(Reading time: 12 - 24 minutes)

“ம்ம் சொல்றது பெருசில்ல செயல்படுத்தனும் ஸ்ரீகா..இப்போ காலம் அப்படி இருக்கு மொபைல் டீவினு தேவைக்கு அதிகமான அறிவு வளர்ச்சி இருக்கு குழந்தைங்களுக்கு அப்படியிருக்கும் போது பார்த்து பக்குவமா தான் நடந்துக்க வேண்டியதா இருக்கு..புரிஞ்சுக்கோ இப்போ கண்டிக்காம விட்டுட்டு 12-13 வயசுல வந்துட்டு என் பேச்சை கேட்க மாட்றானு நீ சொல்ல முடியாது.அந்த வயசுல அட்வைஸும் அதட்டலும் ரொம்பவே தப்பான விஷயமா ஆய்டுச்சு..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

14-15 வயசுல தற்கொலை பண்ற தைரியமெல்லாம் நமக்கு வந்துருக்குமா அதுவும் சாதாரணமா ஒரு பரீட்சையில் பெயில் ஆகுறதுக்கு..இப்போ இருக்குற பசங்களுக்கு யாரும் அவங்களை கண்டிக்கவும் கூடாது அதே நேரம் தோல்வியையும் அவங்களால ஏத்துக்க முடியாது.

பெத்தவங்க அதிலும் அம்மாக்களின் நிலைமைதான் ரொம்ப மோசமா இருக்கு..ம்ம் மூணு வயசு பொண்ணை வச்சுருக்க மாதிரியா கவலைப் பட வேண்டியதா இருக்கு ஏதோ வயசுக்கு வந்த பொண்ணு இருக்குற மாதிரி புலம்புறேன்.என்னவோ போ பசங்க படிச்சு ஒரு நிலைமைக்கு வர்றதுக்குள்ள நாம ஒரு வழி ஆய்டுவோம் போல..” 

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "கலாபக் காதலா..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

இன்றைய தினத்தில் வேலைக்குச் செல்லும் அல்லது வீட்டில் இருக்கும் ஒவ்வொரு தாயின் நிலைமையும் இப்படியான ஒரு தர்மசங்கட நிலைதான்.குடும்ப சூழல் பணத்தேவை அல்லது தன்னுடைய தனித்தன்மைக்காக செய்யும் எந்தவொரு வேலையும் குடும்பத்தினரால் முழு மனதோடு ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை பல நேரங்களில்.

அவர்களின் பாராட்டுக்களும் பணமும் மனதிற்கு நிறைவை கொடுத்தாலும் குடும்பத்தில் எழும் சிறு பிரச்சனையோ குழந்தை எதாவது சிறு தவறு செய்தாலோ அதற்கு முழு காரணமும் தாய் மட்டுமே என்றாகிவிடுகிறது.

சுயத்திற்கான பெண்களின் தேடல் இன்றைய காலகட்டத்தில் முடிவே இல்லாதது அப்படியிருக்க அவர்களுக்கான ஒத்துழைப்பை குடும்பத்திடம் அன்றி யாரிடம் அவர்கள் எதிர்பார்த்திட முடியும்.

அதுமட்டுமல்லாது இது போன்ற சிறு சிறு விஷயங்கள் தான் ஸ்ட்ரெஸ் டிப்ரஷன் என பலபல மனஉளைச்சலின் உச்சத்திற்கு அவர்களை அழைத்துச் செல்கிறது.

ஒட்டுமொத்த குடும்பமும் ஆதரவு தரும் என்று எதிர்பார்ப்பதில் சாத்தியம் இல்லை எனினும் அதிகபட்சமாக தன் கணவன் தன்னை உணர்ந்து புரிந்து ஆதரவு அளித்தாலே போதும் என்பதுதான் பல பெண்களின் ஏக்கமாய்  இருக்கிறது.

குடும்பத்தலைவியின் பொறுப்பு என்பது  ஒரு நாளில் அத்தனை அதிகம் அப்படியிருக்க அவர்களுக்கான நேரம் என்பதை ஒதுக்கும் போது  அது கொடுக்கும் உற்சாகம் அவர்களின் ஒவ்வொரு செயலிலுமே பிரதிபலித்து குடும்ப உறுப்பினர்களின் மகிழ்ச்சிக்கு நிச்சயம் வழிவகுக்கும்.

இயந்திர தனமான வாழ்க்கை முறை ஆரோக்கியமற்ற உணவுகள் அவசர உலகம் என காலம் எப்படியோ மாறிவிட்டது.குடும்ப உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து முகம் கொடுத்து பேசும் பொழுதுகளே அரிதாகிப் போய்விட்டது.அப்படியிருக்க அதிலும் சண்டை சச்சரவு கோபம் அழுகை மன அழுத்தம் என இருக்கும் நாட்களை ஏன் நரகமாக்கிக் கொள்ள வேண்டும். இதெல்லாம் சொல்வது எளிது செயல்படுத்துவது கடினமே..ஆனால் எந்த ஒரு மாற்றத்திற்கும் துவக்கம் என்ற ஒன்று நிச்சயம் இருந்தே தீரும்.

விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை என்று கூறிக் கேள்விப் பட்டிருப்போம்.கணவன் மனைவி உறவிலும் அதுவே உண்மை.தனக்காகவும் தன் குடும்ப நிம்மதிக்காகவும் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் இருவரில் ஒருவர் விட்டுக் கொடுப்பதில் தவறில்லை.

அதே நேரம் ஒருவர் மட்டுமே விட்டுக் கொடுக்க மற்றவர் அதை தனக்கு சாதகமாகப் பயன்டுத்திக் கொண்டு இளைப்பாற நினைத்தால் அதுவும் ஆபத்தே.

இன்றைய காலகட்டத்தில்  மிகப் பெரிய கடமை குடும்பத் தலைவனும் தலைவியுமாய் ஒருசேர இணைந்து குடும்பத்தையும் தம் மக்களையும் நல்வழிப்டுத்துவதே.

அனைத்திற்கும் மேலாக உங்களைப் பார்த்தே உங்கள் மகன் மனைவியை  எப்படி நடத்த வேண்டும்,பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று கற்றுக் கொள்கிறான்.

உங்களைப் பார்த்தே உங்கள் பெண் கணவனையும் குடும்பத்தையும் வழிநடத்தும் பொறுப்பை அறிந்து கொள்கிறாள்.

ஆயிரம் அறிவுரைகளை கூறக் கேட்டு வளரும் பிள்ளைகளை விட நாம் வாழும் வாழ்க்கை முறையை பார்த்து கற்றுக் கொள்ளும் பிள்ளைகளே சிறந்து விளங்குவார்கள்.

உங்கள் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ  நீங்கள் அப்படியாய் வாழ்ந்து காட்டுங்கள்.நாட்டிற்குத் தேவையான சிறந்த குடிமக்கள் நம் ஒவ்வொருரின் வீட்டிலிருந்தே உருவாக்கப்படுகிறார்கள் என்பதை எப்போதும் மறவாமல் இருப்போம்.சமூக மாற்றம் என்பது ஒவ்வொரு வீட்டிலிருந்தே தொங்குகிறது. நம் பிள்ளைக்களுக்காக அவர்களைக் கொண்டே நல்லதொரு சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில் நமக்கான பங்கை திறம்படச் செய்வோம்.

Episode # 07

நிறைவுப் பெற்றது!

{kunena_discuss:1240}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.