Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 46- சித்ரா. வெ - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 46 - சித்ரா. வெ

Nenchodu kalanthidu uravale

ரவு வீட்டிற்குச் சென்ற கதிரவன் பொதுவாக மூவருக்கும் தெரியும்படி, “அங்க மாமா வீட்ல ஒரு சின்னப் பிரச்சனை.. அதனால அம்மா அங்கேயே இருக்க வேண்டியதா போச்சு.. காலையில் வந்துடுவா.. அப்பா ரூம்ல தான் இருப்பேன் போய் தூங்குங்க..” என்று கூறினார்.

தமிழும் புவியும் தந்தை சொன்ன அடுத்த நொடி, என்ன ஏதென்று கேட்காமல் போய் படுத்துவிட்டனர். அவர்களே கேட்கவில்லையென்றால்  சுடர் மட்டும் அவரிடம் எப்படி கேட்பாள். அவளும் அவர்கள் சென்ற அதே நேரம் தனது அறைக்கு வந்துவிட்டாள். ஆனால் அங்கே நடந்தது என்ன என்று அவளுக்கு தெரிந்துக் கொள்ள வேண்டியிருந்தது.

முதலில் மகிக்கு தொடர்புக் கொண்டு விஷயத்தைக் கேட்கலாமா? என்று நினைத்தவள், பின் அப்படி வேண்டாமென்று முடிவு செய்து அமுதனுக்கே தொடர்புக் கொண்டாள். மாலையிலிருந்து அவனிடம் பேச நினைத்து தொடர்பு கொள்ள முடியாமல் போகவே தான், பின் முயற்சிக்காமல் அப்படியே விட்டுவிட்டிருந்தாள்.

அதனால் இப்போதாவது அழைப்பை ஏற்கிறானா? என்று முயற்சித்து பார்க்க நினைத்தாள். அமுதனும் அழைப்பை ஏற்றிருந்தான். அவள் தான் அழைத்திருக்கிறாள் என்று தெரிந்ததும்,  அவளை பேச விடாமல்,

“சுடர்.. அருள், மகி கல்யாணத்தை பத்தி தானே அருள்க்கிட்ட பேச போறாங்கன்னு சொன்ன.. இப்போ அருளை யாரோ பொண்ணுப் பார்க்க வந்திருக்காங்கன்னு சொல்றாங்க..” என்று எடுத்ததும் இந்த கேள்வியை தான் கேட்டான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அது எனக்கும் முன்ன தெரியாது சார்லி.. இப்போ சித்தி அங்க கிளம்பும் போது தான் சொன்னாங்க..”

“அப்போ ஏன் உடனே எனக்கு சொல்லல..”

“எங்க உனக்கு லைன் கிடைச்சா தான.. முதலில் நாட் ரீச்சபிள்னு வந்துச்சு.. கொஞ்ச நேரம் கழிச்சு ட்ரை பண்ணா ஃபுல் ரிங் போய் கட்டாகுது.. அப்புறம் உனக்கு எப்படி சொல்ல, ஆமாம் ஈவ்னிங் மேல தானே உன்னை அருளை கூட்டிக்கிட்டு வெளியே போகச் சொன்னேன்.. நீ சீக்கிரம் போயிட்ட போல..”

“ஆமாம் அருள் பொண்ணு பார்க்க விஷயமா எதுவும் சொல்லல.. ஆனா ஈவ்னிங் வீட்டுக்கு போகணும்னு மட்டும் சொன்னா.. அதான் சீக்கிரமா கிளம்பிட்டோம்..”

“அப்புறம் என்ன அருளை ஈவ்னிங் வீட்ல விட்டுட்டியா? இங்க அப்பா ஏதோ பிரச்சனைன்னு சொல்லிக்கிட்டு இருக்காரு..”

“இல்லை டைம்க்கு போக முடியல.. அதுக்கு முன்ன வேற ஒரு ப்ராப்ளம்..” என்றவன், நடந்த அனைத்தையும் அவளிடம் கூறினான்.

“ஓ இதுதான் பிரச்சனையா. இப்போ அருளை வீட்டுக்கு கூட்டிட்டு போயாச்சுல்ல.. அப்புறம் என்ன?”

“ம்ம் ஒன்னும் ப்ராப்ளம் இல்லை தான்.. ஆனா பொண்ணு பார்க்க வந்தவங்க ஏதோ தப்பா பேசிட்டாங்கன்னு மகிழ் சொல்லிக்கிட்டு இருந்தான்.

“ஓ அப்படியா? ஆனா பொண்ணு பார்க்க வரும்போதே தப்பா பேசியிருக்காங்கன்னா.. அவங்க அவ்வளவு  நல்லவங்க இல்லை தானே, அருள்க்கும் இப்போ மேரேஜ்ல இன்ட்ரஸ்ட் இல்லை போல.. அதான் அந்த மேட்டரை அவவளவு அவசரமா உன் கிட்ட நான்சொல்லலை.. சரி எல்லாம் நல்லதுக்கேன்னு எடுத்துப்போம்..” என்று சாதாரணமாக சொல்லிவிட்டு வைத்துவிட்டாள்.

ஆனால் அவளுக்கும் அமுதனுக்கும் சாதாரணமான ஒன்று மற்றவர்கள் பார்வைக்கு அப்படியில்லை என்பதை அவர்கள் உணரவில்லை.

ஏற்கனவே அமுதனிடம் விஷயங்களை தெரிந்துக் கொண்டதால் காலையில் எழில் வீட்டுக்கு வந்தபோதும் சுடருக்கு அவளிடம் கேட்க எதுவுமில்லாமல் போனது.

ஆனால் அன்று மாலையே புகழேந்தியும் பூங்கொடியும் வீட்டுக்கு வர, இவர்கள் எதற்கு வந்திருக்கிறார்கள் என்று புரியாமல் சுடர் குழம்பினாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "உன்னாலே நான் வாழ்கிறேன்..." - காதல் கலந்த குடும்பத் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

அவள் மட்டுமல்ல கதிர், எழில் அவர்களுக்குமே இருவரும் எதற்கு வந்திருக்கிறார்கள் என்பது புரியவில்லை. நேற்று தானே அங்கே வீட்டில் சந்தித்துக் கொண்டார்கள். அதிலும் எழில் காலையில் தானே கிளம்பி வந்தாள். அதனால் அவர்கள் வருகையே ஏதோ பிரச்சனை போல் என்பதாக இருவருக்கும் தோன்றியது.

“என்ன சார் நேத்து சம்பவத்தால அங்க ஒன்னும் பிரச்சனையில்லையே..” என்று கதிர் கேட்க,

“அக்கா நேத்தே அருளை அடிச்சாங்க.. காலையில் கூட அவங்க கோபமா இருந்தாங்க.. நான் கிளம்பினதுக்கு அப்புறம் ஏதாவது பிரச்சனையா ண்ணா..” என்று எழிலும் கேட்டாள்.

“கலையை பத்தி நமக்கு தெரிஞ்சது தானே, பொண்ணுங்களை பொத்தி பொத்தி வளர்க்கணும்னு நினைப்பா, அப்படியிருக்க அருள் இப்படி ஒரு பையனோட வெளிய போனா அவ அமைதியா போனா தான் அதிசயம்..” என்று பூங்கொடி சொல்ல, காலையில் நடந்ததை இருவருமே கதிர், எழிலிடம் கூறினர்.

இதற்காக இப்படி ஒரு முடிவா எடுப்பார்கள் என்பது தான் அந்த நேரம் கதிரும் எழிலும் நினைத்தார்கள்.

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

About the Author

Chithra V

Like Chithra Venkatesan's stories? Now you can read Chithra Venkatesan's full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
  • NA
Add comment

Comments  
# RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 46- சித்ரா. வெsaaru 2019-02-14 15:33
Nice update
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 46- சித்ரா. வெmahinagaraj 2019-02-09 15:38
சூப்பர் மேம்... :clap: :clap:
:thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 46- சித்ரா. வெAdharvJo 2019-02-09 13:16
CHithra ma'am ninga plan pana mathiri pawn move panuringa apro ippadi move seithu irundhal indha prichanai varamal irukkun solluringale ji facepalm Aniyayam!! Charles hero-va irukka vida matingale :sad: pavam prince. interesting update ma'am :clap: :clap: Indha baby sudar innum valaranum pa :yes: :P Finally we can end the FB next week :dance: naa keta mathiri happy epi marakudadhu ;-) curious to read the next update. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 46- சித்ரா. வெSAJU 2019-02-09 12:26
Nice ud sis
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 46- சித்ரா. வெPadmini 2019-02-09 11:45
nice update Chtra!!
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 46- சித்ரா. வெmadhumathi9 2019-02-09 11:41
:clap: nice epi.egarly waiting 4 next epi. (y) :thnkx: 4 this epi.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top