(Reading time: 10 - 20 minutes)

தொடர்கதை - தாரிகை - 28 - மதி நிலா

series1/thaarigai

வெற்றியும் பரத்வாஜும் சிந்தனைகளுடன் தாரிகையின் பள்ளி முதல்வரின் எதிரே அமர்ந்திருக்க.. முதல்வரின் முகத்தில் எப்படி ஆரம்பிப்பதென்ற யோசனை..!!

“சார் எதுவா இருந்தாலும் சொல்லுங்க சார்..”, வெற்றிதான் அவரை பேசத்தூண்டியிருந்தான்..!!

“வெற்றி.. நடந்தது எல்லாம் கேள்விப்பட்டிருப்பீங்கனு நினைக்கறேன்..”, என்றவர் மெதுவாக வார்த்தைகளை மனதில் கோர்த்தபடி, “தரண்யனோட படிக்கற பிள்ளைங்க சில பேர் அவங்க அப்பா அம்மாவைக் கூட்டிட்டு வந்திருந்தாங்க..”, இன்னுமே தயக்கம் அவருக்கு.. உண்மையின் அவர் செயல்படுத்திக்கொண்டிருக்கும் விஷயம் அவருக்கே பிடிக்காத ஒன்றுதான்.. இருந்தும் என்ன செய்ய.. மேலிடத்துப் பிரஷர்..!!

“கேள்விப்பட்டோம் சார்..”, வரபோவது என்னவென்று ஒரு யூகிப்பு இருந்தாலும் அவரே சொல்லட்டும் என்ற பாவனையில் பரத்வாஜ் சொல்ல.. நேரடியாகவே விஷயத்திற்கு வந்திருந்தார் முதல்வர்..

“தரண்யனை இதுக்குமேல இங்க வெச்சுக்க முடியாது மிஸ்டர் பரத்வாஜ்.. அவங்ககூட படிக்கற பிள்ளைங்க மட்டுமல்ல அவங்க பேரென்ட்ஸும் பயப்படறாங்க..”, என்றவர் இருவர் முகத்தையும் ஆராய்வதுபோல் பார்த்திட.. இரெண்டும் சலனங்கள் இல்லாததாய்..!!

“இப்ப நாங்க அவளுக்கு டிசி வாங்கனும்.. அதானே சொல்ல வந்தீங்க..??”, கோபம் வழிந்திட வெற்றி கேட்டிட..

“இல்லை வெற்றி.. நான் கரெச்பாண்டேன்ட்க்கிட்ட பேசிட்டேன்.. எக்ஸாம்ஸ் எழுதலாம்.. பட் கிளாஸ் அட்டென்ட் பண்ண முடியாது..”

“அது எப்படி சார் கிளாஸ் எதுவும் அட்டென்ட் பண்ணாம எக்ஸாம்ஸ் எழுதறது..??”, இதுக்கு நீங்க டிசி கொடுத்திருக்கலாம் என்பதுபோல் இருந்தது பரத்வாஜின் வார்த்தைகள்..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“எனக்கு உங்க நிலைமை புரியுது பரத்வாஜ்.. பட் நாங்க ஒரு குழந்தைக்கு மட்டும் பார்க்க முடியாதே.. ஏற்கனவே உங்க பையனால அவன் கிளாஸ் ரெண்டா பிரிஞ்சு கெடக்கு.. எங்க நிலையம் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க..”, தன்மையாகவே..

“நாங்க என்ன சொல்லனும்னு எதிர்பார்க்கறீங்க சார்..?? நீங்க சொல்றதுக்கெல்லாம் ஓகே சொல்லனும்னா..??”, வெற்றியேதான்..

“வெற்றி.. ஓகே சொல்றதும் சொல்லாததும் உங்க விருப்பம்.. ஆனா இதுக்குமேல உங்க பிள்ளையை இங்க வெச்சிருக்க எங்களால முடியாது..”, இழுத்துப்பிடித்திருந்த பொறுமையெல்லாம் பறந்திருந்தது முதல்வருக்கு..

“வெற்றி என்னதிது..?? எதுக்கு கோபப்படற இப்போ..?? இவர் இல்லைன்னா தாருவும் சரி நிஷாவும் சரி.. ஸ்கூலுக்குள்ள நுழைஞ்சிருக்க முடியாது.. ஆர்க்யூ பண்றதை நிறுத்து..”, வெற்றியை கடிந்துகொண்டவர், “ஐ ஆம் சாரி சார்..”, என்றிருந்தார்..

“தட்ஸ் ஓகே பரத்வாஜ்.. என்னால உங்க எமோஷன்ஸை புரிஞ்சக்க முடியுது.. நீங்க ரெக்வஸ்ட் செஞ்சு கேட்டதாலதான் உங்க இரண்டு பசங்களையும் சேர்த்துக்கிட்டேன்.. ஏதோ என்னால முடிஞ்சது.. பட் இதுக்கு மேல உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியுமான்னு தெரியல..”

“உங்க நிலைமை புரியுது சார்.. இனி தாருவை ஸ்கூல் மாத்திப் படிக்க வைக்கறது ரொம்ப கஷ்டம்.. சேர்த்துக்கவும் மாட்டாங்க யாரும்.. எக்ஸாம்ஸ் மட்டும் எழுத அலவ் பண்ணுங்க.. நாங்க வெளிய ஏதாவது தனியா சொல்லிக்கொடுக்கற மாதிரி அரேஞ் பண்ணிக்கறோம்..”, என்ற பரத்வாஜ், “சார்.. நிஷா.. நிஷாந்த்..??”, மெதுவான குரலில்..

“நிஷாந்தைப் பற்றிக் கவலை இப்போதைக்கு வேண்டாம் பரத்வாஜ் உங்களுக்கு.. அவனைப் பற்றிய உண்மை என்னைத் தவிர வெளியே தெரியாது யாருக்கும் இதுவரைக்கும்.. அவனும் ஒரு பையனாத்தான் பீகேவ் பண்றான்.. படிக்கட்டும் அவன்..”, சமாதானமாய்..

“தாங்க்ஸ் சார்..”, ஒருவித நெகிழ்வு பரத்வாஜரிடம்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா வெயின் "நெஞ்சோடு கலந்திடு உறவாலே..." - காதல் கலந்த குடும்பத் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“அதுனால என்ன சார் பரவாயில்லை.. தரண்யன் விஷயத்துல என்னால் எதுவும் செய்ய முடியல.. பட் நிஷாந்த்.. பார்த்துக்கலாம்.. அவனைப் பற்றி யாருக்கும் எந்த விஷயமும் தெரியாத வரை என்னால அவனைப் பார்த்துக்க முடியும்..”, என்றவர் இருவருக்கும் விடைகொடுத்திருந்தார்..!!

“என்க்கூட பேசமாட்டாங்களாம்.. ஆனால் எனக்கு ஒண்ணுன்னா வரிஞ்சு கட்டிட்டு வருவாங்களாம்..”, தாரிகையின் மனதிற்குள் புன்னகையே..!!

அவளுக்குத் தன்னை பள்ளியில் இனி சேர்த்துக்கொள்ளமாட்டார்கள் என்று அறிந்தபின் பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை.. அங்கு செல்வதற்கு வீட்டிலேயே இருந்துவிடலாம் என்ற நினைப்பு அவளுக்குள்..!! சிறிது கால அவகாசம் தேவைப்பட்டது அவளுக்கு..!!

படிப்பில் இருக்கும் பிடிப்பும் வெற்றியின் துணையும் எப்படியாது தன்னால் படித்துவிட முடியும் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்படுத்தியிருக்க.. பள்ளிக்குச் செல்லாதது ஒருவகையில் நன்மைக்கே என்பதாய் ஒரு எண்ணம்..!!

வாழ்க்கை எனும் நதியோட்டத்தில் கடந்துசெல்லும் முற்களும் கற்களும் அனைத்தும் ஒரு பாடமே..!! தாரிகையின் வாழ்க்கையும் அப்படியே..!! நிறைய முற்கள் கற்கள்..!! எல்லாம் சிறு சிறு தடைகளே..!! சீற்றத்துடன் பொங்கு எழும் நதிநீரைப்போல் அவள் எழுந்து நடந்தால் அனைத்தும் சுக்குநூற்தான்..!! எழுவாள் அவள்..!! காலங்கள் பிடிக்கலாம்..!! ஆனால் அது தன்னைத்தானே அவள் செதுக்க எடுத்துக்கொள்ளும் காலம்..!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.