(Reading time: 15 - 30 minutes)

தொடர்கதை - உன்னாலே நான் வாழ்கிறேன் - 07 - ஸ்ரீ

Unnaale naan vazhgiren

அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்

அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்

பந்தம் என்பது சிலந்தி வலை பாசம் என்பது பெரும் கவலை

சொந்தம் என்பது சந்தயடி இதில் சுற்றம் என்பது மந்தையடி

 

செக்கு மீது ஏரிகொண்டால் சிங்கபூரு போகுமா

சேர்ந்தவர்கே பாடுபட்டால் பெண்ணின் தேவை தீருமா

கொக்கைப்பார்த்து கற்றுகொள்ளு வாழ்க்கை என்ன என்பதை

கொத்தும் போது கொத்தி கொண்டு போக வேண்டும் நல்லதை ஃபடாஃபட்

றுநாள் காலையிலேயே ஸ்ரீகாந்தின் தாய் தந்தை தங்கையோடு வந்திருந்தனர்.குழந்தையை பார்த்து மகிழ்ந்து கொஞ்சிக் கொண்டு இருந்தவர்கள் ஏதோ பேச்சு வர ஸ்ரீகாந்தின் தாய் பட்டென மரகதத்திடம்,

ஆனாலும் சம்மந்தி எங்க குடும்பத்துலயே இதுதான் முதல் பெண் வாரிசு.எங்க எல்லாருக்குமே முதல் குழந்தை பையன்தான் பிறந்துருக்கு.அதுவும் போக எல்லாருக்குமே சுக பிரசவம் தான்.

ம்ம் என்ன பண்றது ஒவ்வொருத்தர் உடல்வாகு போல..வேலை வெளி சாப்பாடுனு உடம்பு போய்டுது..நானெல்லாம் அதனாலேயே என் பொண்ணுக்கு சத்தானதாதான் சமைச்சு கொடுக்குறேன்.”

இருந்த உடல் வலியில் அவர்களின் பேச்சு வேறு எரிச்சலை  வரவழைத்திருந்தது மதுவிற்கு.அவள் ஸ்ரீகாந்தை முறைக்க நிலைமை உணர்ந்தவனாய் குழந்தை பசியாறட்டும் என்று கூறி அவர்களை வெளியே அழைத்துச் சென்றான்.

மரகதம் குழந்தையை எடுத்து அவள் கையில் கொடுக்க அவரை வறுத்தெடுக்க ஆரம்பித்தாள்.

இப்போ இவங்களுக்கு என்ன பிரச்னையாம்.செத்து பொழச்சு வந்துருக்கேனேனு கொஞ்சமாவது கவலை இருக்கா..அவங்க பொண்ணை நல்லா கவனிச்சுக்குறாங்களாம்.அப்போ நீ என்னை ஒழுங்கா கவனிக்கலையா..

கடைசி நிமிஷம் சிசேரியன் ஆச்சுனா அதுக்கு நாம என்ன பண்ண முடியும்.இவங்க இப்போ என்னை பார்க்க வரலைனு கேட்டேனா..இருக்குற வலி இவங்க வேற.ஸ்ஸ் ஆ அம்மா பாரும்மா இவ ஒழுங்காவே ஃபீட் எடுக்க மாட்றா பல்லே இல்ல இப்படிகடிச்சு வைக்குறா வலிக்குதும்மா.ஸ்ட்ரிச்போட்ட இடத்தை வேற உதைச்சுட்டே இருக்கா..மொத்தமும் ரணம்..”,என்றவள் அழ ஆரம்பித்திருந்தாள்.

மது அம்மானா சும்மா இல்லடா எல்லாத்தையும் தாங்கித் தான் ஆகணும் கொஞ்சம் பொறுத்துக்கோ டா..டாக்டர் வரட்டும் என்ன பண்றதுனு கேக்கலாம்..”,என்றவர் சமாதானப் படுத்திவிட்டு பாத்ரூமிற்குள் சென்று கண்ணீர் வடித்தார்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

எத்தனை செல்லமாய் வளர்ந்த மகள் அத்தனையும் சாதாரணம் தான் என்றாலும் தன் மகள் படும் வேதனையை அவரால் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை.இருந்தும் அவள் முன் உடைந்து விட கூடாது என்று எண்ணியவறாய் தன்னை தேற்றிக் கொண்டு வெளியே வந்தார்.

டாக்டரிடம் பிரச்சனையை கூற பால் புகட்டும் போது உபயோகிக்க ஷீல்ட் ஒன்றை பரிந்துரை செய்தார்.அதில்லாமல் குழந்தை பால் அருந்தினால் இன்பெக்ஷன் ஆகிவிடும் என்றும் கூறினார்.முதல் ஒரு வாரத்திற்கு குழந்தைக்கு சரியாய் பால் அருந்த தெரியாது அதன்பின் சரி ஆகிவிடும் என்று கூறினார்.

கிடைத்த தனிமையில் ஸ்ரீகாந்திடம் அழ ஆரம்பித்திருந்தாள்.

ஸ்ரீகா முடில என்னால உன் பொண்ணு ரொம்ப படுத்துறா என்னை..”

அழாத மதும்மா..என்ன டீ இப்படி புண் ஆகிருக்கு..பேசாம பாட்டில் பால் கொடுக்கலாம்.இதெல்லாம் பார்த்தா பயமா இருக்கு டீ..”

இல்ல சிக்ஸ் மந்த்ஸ் வர ஒன்லி மதர் ஃபீட்னு தான் சொல்லிருக்காங்க..அதான் பாப்பாக்கு நல்லதாம்.”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிரேமாவின் "உன்னில் தொலைந்தவன் நானடி..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

என்ன நல்லதோ அதுகுள்ள நீ ஒரு வழி ஆகிடுவ போலயே..உடம்பை பாத்துக்கோ மது..”,என்றவன் அவளின் கன்னம் தாங்கிக் கொண்டான்.

ஒரு வாரம் கழித்து மது வீட்டிற்கு அழைத்து வரப்பட்டாள்.இரவும் பகலுமாய் ஒழுங்காய் பாலும் அருந்தாமல் கண்டநேரத்தில் குழந்தை அழ ஆரம்பித்திருந்தாள்.மரகதம் தான் பல நாட்கள் முழு இரவும்கூட விழித்திருந்து குழந்தையை பார்த்துக் கொண்டார்.

அவரது கவனிப்பில் வெகுவாய் உடல் தேறிவந்தாள் மதுமிதா.சிசேரியன் என்பதால் முப்பதாம் நாள் குழந்தைக்கு பெயர் சூட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.அதற்குள் இரண்டு மூன்று முறை போனில் பேசியபோது குடும்பப் பெயர் குலதெய்வப் பெயர் என குழந்தை பெயரைப் பற்றி ஆரம்பிக்க நியூமராலஜி படி தாங்களே பார்த்துவிட்டதாய்கூறி அத்தோடு பேச்சை முடித்துக் கொண்டாள்.

என்ன மது அம்மாகிட்ட பேரெல்லாம் நாமளே பாத்துக்குறோம்னு சொல்லிட்டியாம்?”

ஆமா சொன்னேன் பின்ன குழந்தை பிறந்த அன்னைக்கு பாத்துட்டு போனதோட சரி பத்தாததுக்கு ஆயிரம் பேச்சு வேற..இதுல பேர் மட்டும் இவங்க சொல்றதை வைக்கனுமா..பெத்துகிட்ட எனக்கு பேர் வைக்கத் தெரியாதா..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.