க எப்படி பிகேவ் பண்ணுவாங்கனா,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிரேமாவின் சுப்பையாவின் "உன்னில் தொலைந்தவன் நானடி..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

தான் கண்டிக்கலைனாலும் பரவால்ல ஆனா கண்டிக்குறவங்களையே மட்டம் தட்டிட்டு போய்டுவாங்க.அம்மா தர மாட்டேன்னு சொல்லிட்டாளா பரவால்ல செல்லம் நா உனக்கு வாங்கித் தரேன்னு அப்பா அப்படியே அன்பை பொழியுவார்.

ஏங்க பிள்ளை ஆசைப்பட்டா வாங்கிக் கொடுங்களேன் ஆனாலும் ரொம்பதான் டார்ச்சர் பண்றீங்கனு அம்மாவும் பசங்கிட்ட நல்லபேர் எடுத்து தன் துணையை செல்லாகாசா ஆக்கிடுவாங்க பல நேரத்துல.

ஒரு பொருளை வாங்குறதுக்கு முன்னாடி அது ஒரு ரூபா மிட்டாயோ ஐம்பது ரூபாய் பொம்மையோ தேவையா இல்லையா உடனே வாங்கியே தீரனுமானு யோசிச்சு வாங்கிக் கொடுக்குறதுல எந்த வித தப்பும் கிடையாது.இப்போ வேண்டாம் கண்ணா ரெண்டு நாள் கழிச்சு வாங்கித் தரேன்னு சொல்லும்போது அதை ஏத்துக்க கூடிய மனபக்குவத்தை பிள்ளைங்களுக்கு வளர்க்கணுமே ஒழிய நினைச்ச அத்தனையும் தேவைக்கு அதிகமாகவே அடுத்த நொடி கிடைக்கும்னு எண்ணம் வளர விடக்கூடாது.”,

என்றவர் இடத்தில் அமர்ந்த பின் மது ஸ்ரீகாந்தை ஓரப்பார்வை பார்த்தாள்.

“முறைக்காத டீ நா பண்றதெல்லாம் தப்பு தான் இருந்தாலும் ஐஷு எதையாவது கேட்டு நோனு சொல்லவே முடில.இதுல எப்படி அவளை நா கண்டிச்சு வளர்க்குறது.சரி இனி அட்லீஸ்ட் நீ எதாவது சொன்னா நா குறுக்கே வந்து உன்னை திட்டாம இருக்கவாவது நிச்சயம் ட்ரை பண்றேன் போதுமா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.