(Reading time: 8 - 16 minutes)

“நாங்க எவ்வளவு சொன்னாலும் கலை புரிஞ்சிக்கிறதா இல்ல.. ஏற்கனவே அருளுக்கு சீக்கிரம் கல்யாணத்தை செய்ய நினைக்கிறா.. இப்போ நேத்து நடந்த விஷயத்துக்கு இன்னும் சீக்கிரம் கல்யாணத்தை முடிக்க தான் நினைப்பா..

திரும்பவும் வேற ஒரு வரன் பார்க்கும் போது, கலை சொல்றது போல அவளோட நாத்தனார் மாப்பிள்ளை வீட்ல தப்பா சொல்ல மாட்டான்னு என்ன நிச்சயம்.. என்னத்தான் கலை எதிலுமே அவசரம்னு இருந்தாலும், அவ சொல்ற சில விஷயம் உண்மை தானே, நம்ம பொண்ணை பத்தி நமக்கு தெரியும்.. ஆனா அதுக்காக மத்தவங்க தப்பா பேசற சூழ்நிலையை உருவாக்கலாமா?

எப்படியோ ஒரு நல்ல வரனா பார்த்து அருளுக்கு கல்யாணம் செய்யணும்.. அது ஏன் அமுதன் தம்பியாகவே இருக்கக் கூடாது..” என்று பூங்கொடி பேசினார்.

“அமுதனை உங்க மூலமா தான் எங்களுக்கு தெரியும்.. அதனால முதலில் நீங்க உங்க விருப்பத்தை சொல்லணும் கதிர்..

அதுமட்டும் இல்லாம, அமுதன் உங்க ப்ரண்டோட பையன், சுடருக்கும் நல்ல ப்ரண்ட்.. அதனால உங்களுக்கு அவங்க ரெண்டுப்பேருக்கும் கல்யாணம் செஞ்சு வைக்கிற எண்ணம் இருக்கா..” என்று புகழேந்தி கதிரை பார்த்துக் கேட்க,

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

இன்னமும் மகளையே மனதார கதிர் ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படியிருக்க அவள் திருமணத்தை பற்றியெல்லாம் அவர் எங்கே யோசித்து வைத்திருப்பார். அதனால் புகழின் கேள்விக்கு அவர் பதில் சொல்ல தயங்க,

தந்தை இருப்பதால் அவர்கள் வந்ததும் வரவேற்றதோடு சரி, அதன்பின் தன் அறைக்கு சென்றவள் தான், பின் வெளியே வராமல் அறைக்குள்ளேயே இருந்தாலும், வெளியில் என்ன பேசுகிறார்கள் என்பதை கேட்டுக் கொண்டிருந்த சுடர்,

“என்ன மாமா இப்படியெல்லாம் கேக்கறாங்க..” என்று நினைத்தாள்.

“யாரை பார்த்து இப்படி ஒரு கேள்வி கேக்கறாங்க பார்..” என்பது போல் மனதில் நினைத்த எழிலோ,

“இல்லண்ணா.. நான் முன்னயே ஆனந்திக்கிட்ட இதைப்பத்தி பேசிட்டேன்.. அமுதனும் சுடரும் நல்ல ப்ரண்ட்ஸ் தான், அதில்லாம அவங்க அண்ணன் தங்கை போல தான் பழகுறாங்க.. மத்தப்படி நீங்க சொல்றது போல எண்ணம் எங்க யாருக்குமே கிடையாது..” என்று தெளிவாக கூறிவிட்டாள்.

“அப்போ அருளுக்கு அமுதனை பார்க்கிறதுல உங்களுக்கு விருப்பம் தானே கதிர்..” என்று புகழேந்தி கேட்டார்.

“எனக்கு இதுல என்ன பிரச்சனை இருக்கப் போகுது.. அமுதன் நல்ல பையன் தான், நம்பி அருளை கொடுக்கலாம்.. இதுல எங்களுக்கு சம்மதம் தான்..” என்றவர்,

“உங்க எல்லோருக்கும் விருப்பம் இருக்குன்னா, அப்போ ஆனந்திக்கிட்ட பேசிடவா..” என்றுக் கேட்டார்.

“அய்யோ இப்போ வேண்டாம்.. சாதாரணமா கல்யாணத்துக்கு வரன் பார்க்கிறதா இருந்தா அவங்கக்கிட்ட முதலில் பேசியிருக்கலாம்.. ஆனா நேத்து நடந்த சம்பவத்தை குறித்து இந்த முடிவுங்கிறதால, முதலில் அவங்கக்கிட்ட பேசி அவங்களை கலங்கடிக்க வேண்டாம்..

முதலில் அமுதன் தம்பியை கூப்பிட்டு பேசுவோம்.. அந்த தம்பிக்கும் முழு சம்மதம்னா அப்புறம் அவங்க அம்மாக்கிட்ட பேசலாம்..” என்று புகழேந்தி கூறினார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

குருராஜனின் "எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

ஒருவேளை கதிர் சொன்னது போல் முதலிலேயே ஆனந்தியிடம் பேசியிருந்தால், அடுத்தடுத்து நடக்க இருந்தது தவிர்க்கப்பட்டிருக்குமோ என்னவோ, ஆனால் புகழேந்தி கூறியதை அப்படியே ஏற்றுக் கொண்ட கதிர், அமுதனிடம் பேசி ஒரு குறிப்பிட்ட நாளை சொல்லி புகழேந்தி வீட்டுக்கு வரச் சொன்னார்.

மகி, அருள் திருமண பேச்சை தவிர்ப்பதற்காக சுடர் செய்த ஒரு சின்ன காரியம் அமுதனோடு அருளை வெளியே அழைத்து செல்ல சொன்னது. இதனால் நடக்கவிருப்பது என்ன என்பது அவளுக்கு தெரியாது. ஆனால் கலையின் குணம் அறிந்து மட்டுமே இதை செயல்படுத்தினாள்.

அதற்கேற்றார் போல் அவளும் அமுதனும் எதையும் செய்யாமலேயே தானாக என்னென்னவோ நடந்து, இப்போது அதன் முடிவு அமுதன் அருள் திருமணம் என்ற புள்ளியில் வந்து நின்றது.

அறையிலிருந்து அவர்களது பேச்சை முழுமையாக கேட்ட சுடருக்கு அந்த முடிவு மகிழ்ச்சியை தான் கொடுத்தது. அருள் மகியை திருமணம் செய்யாமல் இருக்க வேண்டும் தான், ஆனால் அதற்காக அவளுக்கு ஏதோ ஒரு வாழ்க்கை அமைந்தால் நல்லது என்பது சுடரின் எண்ணம் இல்லை.

ஆனால் அதுவே அருள் அமுதனை திருமணம் செய்துக் கொண்டால், இனி மகி, அருள் திருமணப் பேச்சும் எழும்பாது. அமுதனும் அருள்மொழியும் நல்ல ஜோடி என்பதாக தான் சுடர் நினைத்தாள். இனி மகியை சேர அவளுக்கு எந்த தடையும் இல்லை. அதற்காகவே அமுதன் அருளை மணந்துக் கொள்வான் என்று தவறாக கணக்கிட்டாள்.

இன்று சின்ன அப்டேட் தான் ப்ரண்ட்ஸ்.. அடுத்தவாரம் பெரிய அப்டேட் தருகிறேன்.. அதோடு ப்ளாஷ்பேக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவோம். நன்றி.

உறவு வளரும்...

Episode # 45

Episode # 47

Go to Nenchodu kalanthidu uravale story main page

{kunena_discuss:1155}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.